Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

தகப்பனின் வாக்கு - Thagapanin vaakku


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 12-ம் தேதி - புதன் கிழமை
தகப்பனின் வாக்கு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். – யோவான் - 16:33.


1989-ம் ஆண்டு ஆர்மேனியா (Armenia) தேசத்தில் நடந்த நான்கு நிமிடத்திற்கும் குறைவான பூமி அதிர்ச்சியில் (ரிட்சர் ஸ்கேலில் 8.2) – (Richter Scale) ஏறக்குறைய 30,000 மக்கள் கொல்லப்பட்டனர். அப்போது அங்கு இருந்த நிலைமையை சற்று சிந்தித்துப் பார்த்தால் தெரியும், எவ்வளவு பரிதாபமான நிலைமை என்று. எங்கு பார்த்தாலும் ஓலங்களும், தங்களுக்குரியவர்களை இழக்க கொடுத்த துயரத்தில் அழுகைகளும், உயிரோடு இருப்பவர்களை தேடிக் கொண்டிருந்த உறவினர்களும் என்று ஒரே துயரமான சூழ்நிலை. அதில் ஒரு தகப்பன் தன் மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளியை நோக்கி விரைந்தார். அங்கு பள்ளிக்கு பதிலாக அந்த இடத்தில் இடிபாடுகளோடுகூட கல்லும் மண்ணும் குவியலாக இருந்தது. அதைப் பார்த்த தகப்பனுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மற்ற பெற்றோர் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியபடி தங்களது பிள்ளைகளின் பெயர்களை கூப்பிட்டுக் கொண்டே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்தத் தகப்பனோ தனது மகன் படித்துக் கொண்டிருந்த வகுப்பு இருந்த இடத்தை தேடி கண்டுபிடித்து, அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தார். அவர் தன் மகனிடம் சொல்லியிருந்தார், தான் எப்போதும் தன் மகனுடன் இருப்பேன் என்றும் அவனுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் வாக்கு பண்ணியிருந்தார்.
.
அவர் தோண்ட ஆரம்பித்தபோது, மற்ற பெற்றோர், ‘கால தாமதமாகிவிட்டது, எல்லாரும் மரித்து விட்டனர், இனி ஒரு பிரயோஜனமில்லை’ என்றுக் கூறி அவரை தடுத்தனர். அவரோ விடாமல் தோண்ட ஆரம்பித்தார். தீயணைப்பு படையினர் வந்து ‘எங்கும் தீ பற்றி எரிந்து, வெடிக்கிறது, நீங்கள் எது செய்தும் பிரயோஜனமில்லை வீட்டுக்கு போய் விடுங்கள்’ என்று கூறி அவரை எச்சரித்தனர். அவரோ விடாப்பிடியாக தோண்டிக் கொண்டே இருந்தார். கடைசியாக போலீஸ் படையினர் வந்து ‘உங்கள் வேதனை எங்களுக்குப் புரிகிறது. இப்போது எந்தப் பயனும் இல்லை, போய் விடுங்கள்’ என்று அவரை அந்த இடத்திலிருந்து இழுத்தனர். அவரோ தன் மகன்மேல் கொண்டிருந்த அன்பினால் தொடர்ந்து தோண்டிக் கொண்டே இருந்தார். 8மணி நேரம்.. 12.. 24.. 34 மணிநேரம் தொடர்ந்து ஓயாமல் தோண்டிக் கொண்டே இருந்தார். 38ஆவது மணி நேரத்தில் அவரது மகன் உதவிக்கு அழைக்கும் அழுகுரல் அவருக்கு கேட்டது. உடனே ‘ஆர்மண்ட்’ (Armond) என்று உரத்த சத்தமாக கூப்பிட்டு பார்த்தார். உடனே மகன், ‘அப்பா நீங்களா! எனக்குத் தெரியும் என் நண்பர்களிடம் சொல்லியிருந்தேன், என் தகப்பன் உயிரோடு இருந்தால் என்னைக் காப்பாற்ற எப்படியும் வருவார் என்று, என் நம்பிக்கை வீண் போகவில்லை’ என்று மிகுந்த சந்தோஷத்துடன் இடிபாடுகளின் மத்தியிலிருந்து பத்திரமாக தன் நண்பர்களுடன் மீட்டெடுக்கப்பட்டான்.
.
ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் மகனுக்கு கொடுத்த வாக்குக்காக போராடி தன் மகனை மீட்டெடுக்க முடியுமென்றால் நம் பரம தகப்பன் நமக்கு வாக்கு பண்ணியிருக்கிறார், உலகத்தின் முடிவு பரியந்தம் நான உங்களுடனேகூட இருக்கிறேன் என்று. அவர் வாக்கு மாறாதவர். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கல்லும் மண்ணும் எது? கடன் என்னும் கல்லா? பாவகட்டுகள் என்னும் கல்லா? குற்ற உணர்ச்சி என்னும் கல்லா? பிரச்சனைகள் என்னும் கல்லா மண்ணா? எந்தக்கல்லையும் புரட்டித் தள்ளி விடுவிக்க தேவன் வல்லவராகவே இருக்கிறார். 2000 வருடங்களுக்கு முன்பு இயேசுகிறிஸ்துவின் கல்லறையை மூடியிருந்த கல்லை புரட்டித் தள்ளி, அவரை உயிரோடு எழுப்பின தேவன் இன்றும் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் கற்களை மாற்றி உங்களை விடுவிக்கவும், தமது வாக்குதத்தங்களை நிறைவேற்றவும் அவர் வல்லவராகவே இருக்கிறார். அவரது வாக்குதத்தங்களை பற்றிக் கொண்டு அதை உரிமைக் கொளவோம். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். நமது பிரச்சனைகளாகிய கற்களிலிருந்து விடுபட்டு வெளியே விடுதலையோடு வருவோம். ஆமென் அல்லேலூயா!
.
மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
கன்மலையாம் கிறிஸ்து
கைவிடவே மாட்டார்

