Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

வீணான வார்த்தைகள் -Venaana vaarthaigal


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 செப்டம்பர் மாதம் 09-ம் தேதி - வெள்ளி கிழமை
வீணான வார்த்தைகள்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 12:36).

வயதான தாத்தா ஒருவர் தனது பேரனுடன் ஞாயிற்று கிழமை ஆலய ஆராதனைக்கு சென்றார். எப்பொழுதம் யாரையாவது குறை பேசியே பழகி போன தாத்தாவின் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்தன. பார்வை உட்கார்ந்திருந்த பெஞ்சின் மீது பட்டது. 'சே, சே உதவாத பெஞ்ச் அங்குமிங்கும் அசைந்து கொண்டே இருக்கிறது. யாராவது இதை சரி செய்கிறார்களோ, கமிட்டி என்னதான் செய்கிறதோ' என்று சலித்து கொண்டார். இந்நிலையில் பாடல் ஆரம்பமானது. தாத்தா பாடற்குழுவினரையும் இசைக்கருவி வாசிப்போரையும் மாறிமாறி பார்த்து கொண்டு, பாடல் ஒரு ராகம், இசை இன்னொரு ராகம் என்று கொஞ்சம் சத்தமாகவே புலம்பி கொண்டார். அருகிலிருந்தோர் இவரை பார்த்தாலும் தாத்தா கண்டு கொள்ளவில்லை. அப்போது திடீரென்று கரண்ட போய் விட்டது. ஆலயத்தில் ஜெனரேட்டர் இல்லை. 'என்ன சபை இது! ஒரு ஜெனரேட்டர் வாங்க முடியவில்லையே' என்று கூறி கொண்டிருக்கும்போதே கரண்ட் வந்து விட்டது.
என்ன பரிதாபம்! தாத்தாவின் தலைக்கு மேலிருந்த ஃபேன் மட்டும் சுற்றவில்லை. சொல்லவா வேண்டும்? ஆராதனையில் தாத்தா இருந்த இரண்டு மணி நேரத்தில் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. இறுதியில் போதகரின் பிரசங்கத்தையும் குறைகூறி கொண்டு வெளியே வந்த தாத்தா தனது பேரனிடம் 'என்ன சபை இது? ஒழுங்கான பெஞ்ச இல்லை, ஃபேன் ஓடவில்லை, ஒற்றடை அடிக்கவில்லை, அவசரத்திற்கு ஜெனரேட்டர் இல்லை' என்று மூச்சு விடாமல் பேசிய தாத்தாவை பார்த்த பேரன், 'நீங்கள் போட்ட ஒரு ரூபாய் காணிக்கைக்கு ஒரு இலட்ச ரூபாய்க்குரிய குறையை சொல்லாதீர்கள்' என்று அமைதியாக பேசிய பேரனை தாத்தா ஆச்சரியத்துடன பார்த்தார்.
மேலே கூறப்பட்ட சம்பவம் வேடிக்கையாக தோன்றினாலும், நம்முடைய சுபாவமும் சில நேரங்களில் இவ்வாறே காணப்படுகிறது. தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து, தம்முடைய கிருபையினால் தமது இரத்தத்தை கிரயமாக கொடுத்து, நம்மை இரட்சித்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, நாம் மற்றவர்களுடைய சிறு சிறு குறைவுகளை மன்னித்து, அவர்களை ஆசீர்வதிக்கவே அழைக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களை அற்பமாய் எண்ணுதல் தேவனுடைய பிள்ளையின் குணமல்ல, மற்றவாகளின் குறைகளை குறை சொலல்லி திரிகிறவர்களையல்ல, பிறரை தங்களைவிட மேன்மையாக எண்ணி உண்மையாக நேசிப்பவர்கள்களையே தேவன் விரும்புகிறார். உண்மையில் மற்றவர்களுடைய குறைவுகள் நமக்கு தெரியுமானால் சகோதர அன்போடு, தகப்பனுடைய சிந்தையோடு அவர்களுக்காக ஜெபித்து குறைவுகளை சரிசெய்ய உதவ வேண்டும். மற்றவர்களிடம் அவர்களை குறித்து ஏளனமாக பேசி காரியங்களை வெளிப்படுத்த கூடாது.
தேவன் பேசும் வாய்ப்பை நமக்கு மாத்திரமே கொடுத்திருக்கிறார். அதை நல்ல முறையில் பயன்படுத்தி சோர்ந்து போய் இருக்கிறவர்களை நம்முடைய உற்சாகப்படுத்தும் வார்த்தைகளால் உற்சாகப்படுத்தலாமே! செய்யகூடிய காரியங்களை செய்ய முடியாதவர்களுக்கு ஆலோசனைகளினால் உதவலாமே, இப்படியாக அநேக காரியங்கள் செய்ய வேண்டியதிருக்க இப்படி குறை சொல்லி, வார்த்தைகளை வீணாக்க வேண்டாம்.
சிலருக்கு ஏதாவது ஒரு இரகசியம் மற்றவர்களை குறித்து தெரிந்து விட்டால் போதும், உடனே மற்றவர்களுக்கு அதை வெளிப்படுத்தி, அவர்களை குறித்து நார் நாராக பேசி கிழிக்காவிட்டால் தூக்கமே வராது!
