Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

பெருமைக்கு எதிர்த்து நிற்போம் - Perumaikku ethirthu nirpom

அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 27-ம் தேதி - வியாழக் கிழமை
பெருமைக்கு எதிர்த்து நிற்போம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
..நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். - (1 பேதுரு 5:5).

கிறிஸ்தவ வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். ஓவ்வொரு சோதனையும் ஒரு யுத்தத்திற்கு சமமானதாகும். யுத்தத்தில் வெற்றி பெற்றால், யுத்தத்திற்கு முன்பாக எவ்வளவு கவனமாய் இருந்தோமோ அதைவிட இருமடங்கு அதிக கவனமாயிருக்க வேண்டும். வெற்றிக்கு பின் அதிக ஞானத்தோடும், பொறுமையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும். வெற்றி களிப்பில் தான் பெருமையான எண்ணங்கள் நம்மை கீழே விழ வைக்கும் ஒரு மறைவான கண்ணி என்றும் இந்த பெருமையை கூறலாம்.
.
டி.எல். மூடி என்ற தேவ ஊழியர் ஒரு முறை இங்கிலாந்து தேசத்திலுள்ள ஒரு மாநகரில், மிக பெரிய கன்வென்ஷன் கூட்டத்தில் பேசிவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கினார். படிகட்டை தாண்டியதும், ஒரு நபர் விரைந்து வந்து மூடியின் கையை குலுக்கி, 'இன்று மிக பிரமாதமாக பேசினீர்கள்' என்று பாராட்டினார். உடனே மூடி, 'இன்று என்னை பாராட்டும் இரண்டாவது நபர் நீங்கள்' என்றார். அந்த நபர் குழம்பிப்போய் தனக்கு முன் எவரையும் காணாததினால், 'எனக்கு முன்னால் உங்களை பாராட்டியது யார்?' என்று கேட்டார். மூடி கூறினார், 'நான் செய்தியை முடித்து விட்டு கீழே இறங்கும் முன்பாக சாத்தான் என் காதில் வந்து, 'மூடியாரே, இன்று உம் பிரசங்கம் அபாரம் என்று பாராட்டினான்' என்றார்.
.
மூடி பிரசங்கியாருக்குள் பெருமை என்ற பாவத்தை நாசுக்காக புகுத்த சாத்தான் எடுத்த தந்திரத்தை பாருங்கள். ஆம், சாத்தான் நம்மை வீழ்த்த பொறாமை, பெருமை போன்ற வெளியரங்கமாய் தெரியாத வஞ்சிக்கிற பாவங்களால் நம்மை விழத்தள்ள சந்தர்ப்பம் பார்த்து கொண்டே இருக்கிறான் என்பதை மறந்து போக கூடாது. ஆகவே எப்போதும் நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.
.
பொதுவாக, வேத வசனத்தின்படி வாழ வாஞ்சிக்கும் நாம் பெருமைக்கு விலகி இருக்க ஜாக்கிரதையாக இருப்போம். ஆனால் சில நேரங்களில் நற்காரியத்தை தேவ நாமத்தின் மகிமைக்ககாக செய்யும்போது, அதை பிறர் பாராட்டும்போது, நம்மையும் அறியாமல் பெருமையான எண்ணம் உள்ளே நுழைந்து விடுகிறது. மறுமுறை இத்தகைய நற்காரியம் செய்யும்போது, மனிதர்கள்pன் பாராட்டை எதிர்ப்பார்க்கிறோம். அவாகள் பாராட்டாத போது செய்த செயல்களின் மீதும், பிறர் மீதும் சலிப்பு ஏற்படுகிறது.
.
ஆகவேதான் பிலிப்பியர் 2:3-ல் பவுல் கூறுகிறார், 'ஒன்றையும் வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். அப்போஸ்தலனாகிய யோவான் ஜீவனத்தின் பெருமையை மாம்சத்தின் இச்சையோடும், கண்களின் இச்சையோடும் பட்டியலிட்டுள்ளார்.
.
பிரியமானவர்களே, கர்த்தருக்கு பயந்த வாழ விரும்பும் ஒவ்வொருவரையும் பிசாசு தந்திரமாய் பாவத்தில் விழ வைக்க எண்ணுகிறான். அதில் குறிப்பாக மாயையான தாழ்மை என்னும் மறைமுக பெருமையையும் புகுத்தி விடுகிறான். சாத்தானின் இப்படிப்பட்ட தந்திரங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் அதை இனம் கண்டறிந்து எதிர்த்து நிற்க முடியும். ஆகவே வேத வசனத்தை தெளிவாய் அறிந்தவர்களாக ஜெபத்திலே எப்போதும் விழிப்பாயிருக்க தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
பெருமையின் ஆவியை எடுத்தீரே

