Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

யார் நம்மோடு? -Yaar Nammodu?


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 செப்டம்பர் மாதம் 11-ம் தேதி - ஞாயிற்று கிழமை
யார் நம்மோடு?
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். - (மத்தேயு 28:20) .

ஆமென்! யார் நம்மோடு கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரி நம் இயேசுகிறிஸ்து “முடிவுபரியந்தம் உங்களோடு கூட இருக்கிறேன்’’ என்று வாக்களித்தவர் நம்மோடு கூட என்றும் இருக்கிறார். அல்லேலூயா! எவ்வளவு மகிழ்ச்சியான செய்தி இது!
ஒரு வயதான தாயர் இங்கிலாந்தில் ஒரு சிறிய பட்டணத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவை அதிகம் நேசித்ததால், எப்போதும் தாம் சந்திக்கிறவர்களுக்கெல்லாம் அவரின் அன்பைக் குறித்து கூறுவார்கள். அவர் வீட்டின் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை அதற்காக கேலியும் கிண்டலும் செய்வார்கள்.
ஒருமுறை இங்கிலாந்தின் மகாராணி விக்டோரியா அவர்கள் அந்த மூதாட்டியின் வீட்டிற்கு வந்து சற்று நேரம் பேசிவிட்டு போனார்கள். அதுவே அந்த தெருவின் பேச்சாக இருந்தது. கிண்டல் செய்பவர்களில் சிலர் வந்து, “உங்கள் வீட்டிற்கு வந்து சென்ற மிகவும் மரியாதைக்குரிய முக்கிய விருந்தினர் யார்? ” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மூதாட்டி “மகாராணி விக்டோரியா” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள் ‘ஓ! நீங்கள் எப்போதும் இயேசுகிறிஸ்துவைக் குறித்து சொல்வீர்களே, இப்போது மட்டும் அவர் எப்படி மிகவும் முக்கிய விருந்தினராக இல்லாமற் போய் விட்டார்?” என்று ஏளனமாக கேட்டனர். அதற்கு அந்த மூதாட்டி, “ஆம் ராணியார்தான் என் விருந்தினர். ஆனால் இயேசுகிறிஸ்து என் விருந்தினரல்ல, அவர் என்னோடு எப்போதும் இருக்கிறார் ” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார்கள். கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்கள்.
பிரியமானவர்களே! நாம் கிறிஸ்துவை ஒரு விருந்தினராக வைத்திருக்கிறோமா? இல்லாவிட்டால் நம்மோடு கூட எப்போதும் இருப்பவராக நம் இல்லத்தின், உள்ளத்தின் தலைவராக வைத்திருக்கிறோமா? இல்லாவிட்டால் இன்றே நம் உள்ளத்திற்குள் அவரை அழைப்போம்.
சர்வ வல்லவர் என் சொந்தமானார்

சாவை வென்றவர் என் எஜமானன்

ஜெபம்
எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்கள் இல்லத்தின் உள்ளத்தின் தலைவராக எப்போதும் இருப்பீராக. உலகத்தின் முடிவுபரியந்தம் எங்களோடுகூட நீர் இருப்பதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.