Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

பரலோகமே நம் சொந்தமே - Paralogame nam sonthame


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 7-ம் தேதி - வெள்ளி கிழமை
பரலோகமே நம் சொந்தமே
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். - (யோவான் 14:2-3).. 

ஒரு வழிபோக்கன் ஒருவன் பிரயாணப்பட்டு, வெகு தூரமாய் சென்று கொண்டிருந்தான். இரவு நெருங்கி விட்டது. பகலெல்லாம் அவன் நடந்ததால் அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. எங்கேயாவது ஓய்வெடுத்தால் நலமாயிருக்கும் என்று அவன் எண்ணினான். சற்று தூரத்தில் ஒரு பெரிய வீட்டை கண்டான். அதன் பெரிய முற்றத்திலே பெரிய பெரிய திண்ணைகள் கட்டப்பட்டிருந்தன. வெளியில் வந்த வீட்டுக்காரரிடம் தன் பயணத்தை கூறி அன்றிரவு மட்டும் இந்த திண்ணையில் ஓய்வெடுத்து கொள்கிறேன் என்று கேட்டான். அதை கேட்ட கல்மனம் கொண்ட அந்த வீட்டுக்காரர், ' இது என்ன சத்திரமா? போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் தங்கி போகவா இதை கட்டி போட்டிருக்கிறோம்' என்று சாடினார். வழிபோக்கர் அமைதியாக, 'ஐயா இந்த பங்களாவை யார் கட்டியது?' என்று கேட்டார். 'என் தாத்தா கட்டினார். அதன்பின் என் அப்பா இதில் வாழ்ந்தார். இப்போது நான், எனக்கு பிறகு என் மகன் வாழ்வான்' என்று பெருமிதத்தோடு கூறினார். 'அப்படியானால் இது சத்திரம் தானே' என்று வழிபோக்கர் நாசுக்காக கூறினார்.
.
உலகம் ஒரு நாடக மேடை என்றார் ஒருவர். குறிப்பிட்ட காலம் வரை நமது கதாபாத்திரத்தை நடித்து விட்டு, செல்ல வேண்டியதுதான். இப்பூமியில் கோடி கோடியாய் செலவிட்டு, ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் கொஞ்ச காலம்தான் வாழமுடியும். இறந்த பிறகு ஆறடி நிலமும் தரமாட்டார்கள் பிள்ளைகள்! மகன் ஊதாரியோ, குடிகாரனோ, பெண்டாட்டிக்கு பின் திரிபவனோ யாராயிருந்தாலும் அவனுக்கு விட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும்.
.
இப்படிப்பட்ட நிலையற்ற உலகில் வாழும் நமக்கு இதன் பேரில் தான் எத்தனை பற்று! என் வீடு, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீடாக்கும்! என்று எத்தனை பெருமைகள்! ஒரு அடி அண்டைவீட்டுக்காரன் நமது நிலத்தில்; தவறி கட்டி விட்டான் என்றால் அப்பப்பா எத்தனை கோர்ட் ஏறி இறங்குகிறோம்! சரி நமது நிலம் தான். அதில் கட்ட அவனுக்கு உரிமை இல்லைதான். அதை நான் சொல்ல வரவில்லை. இந்த காரியங்கள் எதுவும் நிரந்தரமில்லை என்பதை தான் சொல்கிறேன். நமது ஆயுள் எத்தனை நாள் என்று நம்மில் யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் நாம் ஒருவேளை வீட்டையே கட்டியிருக்க மாட்டோமாயிருக்கும்.
.
ஒரு சிலர் ஏதோ இந்த உலகம் தான் அவர்களுக்கு நிரந்தரம் என்பது போலவும், கையை கட்டி, வாயை கட்டி, சொத்து மேல் சொத்து சேர்த்து குவித்து கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பணம் சேருகிறதோ அவ்வளவு அதன் மேல் அவர்களுக்கு மயக்கமும், ஆசையும் ஏற்படுகிறது. பணம் அதிகதிகமாய் இருக்கிறவர்களை பாருங்கள், அவர்களுக்கு இன்னும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற வாஞ்சையே அதிகமாய் இருக்கும். 'பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே' - (பிரசங்கி 5:10) என்று வேதம் கூறுகிறது. திருப்தியடைய செய்யாத ஒன்றுக்காக அவன் இரவும் பகலும் போராடி கொண்டிருக்கிறான்.
.
ஆனால் கர்த்தருக்குள் வாழ்கிறவர்களுக்கு என்று இயேசுகிறிஸ்து ஒரு வீட்டை கட்டுவதற்கு சென்றிருக்கிறார். இந்த ஸ்தலத்தை அந்த வீட்டை ஆயத்தம் செய்த பிறகு நாம் அங்கு போய் என்றும் இருப்பதற்காக நம்மை அழைத்து செல்வார். அந்த வீடு மூட்டை பூச்சியோ, கரப்பானோ வந்து குடியிருக்காத இடம்! தண்ணீர் பஞ்சம் இல்லாத இடம், தூங்கும்போது வீட்டு கதவை தட்டி, விற்பவர்கள் தொல்லை இல்லாத இடம், வாடகை வீடென்றால், வீட்டில் தண்ணீர் ஒழுகுகிறது என்று எத்தனை முறை சொன்னாலும், வீட்டுக்காரன் சரிசெய்து தர மறுப்பது போல பாடுகள் இல்லாத இடம். நமக்கென்று இயேசுகிறிஸ்து கட்டியிருக்கிற இடம். அதை யாரும் கொள்ளை கொண்டு போக முடியாது. அந்த வீடு நிலையானது. யாராலும் அழிக்க முடியாதது. எந்த பூகம்பத்தாலும் அசையாதது, அதில் யுகயுகமாய் வாழ்வோம். அதையே நாம் நாடுவோமா?
.
அந்த வீட்டிற்கு செல்ல வேண்டுமென்றால், நாம் கர்த்தருக்குள் வாழ வேண்டும். அங்கு செல்லும்படியான தகுதி நமக்கு இருக்க வேண்டும். இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, முழுக்கு ஞானஸ்நானம் எடுத்து, பாவ வாழ்க்கையை விட்டுவிட்டு, பரிசுத்தமாய் வாழும்போது நாம் அந்த வீட்டுக்கு சொந்தம் கொள்ள முடியும். அப்படி வாழ்பவர்களையே, இயேசுகிறிஸ்து வரும்போது அழைத்து செல்வார். ஆமென் அல்லேலூயா!
.
பூமிக்குரியவையல்ல பூமிக்குரியவையல்ல
மேலானவைகளை என்றும் நாடிடுவோமே நாமும்
..
கொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லை
உண்ண உடுக்கவும் போதுமென்றே வாழ்வோம்



ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, நாங்கள் இந்த பூமியில் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வீடுகளோ, எதுவும் எங்களுக்கு நிலையானது அல்ல தகப்பனே. ஆனால் பரலோக வாழ்வும், நித்திய ஜீவனும் எங்களுக்கு என்றும் நிலையானது. நாங்கள் பூமிக்குரியவைகளை அல்ல மேலானவைகளையே நாடும்படி, எங்களுக்கு உணர்த்தும். உலகத்துக்குரிய காரியங்களில் நாங்கள் ஈடுபட்டு, பரலோக காரியங்களை மறந்து போவோமானால் எத்தனை பரிதாபம் தகப்பனே! பரலோகத்துக்கடுத்த காரியங்களில் நாங்கள் வாஞ்சை வைத்து அதன்படி வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்களை நேசித்து எங்களின் தேவைகளை சந்திக்கிற நல்ல தகப்பனே, இந்த வேளையிலும், கர்த்தருக்கு உண்மையாய் ஊழியம் செய்கிற ஒவ்வொருவரையும் உம்முடைய கரத்தில் தருகிறோம் அப்பா. இந்த நாளிலும் சகோதரன் பகிர்ந்து கொண்ட காரியத்தின்படி, ஊழியம் செய்கிறவர்களின் வெப்சைட்டுகளையும், அவர்கள் கர்த்தருக்கென்று மிகவும் பிரயாசப்பட்டு செய்கிற திட்டங்களையும் செயல்களையும் கிறஸ்தவர்களே Hack பண்ணுகிறதாக சொன்னாரே தகப்பனே, இது எத்தனை மோசமான செயல் ஐயா! கர்த்தருடைய வார்த்தையும், நற்செய்தியும் எப்படியாவது பாவத்தில் வாழுகிற, கர்த்தரை அறியாத மக்களுக்கு சென்று அடைய வேண்டும் என்று தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஒரு கூட்ட மக்கள் உண்மையாக செய்து கொண்டிருக்க, மற்றொரு கூட்டத்தார் அவற்றை அழித்து போடுகிறார்களே, இது எந்த விதத்தில் நியாயம் ஐயா. அப்படி செய்பவர்களை மன்னியும். அவர்களோடு இடைபடும். மீண்டும் அவர்கள் அப்படி செய்யாத வண்ணம் அவர்களை தடுத்து விடும். கர்த்தரின் வார்த்தைகள் விடுதலையோடு மக்களை சேரும்வண்ணம் பெரிய காரியங்களை செய்வீராக. அவர்களின் சதி திட்டங்களை உடைத்து போடுவீராக. உம்முடைய ஊழியக்காரர்கள் செய்யும் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மகிமைப்படுத்துவீராக. அவைகளை சுற்றி வேலி அடைத்து காத்து கொள்வீராக. சாத்தானின் எந்த கையும் அவைகள் மேல் படாதபடி, உம்முடைய இரத்தகோட்டைக்குள்ளே வைத்து காத்தளும். தேவரீர் பொறுப்பெடுத்து கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.