Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

பரிசுத்தமாய் காத்து கொள்ளுதல் - Parisuthamai kaathu kolluthal


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 25-ம் தேதி - செவ்வாய் கிழமை
பரிசுத்தமாய் காத்து கொள்ளுதல்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். - (1 யோவான் 5:18).

நிலக்கரி சுரங்கம் அமைந்திருந்த ஒரு நகருக்கு போதகர் ஒருவர் புதிதாய் நியமிக்கப்பட்டிருந்தார். சுரங்கத்தை பார்க்க வேண்டுமென்று விரும்பி, உரிய அனுமதி வாங்கி கொண்டு உள்ளே சென்றார். எங்கு பார்த்தாலும் கன்னங்கரேல் என்று தூசி. இருள் சூழ்ந்திருந்த அந்த சுரங்கத்தினுள் ஆச்சரியத்தோடு சென்று கொண்டிருந்த அவர் ஒரு நிமிடம் வியப்போடு நின்று விட்டார். காரணம், அந்த இடத்தில் வெள்ளை வெளேரென்று அழகிய மலரொன்று இருப்பதை கண்டுதான்! இவ்வளவு அழுக்கான இடத்தில் இவ்வளவு தூய்மையான மலரா? இது எப்படி என்று தொழிலாளி ஒருவரிடம் கேட்டார். தொழிலாளி கொஞ்சம் கரித்தூளை எடுத்து பூவின் மேல் வீசினார். கரித்தூள் மலரின் இதழில் பட்ட வேகத்தில் வழுக்கி கொண்டு கீழே விழுந்ததையும், அந்த மலர் முன் போல அழகு மாறாமல் மிளர்வதையும் கண்டு வியந்து போனார். காரணம் அம்மலரின் இதழ்கள் அவ்வளவு வழுவழுப்பாக இருந்தன.
.
எருசலேமிலிருந்து சிறைபடித்து வரப்பட்ட தானியேல், சாத்தராக் மேஷாக், ஆபெத்நேகோ ஆகிய யூத வாலிபர்கள் பாபிலோன் அரண்மனையிலே வைக்கப்படுகிறார்கள். அழகிலும், அறிவிலும் சிறந்த அவர்களுக்கு ராஜா உண்ணும் உணவும், உயர்ந்த வகை திராட்சை ரசமும் பரிமாறப்படுகிறது. ஆனால தானியேலோ இவற்றால் தன்னை தீட்டுப்படுத்தலாகாது என்று தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணினார். இந்த தீர்மானத்தை நிறைவேற்ற தேவன் பிரதானியின் கண்களில் தயவு கிடைக்க செய்தார். ஆம், தீர்மானத்தை முதலில் தானியேல் எடுத்தார். அதில் நிலைத்திருக்கும்படி தேவன் மற்ற காரியங்கள் அவருக்கு அனுகூலமாயிருக்கும்படி கிரியை செய்தார்.
.
ஆம் பிரியமானவர்களே, நாம் எந்த இடத்தில் இருந்தாலும், அங்கு பரிசுத்தமாய் வாழ முடியும். முதலாவதாக நாம் பரிசுத்தமாய் வாழ வேண்டுமென்ற வாஞ்சையும், தீர்மானமும் எடுக்க வேண்டும். உள்ளத்தில் இந்த ஏக்கத்தையும் தீர்மானத்தையும் காண்கிற தேவன், நீங்கள் தூய்மையாய் வாழ சகல வழியையும் திறந்து தருவார்.
.
சிலர் சொல்வார்கள், நான் இருக்கும் இடத்தில், நான் வேலை பார்க்கும் இடத்தில் பரிசுத்தமாய் வாழ வழியே இல்லை என்று. சாமுவேல் தன் தாயால் ஏலி தாத்தாவினிடத்தில் விடப்பட்ட போது சிறுவனாயிருந்தார். அவர்; அங்கு ஏலியின் வீட்டில் அவருடைய பிள்ளைகளோடுதான் வளர்க்கப்பட்டார். ஏலியின் பிள்ளைகள் பேலியாளின் பிள்ளைகளாயிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. அதாவது, மிகவும் மோசமானவர்களாக, கெட்ட நடத்தை உடையவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களோடு தான் சாமுவேல் வளர்ந்தார். ஆனால் அவர்களுடைய எந்த கெட்ட வழக்கமும் சாமுவேலை பிடித்து கொள்ளவில்லை. சாமுவேல் கெட்டவராக போய் விடவில்லை. அதற்கு காரணம், அவருடைய தாயின் ஜெபமாயிருந்திருக்கலாம், ஆனால் சாமுவேலும் கெட்ட காரியங்களில் ஈடுபட்டு தன்னை கெடுத்து கொள்ளாதபடி, தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். ஆகையால் கெட்ட காரியங்களுக்கு தன்னை விலக்கி காத்து கொண்டார்.
