Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Monday, November 4, 2013

நோயுற்றோர் நலம்பெற செபம் -நோய் வேளை மன்றாட்டு

நோயுற்றோர் நலம்பெற செபம் 

இடைவிடா சகாய அன்னையே!
பனிமாதாவே இரக்கமுள்ள தாயே,
நோயுற்றோரின் பிணிகளை உம்
திருமகன் சுமந்துகொண்டார்;
தன்னை விசுவாசத்தோடு நாடி வந்தோர்க்கு நலமளித்தார்.
இதோ நோயுற்றிருக்கும் எங்களை (பெயர்களை சொல்லவும்) கண்நோக்கியருள்ளும்.
எங்களுடைய பாவங்களையும் பலவீனத்தையும் பாராமல்,
திருசபையோரின் விசுவாசத்தையும் கண்ணுற்று
எங்களுக்கு நலமளிக்க இறைவனை மன்றாடும்.
நாங்கள் பிணிகளை ஏற்ப்பது இறைவனின்
திருவுளமானால் புருமையுடனும்,
மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொள்ள மனவுறுதியை பெர்றுதாரும்.
நோயில் நாங்கள் துவளும் போதும் உம்மைப்போலவே 'இதோ உமது அடிமை,
உமது வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்'
என்று இன்முகத்தோடு கூறி ஏற்றுக்கொள்ள
இறைவனிடமிருந்து வரங்களை பெற்றுத் தந்தருளும். - ஆமென்.

நோய் வேளை மன்றாட்டு

இரக்கமுள்ள குழந்தை இயேசுவே !
நோயாளிகளுக்கு நீர் காட்டிய
கருணை எனக்குத் தெரியும் .
இவ்வுலகிலே நீர் வாழ்ந்த போது,
நோயாளிகளையும், அங்கம் குறைந்தவர்களையும்
தீராத நோயால் துன்புற்றோரையும்,
உமது கனிவான கரத்தால் தொட்டு குணமாக்கினீர் .
 
இன்று இந்த உமது திருச்சுரூபத்தை
நாடி வரும் ஆயிரமாயிரக்கணக்கான பக்தர்கள் கொடூரமான,
படு மோசமான நோய்களிலிருந்து உம்மால்
தான் அற்புதமாகக் குணமடைந்துள்ளதாக கூறுகின்றனர் .
குழந்தை இயேசுவே ! நான் ஒரு பாவி :
துன்பங்களை அனுபவிக்க வேண்டியவன் :
உமது கருணையைப் பெற உரிமையே இல்லாதவன் என்று எனக்குத் தெரியும் .
என்றாலும் எண்ணற்ற வரங்களையும்,
நோய்களை நீக்கும் அற்புத குணங்களையும்,
மாபெரும் பாவிகளுக்குக்கூட நீர்
மனம் இரங்கி அளித்து வருகின்றீர் .
ஆகையால் என்னையும் நீர் குணமாக்க
முடியும் என்று இன்னும் அதிகமாக நான் நம்புகிறேன் .
வானக மருத்துவரே !
இந்த . . . நோயினின்று (நோயை குறிப்பிடுக )
நான் குணமடைய வேண்டும் என்பதற்காக
, உமது திருக்கரத்தால் என்னை ஆசீர்வதியும் .
எல்லா நோயையும், வலியையும் நீக்கி குணமாக்கியருளும் .
பெற்ற குணத்திற்கும் மூலகாரணம்
மருந்தல்ல் எல்லாம் வல்ல உமது தெய்வீக
ஆற்றல் என்பது எல்லோருக்கும்
புலனாகும்படி எனக்கு சுகமளித்தருளும் .
 
ஆய்ந்தறிய முடியாத உமது ஞானத்திற்கேற்ப
எந்த நிலையிலும் உமது திருச்சித்தப்படியே
எனக்கு ஆகட்டும் .
ஆன்ம நலனையும் அடியேனுக்கு அளித்தருளும் .
இந்நோயால் நான் துன்புறுகையில்,
உமது ஆறுதலின் இனிய அமுதம் என்மேல் வழிந்தோடட்டும் .
இவ்வுலகத் துன்பமெல்லாம் கொஞ்ச
நாளுக்குத்தான் என்ற உயரிய உண்மை
என் உள்ளத்தை நிரப்பட்டும் .
அன்பும், இரக்கமும் உள்ள குழந்தை இயேசுவே !
துன்பங்களைத் திடமனத்துடன் சகித்துக் கொள்ளவும்,
உமது திருவுளத்திற்குப் பணிந்து நடக்கவும் எனக்கு வரம்தாரும் .
ஓ ! இயேசுவே, என்னை ஆசீர்வதியும்
நோயால் படுக்கையாகி விட்டாலும்,
நித்திய வாழ்வை நீர் எனக்கு வழங்கும் .
உமது பேரன்பை நான் போற்றிப் புகழ அருள் தாரும் . - ஆமென்

1 comment:

  1. yno amma name L.Anbumani avgalluku kansar avgalluku yena vithiyam painallum kunam agalla neega thayahu sethu yenoda amma va kapathunga avagallukaka jabam painuga plz yenoda amma yenaku veenu neega yeilarum manasu vecha nadakum yenga amma kaga yenoda god keta neegallu konjam kelluga na solle kekalla plz neega keluga KELLUNGAL KODUKAPADUM ,THATUGAL THIRAKAPADU keta kedikella atha thati paku sollura PLZ

    ReplyDelete

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.