Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

தசமபாகம் - Thasamapaagam


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 செப்டம்பர் மாதம் 29-ம் தேதி - வியாழக் கிழமை
தசமபாகம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். - (மல்கியா 3:10).


ஒரு முறை ஒரு வாலிபன் தன் போதகரிடம் தேவன் தனக்கு ஒரு வேலை தந்தால் தனக்கு வரும் சம்பாத்தியத்தில் எல்லாம் தசமபாகம் தருவதாக பொருத்தனை பண்ணிக் கொண்டான். அதன்படி அவனுக்கு வேலை கிடைத்து முதல் வாரம் பத்து ரூபாய் சம்பளத்தின்படி 1 ரூபாய் தசமபாகம் தந்தான். அடுத்த வாரம் 7 ரூபாய் கொடுத்தான். ஒரு மாதத்தில் 10 ரூபாய் கொடுத்தான் அடுத்த மாதம் அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்து, 100 ரூபாய் கொடுத்தான் இப்படி படிப்படியாக முன்னேறி 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டி வந்தது. அப்போது தனது போதகருக்கு போன் பண்ணி, ‘வாருங்கள் நான் உங்களிடம் பேச வேண்டும்’ என்று அழைத்தான். அவர் வந்தபோது, ‘நான் உங்களோடு ஜெபித்த போது; தசமபாகம்கொடுப்பதாக பொருத்தனை பண்ணினேன்’. அதிலிருந்து எப்படி மீள்வது? என்றுக் கேட்டான். அதற்கு போதகர் ‘எதற்கு மீள வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘நான் முதலில் 1 ருபாய் கொடுத்தேன். பின் 10 ரூபாய் கொடுத்தேன் அது சரி, இப்போதோ 500 ரூபாய்கள் கொடுக்க வேண்டியுள்ளது. எனக்கு இப்படிக் கொடுத்து கட்டுப்படியாகாது’ என்று கூறினான்.
அதற்கு போதகர், ‘ஒரு முறை பொருத்தனை பண்ணினால் அதை விடுவது ஆபத்தானது. வேண்டுமென்றால் நாம் ஒன்று செய்யலாம், கர்த்தரை மீண்டும் உன்னை பழைய நிலைக்கே கொண்டுபோய் விடச் சொல்லலாம்’ என்றார். அந்த வாலிபன் வாயடைத்து நின்றான்.
தசமபாகம் கொடுப்பதில் நாம் எப்படி இருக்கிறோம்? கர்த்தருக்கு உண்மையாக இருக்கிறோமா? சிலருக்கு வெளிநாடுகளில் சம்பாதித்து அப்படியே கை நிறைய பணம் போகிறதே என்கிற கவலை. இத்தனைக்கும் அவர்கள் கொடுப்பது பத்தில் ஒரு பங்குதான். என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். கடனே வாங்காமல் எல்லா ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க தேவன் கிருபை செய்திருக்கிறார். பண விஷயத்தில் மாத்திரம் அல்ல, உடல் சுகம் மற்றும் எல்லா வித்திலும் கர்த்தருடைய ஆசீர்வாதத்தைக் காண முடிகிறது. தசமபாகம் கொடுப்பதின் மூலம் கிடைக்கும் ஏழு மடங்கு ஆசீர்வாதத்தைக் குறித்து கீழ்க்கண்டவாறு காணலாம்:
1. நமது இருதயத்தை கர்த்தருடைய சித்தத்தை செய்யும்படி ஆசீர்வதிக்கிறது.
2. நமது வாழ்க்கையை தேவகிருபையினால் நாம் எண்ண முடியாத உயரத்திற்கு கொண்டு வருகிறது.
3. நமது கைகளை கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்கு தயாராக்குகிறது.
4. நமது சிந்தனையில் கர்த்தருக்கென்று சரியான காரியத்தைச் செய்தோம் என்கிற திருப்தியை தருகிறது.
5. கர்த்தரை கனப்படுத்தியதால் மீதமிருக்கிற ஒன்பது பகுதிகளும் நமக்கு ஆசீர்வாதமாக்கப்படுகிறது.
6. தனிப்பட்ட ஊழியருக்கு தங்களுடைய ஊழியத்தை தடையின்று நடத்தப்பட ஆசீர்வாதமாகிறது.
7. சபையானது இன்னும் அதிக அளவில் கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்ற உதவுகிறது.
இப்படி ஆசீர்வாதங்களைப் பெற காரணமாயிருக்கிற தசமபாகத்தை கர்த்தருக்கு தொடர்ந்து செலுத்துவோம். கர்த்தர் இதன் மூலம் கனப்படுகிறார். நம்மை ஆசீர்வதிப்பார்.
குறிப்பு :
அன்பு நண்பர்களே! ஒரு சிலர் எங்களிடம் கர்த்தருடைய இந்த வார்த்தைகளை தங்களுடைய வெப்சைட்டில் உபயோகிக்க கேட்டு கொண்டுள்ளனர். யார் வேண்டுமானாலும் தங்கள் வெப்சைட்டிலோ தங்களுடைய புத்தகங்களிலோ உபயோகிக்கலாம். ஆனால் இறுதியில் அனுதின மன்னாவின் மின்னஞ்சலை குறிப்பிடும்படி கேட்டு கொள்கிறோம். (anudhinamanna@gmail.com (or) Source : http://www.anudhinamanna.net ). இந்த ஊழியத்திற்காக உங்களுடைய மேலான ஜெபத்தையே நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். எந்தவித தடையுமில்லாமல் கர்த்தருடைய வார்த்தைகள் வெளிவரும்படியாக தினமும் இதற்காக ஜெபித்து கொள்ளுங்கள். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