பொறுமையின் ஆவியை கொடுத்தீரே

ராஜாதி ராஜனே அப்பா பிதாவே

உம் பாதம் எந்தன் தஞ்சமே

கண்ணோக்கி பாரும் தேவா – என்னை

கண்ணோக்கி பாரும் தேவா

ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் என்ற வசனத்தின்படி நாங்கள் தாழ்மையுள்ளவர்களாக உம்முடைய கிருபையை எப்போதும் பெற்று கொள்கிறவர்களாக எங்களை மாற்றும். பெருமை என்னும் பேர் கூட எங்கள் மீது கூறப்படாதபடி, நாங்கள் தாழ்மையோடு எப்போதும் நடந்து கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் நேச தகப்பனே, எங்கள் ஜெபத்தை கேட்பவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறதே, ஆம் தகப்பனே, எங்கள் ஜெபத்தை நீர் கேட்கிறபடியால் நாங்கள் எப்பொழுதும் உம்முடைய சமுகத்தில் வந்து எங்கள் விண்ணப்பங்களை வைக்கிறோம் ஐயா.
..
சகோதரி அன்டனி அம்மாள் செல்வி ஆபிரகாம் அவர்கள் உம்முடைய ஊழியத்தை செய்கிறபடியால், அவர்களின் ஊழியத்தை வர்த்திக்க செய்வீராக. உம்முடைய நாமம் அவர்கள் மூலம் வெளிப்படும்படியாகவும், அவர்கள் ஊழியம் செய்யும் இடத்தில் உள்ளவர்கள் நீரே மெய்யான தேவன் என்பதை அறிந்து, உம்மையே தொழுது கொள்ள கிருபை செய்யும். அவர்களின் ஊழியத்தை ஆசீர்வதிப்பீராக.
..
சகோதரர் அன்டனி அவர்களின் மனைவி ஷீலா பவுலின் அவர்களுக்கு ரெஸிடன்ஸ் விசா கிடைக்க செய்த தேவனுக்கு கோடி நன்றிகளை செலுத்துகிறோம் தகப்பனே. அவருடைய சகோதரி பிரியா-ரகு அவர்கள் நேற்றைய தினம் தங்களது நான்காவது திருமண நாளை காண செய்தீரே உமக்கு நன்றி. அவர்களுக்கு கர்ப்பத்தின் கனியை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். திருமண வாழ்க்கையை ஆசீர்வதிப்பீராக. குறைகளை நிறைவாக்குகிற நல்ல தேவன் அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.அவரது நண்பரின் பிரதீப் அவர்களின் மகள் காப்ரியல்லாவின்முதலாவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாட கிருபை செய்தீரே உமக்கு நன்றி. குழந்தையை ஆசீர்வதியும். சிறுவயதிலிருந்தே கர்த்தருக்கு பயப்படும் பயத்தையும், பெற்றோருக்கு கீழ்ப்படியும் குணத்தை கொடுத்து ஞானம் அறிவு, புத்தியினால் நிரப்புவீராக.
..
சகோதரி யமுனா கரோலின் பிராக்டிகல் பரிட்சையில் நாங்கள் ஜெபித்தபடி தேவன் கொடுத்த வெற்றிக்காக நன்றி செலுத்துகிறோம். தொடர்ந்து அவர்களது படிப்பில் கூட இருந்து ஆசீர்வதிப்பீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.