Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

பெருமைக்கு எதிர்த்து நிற்போம் - Perumaikku ethirtthu nirpom


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 செப்டம்பர் மாதம் 19-ம் தேதி - ஞாயிற்று கிழமை
பெருமைக்கு எதிர்த்து நிற்போம்

நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். - (எபேசியர் 6:11).
கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஓவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால் யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனம் தேவை. வெற்றிக்கு பின் அதிக ஞானத்தோடும், பொறுமையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். வெற்றி களிப்பில் தான் பெருமையான எண்ணஙகள் நம் இருதயத்தில் தலை தூக்கும். சாத்தான் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் இந்த பெருமையை கூறலாம்.
டி.எல் மூடி ( D.L. Moody ) என்ற தேவ ஊழியர், ஒரு முறை இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு மாநகரில் மிகப் பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். படிகட்டை தாண்டியதும் ஒரு நபர் விரைந்து வந்து மூடியின் கையை குலுக்கி, 'இன்று மிக அற்புதமாக பேசினீர்கள்' என்று பாராட்டினார். உடனே மூடி 'இன்று என்னை பாராட்டும் இரண்டாவது நபர் நீங்கள்' என்றார். இந்த நபர் குழம்பி போய் தனக்கு முன் எவரையும் காணாததினால் 'எனக்கு முன்னால் உங்களை பாராட்டியது யார்?'என்று கேட்டார். மூடி கூறினார், 'நான் செய்தியை முடித்து விட்டு கீழே இறங்கும் முன்பாக சாத்தான் என் காதில் வந்து, ' மூடியாரே இன்று உம் பிரசங்கம் மிகவும் அபாரம் என்று பாராட்டினான்' என்றார்.
மூடி பிரசங்கியாருக்குள் பெருமை என்ற பாவத்தை நாசுக்காக புகுத்த சாத்தான் எடுத்த தந்திரத்தை பாருங்கள். ஆம் சாத்தான் நம்மை வீழ்த்த பொறாமை, பெருமை போன்ற வெளியரங்கமாய் தெரியாத வஞ்சிக்கிற பாவங்களால் நம்மை விழத்தள்ள சந்தர்ப்பம் பார்த்து கொண்டே இருக்கிறான் என்பதை மறந்து போக கூடாது. ஆகவே எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டும்.
பொதுவாக, வேதவசனத்தின்படி வாழ வாஞ்சிக்கும் நாம் பெருமைக்கு விலகி இருக்க ஜாக்கிரதையாகவே இருப்போம். ஆனால், சில நேரங்களில் நற்காரியத்தை தேவநாமத்தின் மகிமைக்காக செய்யும்போது இதை பிறர் பாராட்டும் போது நம்மையும் அறியாமல் பெருமையான எண்ணம் நுழைந்து விடுகிறது. மறுமுறை இத்தகைய நற்காரியம் செய்யும்போது மனிதர்களின் பாராட்டை எதிர்ப்பார்க்கிறோம். அவர்கள் பாராட்டாத போது செய்த செயல் மீதும், பிறர் மீதும் சலிப்பு ஏற்படுகிறது. ஆகவே தான் பிலிப்பியர் 2:3 ல் பவுல் கூறுகிறார், 'ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்ய வேண்டாம்' என்று கூறுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் ஜீவனத்தின் பெருமையை மாம்சத்தின் இச்சையோடும் கண்களின் இச்சையோடும் பட்டியலிட்டுள்ளார்.
பிரியமானவர்களே, கர்த்தருக்கு பயந்து வாழ விரும்பும் ஒவ்வொருவரையும், பிசாசு தந்திரமாய் பாவத்தில் விழ வைக்க எண்ணுகிறான். அதில் குறிப்பாக, மாயையான தாழ்மை என்னும் மறைமுக பெருமையையும் புகுத்தி விடுகிறான். சாத்தானின் இப்படிப்பட்ட தந்திரங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் இதை இனம் கண்டறிந்து எதிர்த்து நிற்க முடியும். ஆகவே வேத வசதனத்தை தெளியாய் அறிந்தவர்களாக ஜெபத்திலே எப்போதும் விழிப்பாயிருக்க வேண்டும்.
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
தூய ஆவியாலே கொடியேற்றுவேன்
ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம்
சாத்தானை வீழ்த்திடுமே - வஞ்சக
சாத்தானை வீழ்த்திடுமே
அந்தகார வல்லமைகளை தேவ
பெலத்தால் முறியடிப்பேன்
இயேசுவின் இரத்தம் எந்தன் பாதுகாப்பு
பயமில்லை வெற்றி எனக்கு
ஜெபம்
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, சத்துருவானவன் எங்களை வீழ்த்த தக்கதாக எங்கள் இருதயத்தில் கொண்டு வரும் பெருமையை நாங்கள் எதிர்த்து நின்று ஜெயம் எடுக்க கிருபை செய்யும். நாங்கள் எதை செய்தாலும் மற்றவர்கள் புகழ வேண்டும் என்று செய்யாமல், கர்த்தருடைய நாம மகிமைக்கே செய்ய எங்களுக்கு உதவியருளும். ஜெபத்திலே விழிப்பாய் தரித்திருந்து, சத்துருவின் உபாயங்களை ஆவியின் பட்டயமாகிய தேவவசனத்தால் மேற்கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
பிலிப்பைன்ஸ் - Philippines தேசத்திற்காக நாம் ஜெபிப்போம்.
1. இங்குள்ள சபைகள் சத்தியத்திலும் அளவிலும் வளர்ந்து வருவதற்காய்
துதிப்போம்.
2. இங்கு வாழும் கிறிஸ்தவர்கள் உன்மையும் உத்தமமாகவும் வாழ ஜெபிப்போம்.
3. இங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அநேக மூட நம்பிக்கைகளுக்கும், பயங்களுக்கும் அடிமைப்பட்டுள்ளனர், அவர்கள் எல்லோரும் இயேசுவை கண்டுக்கொள்ள நாம் இவர்களுக்காக ஜெபிப்போம்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina mannadevotionals.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.