ஜெபம்
எங்களை நேசிக்கிற எங்கள் அன்பின் பரம தகப்பனே, வேதத்தில் நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொரு வாக்குதத்தங்களுக்காகவும் ஸ்தோத்திரம். அவைகளை உரிமை பாராட்டி எங்கள் வாழ்க்கையில் வெற்றிக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். உலகத்தின் முடிவு பரியந்தம் எங்களோடு இருப்பவரே உம்மையே நாங்கள் துதிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்களை நேசித்து வழிநடத்துகிற நல்ல தகப்பனே, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்று வாக்குதத்தம் செய்தவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
..
இப்போதும் சகோதரி பெமினா ஜேஸ்பர் அவர்களின் திருமணம் கடந்த மே மாதம் 27ம் தேதி நடக்க இருந்து, நின்று போனதையும், அதற்காக நாங்க்ள ஜெபித்ததையும் தேவன் அறிந்திருக்கிறீர். இப்போதும் அதே திருமணம் வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடக்க இருப்பதால், தேவரீர் அந்த திருமண வைபவத்தை ஆசீர்வதிக்கும்படியாகவும், எந்த தடையுமின்றி அந்த திருமணம் நடைபெறும்படியாகவும், திருமணத்தின் தேவைகள் எல்லாம் சரியானபடி சந்திக்கப்படவும் ஜெபிக்கிறோம். அவர்களின் வாழ்வு ஆசீர்வாதமானதாக இருக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் பிரதீப் அவர்கள் இரத்த சம்பந்தமான வியாதியால் பாடுபடுவதை அறிந்த தேவனே, அவரை குணமாக்குவீராக. கடந்த நான்கு வருடங்களாக இரவெல்லாம் தூங்க முடியாமல், அவதிப்படுவதை காண்கிற தேவனே அவருக்கு இரங்குவீராக. அவரை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். எந்த வியாதியாயிருந்தாலும் நீர் அவருக்கு சகத்தை கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி ஸ்டெல்லா கிரேசி அவர்களின் குடும்பம் இரட்சிக்கப்பட கிருபை செய்வீராக. அவருக்கு இரட்சிக்கப்பட்ட ஒருவர் கணவராக கிடைக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவருக்கு பேங்கில் இருக்கும் எல்லா கடன்களும் அடையப்படும்படியாக ஜெபிக்கிறோம். தேவைகளை எல்லாம் சந்தித்து, உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
..
சகோதரன் டேவிட் ஜெயராஜ் அவர்களின் நாத்தனாரின் மகளுக்கு ஒரு நல்ல கணவர் கிடைக்கும்படியாக நாங்கள் ஏற்கனவே ஜெபித்திருந்தோம். தேவன் எங்கள் ஜெபத்தை கேட்டு, அவர்களுக்கு ஒரு நல்ல வரன் அமையும்படியாக கிருபை செய்தீரே உமக்கு ஸ்தோத்திரம். டிசம்பர் மாதம் 28ம் தேதி நடக்க இருக்கிற அந்த திருமண வைபவத்தையும் தேவரீர் ஆசீர்வதித்து, எல்லா தேவைகளையும் சந்தித்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.அவர்கள் இருவருக்கும் ஏற்ற வேலைகளை சென்னையில் கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.