மற்றவர்களை குறித்த அநேக காரியங்களை தேவன் நமது செவிகள்பட அனுமதிப்பது அவர்களுக்காக ஜெபிக்கவே. நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாவிட்டால் செய்ய கூடாத காரியங்களையே செய்வோம். பேச வேண்டிவைகளை பேசாவிட்டால், பேச கூடாதவைகளையே பேசுவோம். அந்தரங்கத்தில் தேவனிடத்தில் நாம் கூறுகிற நம் பாவக்காரியங்களை தேவன் வெளிப்படையாக அறிவித்தால் நம் நிலைமை என்னவாகும்? தேவன் நம்மேல் அன்புள்ளவராயிருக்கிறார். ஆகவே அதைபோல அவருடைய பிள்ளைகளாகிய நாமும் பிறரது தவறுகளை, குறைகளை வெளிப்படுத்தி, அவர்களை அவமானப்படுத்தாமல் அன்பான வார்த்தைகளால் மற்றவர்களை ஆதாயம் செய்வோம். ஆமென் அல்லேலூயா!
இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்
..
ஆராதனை ஆராதனை
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் பேசும் வீணாண ஒவ்வொரு வார்த்தைகளை குறித்தும் நாங்கள் கணக்கொப்புவிக்க வேண்டி இருப்பதால், வார்த்தைகளை ஜாக்கிரதையாய் பேச கிருபை செய்யும். வீணாக மற்றவர்களின் இரகசியங்களை தூற்றி திரியாமல், அவர்களுக்காக ஜெபிக்கவும், அவர்களுடைய பெலவீனங்களில் அவர்களுக்கு உதவவும் கிருபை செய்யும். எங்கள் வார்த்தைகள் மற்றவர்களுடைய காயங்களை ஆற்ற வேண்டுமே, மற்றவர்களுடைய துயரை தீர்க்க வேண்டுமே தகப்பனே, அப்படிப்பட்டதான வார்த்தைகளையே பேச உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் ஜெபத்தை கேட்கிற நல்ல தகப்பனே, நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன் என்று சொன்னீரே, இப்போதும் நாங்கள் கேட்கும் விண்ணப்பங்களுக்கு உம்முடைய செவிகள் திறந்திருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். சகோதரன் விஜயக்குமாரின் மனநிலை இன்னும் சரியாகாமல், அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து கொண்டு இருக்கிற படியால், அவருடைய மனநிலையை கெடுக்கும் எந்தவித அசுத்த ஆவிகளையும் இயேசுகிறிஸ்துவின் மகா வல்லமையுள்ள நாமத்தில் துரத்துகிறோம் தகப்பனே. அவர் பரிபூரண சுகத்தை பெற்று கொள்ள ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் இம்மானுவேலின் வயதான பெற்றோருக்காக ஜெபிக்கிறோம். பாதுகாத்து கொள்வீராக. நல்ல சுகத்தையும் பெலனையும் கொடுப்பீராக அவருடைய மகனின் திருமணத்திற்காக ஜெபிக்கிறோம். நல்ல இரட்சிக்கப்பட்ட ஏற்ற துணையை அவருக்கு கொடுத்து ஆசீர்வதிப்பீராக. அவருடைய இரண்டாவது மகனுக்கு படிப்புக்கேற்ற நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிப்பீராக. அவருடைய மனதில் காணப்படும் எல்லா ஏக்கங்களையும் அறிகிற தேவன், அவருக்கு சமாதானத்தை கொடும். சுந்தோஷத்தை கொடும். தன்னுடைய பாரங்களை உம்முடைய சமுகத்தில் வைத்துவிட்டு, சமாதானமாய் வாழ கிருபை செய்யும்.
..
சகோதரன் டென்சியன் அவர்களின் பேரன் குருஸ் கால்வினுக்கு தேவன் கொடுத்த சுகத்திற்காக ஸ்தோத்திரம். அவனுடைய நினைவாற்றல் திரும்ப அவனுக்கு கிடைக்கும்படியாக ஜெபிக்கிறோம். தேவரீர் இரங்கி, அவனுக்கு பெரிய அதிசயத்தை செய்வீராக.
..
சகோதரி ஹரிணியின் கணவர் இரட்சிக்கப்பட ஏற்கனவே ஜெபித்திருக்கிறோம். தேவரீர் அந்த குடும்பத்திற்கு நன்மை செய்வீராக. ஆசாரிய பிராமண குடும்பத்திலிருந்து அந்த சகோதரி உம்மை ஏற்று கொண்டது போல, அவர்களது கணவரும் கிறிஸ்துவை ஏற்று கொள்ள கிருபை செய்வீராக.
..
சகோதரி டியூயன் (Duane) அவர்களின் சகோதரன் டேனியல் MBAமுடித்திருப்பதால் அவருக்கு அவருடைய படிப்பிற்கேற்ற வேலை இல்லாதபடி இருப்பதால், தேவரீர் இரங்கி அவருக்கு ஒரு நல்ல வேலையை கட்டளையிடுவீராக. அவருக்கு ஏற்ற துணையை கர்த்தருக்கு பயந்த இரட்சிக்கப்பட்ட சகோதரியை அவருக்கு கொடுப்பீராக.
..
சகோதரன் மணிகண்டன் அவர்கள் இன்று L&T கம்பெனியில் இன்டர்வியூவிற்கு போக இருப்பதால், அவருக்கு அதிகாரிகள் கண்களில் தயவு கிடைத்து, அந்த வேலை கிடைக்க கிருபை செய்வீராக.
..
சகோதரன் ஜெபராஜ் கஜேந்திரன் அவர்களுக்கு இன்னும் கம்பெனியில் ரிலீஸ் கொடுக்காமல் இருப்பதால், அவர் புதிய வேலையில் சேர முடியாமல் இருக்கிற நிலைமையை காண்கிற தேவனே, அவருக்கு இரங்கி, அந்த மேலதிகாரிகள் சீக்கிரமாய் ரிலீஸ் கிடைக்க கிருபை செய்வீராக. அவரது இருதய வாஞ்சைகளை நிறைவேற்றுவீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.