.
நாம் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும். நாம் எங்கிருந்தாலும் அங்கு பாவ சூழ்நிலை இருக்கத்தான் செய்யும். ஏனெனில் உலகம் பொல்லாங்கனுக்குள் இருக்கிறபடியால்! எப்படி அந்த மலர் தான் வளரும் இடத்தை மாற்றி கொள்ள முடியாதோ அப்படி நாமும் பாவம் நிறைந்த இவ்வுலகில்தான் வாழ வேண்டும். பாவம் செய்ய தூண்டும் சூழ்நிலைகள் நெருக்கினாலும், தேவனோடு நாம் இருப்போமானால், சாமுவேலை போல, தானியேலை போல நம் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தால், தேவன் அந்த தீர்மானத்தை காத்து கொள்ள உதவுவார். ஆமென் அல்லேலூயா!
.
தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
காத்து கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கை காக்க
வழிவகுத்தருள வேண்டும்
..
உத்தமமாய் முன்செல்ல
உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதை கைவிடாமல்
காத்து கொள்ள உதவும்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, பாவம் செய்யாதபடிக்கு நாங்கள் தீர்மானம் எடுத்து, அதிலே நிலைத்திருக்கும்படியாக தேவன் எங்களுக்கு கிருபை செய்வீராக. நாங்கள் வாழும் சூழ்நிலை எங்களை பாவத்தில் விழ வைக்க கூடியதாக இருந்தாலும் சாமுவேலை போல, தானியேலை போல நாங்கள் எடுத்த தீர்மானத்தில் உறுதியாய் நிலைத்திருந்து பரிசுத்தமாய் வாழ உதவி செய்யும். நிலக்கரி சுரங்கத்தில் இருந்தாலும் அந்த மலர் தன் வெண்மையை எப்படி காத்து கொள்கிறதோ, அதுபோல எந்த சூழ்நிலையிலும் நாங்கள் எங்கள் பரிசுத்தத்தை காத்து கொள்ள எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்கள் ஜெபங்களை கேட்டு பதில் தருவதற்காக உமக்கு கோடி நன்றிகள் ஐயா. இந்த வேளையிலும் சகோதரன் ஜான் ஐசக் அவர்களின் ஜெப விண்ணப்பத்தின்படி, உமது சித்தத்தின்படி, அவருக்கு நீர் கொடுத்திருக்கிற தாலந்தின்படி ஒரு நல்ல ஊழியத்தை அவருக்கு கொடுத்து, உமக்கென்று ஊழியத்தை உண்மையாய் செய்ய கிருபை செய்யும். அவருடைய இருதயத்தின் வாஞ்சையை அறிகிற தேவன் அவரை உம்முடைய ராஜ்ய விரிவிற்காக எடுத்து உபயோகப்படுத்துவீராக.
..
இந்த வேளையிலும் துருக்கி தேசத்தில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி காரணமாக 1000த்திற்கும் மேற்பட்டோர் மரித்து இருக்கிறார்களே, தகப்பனே, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். தகப்பனே அவர்களை ஆற்றுவீராக, தேற்றுவீராக. தங்களுக்கு பிரியமானவர்களை இழக்க கொடுத்த ஒவ்வொருவருக்கும் ஆறுதலை கட்டளையிடும். அந்த தேசம் கிறிஸ்துவுக்கு சொந்தமாகவும், அந்த மக்கள் உம்மை அறிந்து கொள்ளவும் சுவிசேஷத்தின் வாசல்களை திறந்தருளும்.
..
லிபியாவில் கடந்த நாட்களில் நடைபெற்ற உள்நாட்டு போரினால் அநேகர் மரித்தும், கடைசியில் அதை எத்தனையோ ஆண்டுகளாக ஆண்டுவந்த மியாமர் கடாபி மோசமான முறையில் கொல்லப்பட்டதையும் தேவன் அறிந்திருக்கிறீர். அந்த தேசத்தில் சமாதானத்தை கட்டளையிடுவீராக. ஒரு நிலையான ஆட்சி அங்கு ஏற்படவும், அந்த தேசத்து மக்கள் சமாதானத்தோடு வாழவும் கிருபை செய்யும். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.