ஜெபம்
எங்கள் அன்பின் பரம பிதாவே, எங்களுடைய தசமபாகத்தை உமக்கு தடையின்றி கொடுக்க எங்கள் இருதயங்களை ஏவியருளும். அவற்றை உமது நாம் மகிமைக்காக பயன்படுத்தும். இதன்மூலம் நீர் வானத்தின் பலகணிகளைத் திறந்து இடங்கொள்ளாமற் போகுமட்டும் எங்களை ஆசீவதிப்பதற்காக நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்கள் ஜெபத்தை கேட்பவரே, இந்த வேளையிலும் சகோதரன் நந்தகுமார் அவர்களுக்கு இருந்த நெஞ்சு வலியிலிருந்து தேவரீர் கொடுத்த சுகத்திற்காக உமக்கு நன்றி. அவருக்கு இருக்கிற இடது பக்க தோள் வலியிலிருந்தும் பரிபூரண சுகத்தை கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் ஜெய்சன் சாமுவேல் அவர்களின் மூத்த சகோதரன்,கர்த்தருக்குள் வளர்க்கப்பட்ட அவர், சூழ்நிலையின் காரணமாக, துர்உபதேசங்களுக்கு செவி கொடுத்து, யெகோவா விட்னஸ் அவர்களுடன் சேர்ந்து விட்டதாக எழுதியிருக்கிறாரே, இந்த கடைசி நாட்களில் சாத்தானின் வஞ்சக வலைக்குள் அவர் விழுந்து போய், கர்த்தரை விட்டு பின்வாங்கி போய் விடாதபடி, ஆதியில் கொண்டிருந்த விசுவாசத்திற்கு திரும்பவும் வரும்படியாக ஜெபிக்கிறோம். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவராகிய திரித்துவ தேவனையே பற்றி கொண்டு, உண்மையான சத்தியத்திற்குள் வந்து விட கிருபை செய்வீராக.
..
சகோதரன் யுவராஜ் கணேசனுக்கு ஏற்ற வேளையில் குழந்தை பாக்கியத்தை கொடுத்து தேவன் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் குருபிரசாத் அவர்களின் சகோதரன் சத்யபிரசாத் 23 வயதுடைய அவர் விபத்தில் சிக்கி, ஆபரேஷனும் செய்யப்பட்டும், அவருக்கு நினைவு திரும்பாமல் இருப்பதால், அதினிமித்தம் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள ஆறுதலற்ற நிலைமையையும், குடும்பம் தவிக்கிறதையும் காண்கிற தேவனே, அவருக்கு அதிசயவிதமாக சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லையே, தேவன் அன்று நாயினூர் விதவையின் மரித்திருந்த வாலிப மகனின் பாடையை தொட்டு, அவனை உயிரோடு எழுப்பினவர், இந்த நாளிலும், நினைவுகளை இழந்து படுத்த படுக்கையாய் இருக்கும் சத்யபிரசாத்தை தொட்டு சுகப்படுத்தும் தகப்பனே. உம்மையே நாங்கள் நோக்கி பார்க்கிறோம். தேவரீர் கிருபையாய் இரங்குவீராக. சுகத்தை தருவீராக.
..
சகோதரன் ஜான்சன் எபிநேசர் தினந்தோறும் 150 கிலோ மீட்டர் பயணம் செய்து தன் வேலைக்கு சென்று கொண்டிருப்பதால், அவர் சென்னையிலேயே ஒரு கம்பெனியில் (வீல்ஸ் இந்தியா லிமிடெட்) சென்ற வாரம் கலந்து கொண்ட இன்டர்வியூவில் நல்ல ஒரு பதில் கிடைக்கும்படியாக ஜெபிக்கிறோம். உம்முடைய சித்தத்தின்படி அவருக்கு அந்த வேலை கிடைக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் சங்கமையா பாபுவின் குடும்பத்திற்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, அவருடைய குடும்பத்தை ஆசீர்வதிப்பீராக. அந்த குடும்பத்தில் எந்த பிரச்சனை இருந்தாலும், தேவரீர் தாமே அவற்றை நீக்கி, அந்த குடும்பம் சந்தோஷமாக வாழும்படியாக கிருபை செய்யும். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.