Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

நீர்தான் கிறிஸ்துவோ? -Neer thaan kristuvo?


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 செப்டம்பர் மாதம் 26-ம் தேதி - திங்கள் கிழமை
நீர்தான் கிறிஸ்துவோ?
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன். - (பிலிப்பியர் 3:12).

நான்கு தொழிலதிபர்கள் தங்கள் மனைவிகளிடம் 'வெள்ளிக்கிழமை நாங்கள் வீட்டுக்கு வந்து விடுவோம்' என்று சொல்லி விட்டு, விமானமேறி, வேறு இடத்திற்கு தொழில் விஷயமாக ஒரு கான்பரன்ஸிற்கு சென்றார்கள். ஆனால் அவர்கள் நினைத்ததை விட அவர்கள் கூட்டம் அதிக நேரம் எடுத்து, அவர்கள் அவசர அவசரமாக காரை பிடித்து, ஏர்போர்ட் செல்ல வேண்டி வந்தது. அவர்கள் வேகமாக அப்படி செல்லும் போது வழியில் ஆப்பிள்களை விற்று கொண்டு இருந்த பெண்ணை தள்ளி விட்டு போக வேண்டி வந்தது. அதினால் அவளுடைய ஆப்பிள்கள் எல்லாம் கீழே சிதறி விழுந்தது. அந்த பெண் அழ ஆரம்பித்தாள். அதை கண்ட தொழிலதிபர்களில் ஒருவர், நின்று, மற்றவர்களிடம் 'நீங்கள் போங்கள், என் மனைவியிடம் நான அடுத்த விமானத்தில் வருவதாக தெரிவித்து விடுங்கள்' என்று சொல்லி விட்டு, கீழே விழுந்த ஆப்பிள்களை எடுத்து அவளிடம் கொடுக்க ஆரம்பித்தார். கீழே விழுந்ததினால் சேதமான ஆப்பிள்களை வேறு கூடையிலும், மற்றவற்றை வேறு கூடையிலும் வைத்து, அவளிடம் கொடுத்த போதுதான் அவருக்கு தெரிந்தது, அவள் குருடான பெண் என்று.
அவளிடம் 20 டாலர்களை கொடுத்து, 'எங்களால் உண்டான சேதத்திற்கு இதை வைத்து கொள்' என்று சொல்லி விட்டு செல்ல ஆரம்பித்தார். அப்போது அந்த பெண் அவரை கூப்பிட தொடங்கினாள், அவர் அதை கேட்டு திரும்பி வந்த போது, அவள் அவரிடம், 'ஐயா நீர்தான் இயேசுவா' என்று கேட்டாள். அதை கேட்டபோது அவர் அப்படியே நின்று விட்டார். அவருடைய உள்ளத்தில் அந்த கேள்வி திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது.
பிரியமானவர்களே, நாம் அவரை போல மாற வேண்டும் என்பது தானே நாம் இந்த உலகத்தில் வாழும்போது நாம் கொண்டிருக்கிற ஆசை. 'அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்' - (1யோவான் 2:6). ஆம் அவர் நம்மில் நிலைத்திருந்தால் நாமும் அவர் நடந்ததை போல நடக்க வேண்டும். அவர் நன்மை செய்கிறவராக சுற்றி திரிந்தார் என்று வேதம் நமக்கு கூறுகிறது. நமக்கு தேவையானவைகளை நாம் எப்படியாவது யாரிடமாவது கேட்டு பெற்று கொள்கிறோம். ஆனால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வரும்போது, அது மிகவும் கஷ்டம், வேறு யாரிடமாவது கேளுங்கள் என்று கைகளை கழுவி விடுகிறோம் அல்லவா? இந்த உலகத்தார் கிறிஸ்துவின் அன்பை அறியாதபடி குருடர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஒரு உதவி செய்யும்போது, அவர்கள் கிறிஸ்துவின் அன்பை ருசி பார்க்கிறார்கள். ஓ, கிறிஸ்தவர்கள் என்றால் அன்பை வெளிப்படுத்துகிறவர்கள், யார் என்று பார்க்காமல் உதவி செய்பவர்கள் என்று கிறிஸ்துவை நம்மில் காண்கிறார்கள்.
ஒரு நாள் நாமும் கூட கிறிஸ்துவை அறியாத குருடர்களாக இருந்தபோது தானே கிறிஸ்துவின் அன்பு நம்மை சந்தித்தது! நாம் அவரை தேடி போகவில்லை. அவரே நம்மை தேடி வந்த தெய்வமாக, நம்மை தேடி வந்து மீட்டெடுத்தாரே!
நாமும் அனுதின வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்துவோம். நம்மால் இயன்ற உதவியை மற்றவர்களுக்கு செய்வோம். நம்மால் கூடுமானதை மற்றவர்களுக்கு செய்யும்போது, அவர்கள் கிறிஸ்துவை நம்மில் காண்பார்கள். நாம் மற்றவர்களுக்கு நம்மால் இயன்றபோதும் செய்யாமல் போகும்போது, அது மற்றவர்களுக்கு முன்பாக, கிறிஸ்தவன் என்கிறான், இதை கூட செய்ய மாட்டேன் என்கிறானே என்று கிறிஸ்துவின் பெயர்தான் இழிவுபடுத்தப்படும்.
ஓவ்வொரு நாளும் கிறிஸ்துவை நம் வேலையிடத்தில், நம் குடும்பத்தில், நம் சபைகளில், நம் நண்பர்களிடத்தில், நம் தேவை உள்ளவர்களிடத்தில் வெளிப்படுத்துவோம். கர்த்தரின் நாமத்தை மகிமைப்படுத்துவோம் ஆமென் அல்லேலூயா!
தேவ ஆவியில் நடந்த மனிதரெல்லாம்
அக்கினியாய் எழும்பி ஜொலித்ததுப் போல்
என்னை மாற்றுமே என்னை மாற்றுமே
கலங்கரை விளக்காய் என்னை மாற்றுமே
ஆவியில் நடக்கணுமே தேவ
வார்த்தையில் நிலைக்கணுமே
ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும் நாங்கள் எங்கள் கிறிஸ்துவை அவரை அறியாத மக்களின் மத்தியில் வெளிப்படுத்ததக்கதாக, எங்கள் நடக்கை, செயல், சொல் எல்லாவற்றிலும் அவரை வெளிப்படுத்த கிருபை தருவீராக. எங்களால் இயன்ற உதவிகளை தேவையுள்ளோருக்கு செய்யும்படியாக எங்களை உணர்த்தும். தேவ நாமத்தை மகிமைப்படுத்தும் வாழ்வை நாங்கள் வாழ எங்களுக்கு கிருபை தாரும். எங்களை காண்பவர்கள் எங்களில் கிறிஸ்துவை காண கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் ஜெபத்தை கேட்கும் நல்ல தகப்பனே, எங்கள் ஜெபங்களை கேட்டு,சகோதரி கொளசிக்கு குழந்தை பாக்கியத்தை கொடுத்த தயவிற்காக உமக்கு கோடி நன்றி செலுத்துகிறோம் தகப்பனே, தொடர்நது அவர்களுக்கு கர்ப்பமாய் இருக்கும் இந்த நேரத்தில் நல்ல உடல் உள்ள ஆரோக்கியத்தை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் விண்ணப்பங்களை கேட்டு பதில் கொடுக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், எங்கள் விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நல்ல நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.