Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

நன்மையான ஈவுகள் - Nanmaiyaana eevugal


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 09-ம் தேதி - ஞாயிற்று கிழமை
நன்மையான ஈவுகள்
கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். - பிலிப்பியர் 2:15-16.. 

நாம் நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருப்பதால் நாம் சிலக் காரியங்களைக் குறித்து யோசிப்பதில்லை. உலகில் எல்லாருக்கும் எல்லாம் நன்றாக வாய்ப்பதில்லை. அநேகர் வேதனையின் மத்தியில் ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறார்கள். சிலருக்கு வேதனையே வாழ்க்கை என்று வாழ்கிறவர்களும் உண்டு. சிலருடைய வாழ்க்கையை பார்க்கும்போது தேவன் நம்மை எந்த அளவு ஆசீர்வதிததுள்ளார் என்பதை நாம் கண்கூடாக கணடிருக்கிறோம். நாம் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தர்க்கிப்பில்லாமலும் செய்யும்படியாக அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு ஆலோசனை கூறுகிறார். பழைய ஏற்பாட்டு காலத்தில் இஸ்ரவேலர் முறுமுறுத்து தேவனை கோபமூட்டியதுப் போல நாமும் முறுமுறுத்து தேவனை கோபமூட்டாமல் எல்லாவற்றிலும் தேவனுக்கு நன்றி செலுத்துவோம். நம்மைவிட அநேக காரியங்களில் குறைவுள்ளவர்களைக் கண்டு நம்மை ஆசீர்வதித்த தேவனுக்கு நன்றியாயிருப்போம்.
.
இன்று நீங்கள் ஒருவரிடம் கோபமாக பேசுவதற்கு முன் பேச முடியாத ஊமையான மனிதனைக் குறித்து சிந்தியுங்கள்.
.
இன்று உங்கள் சாப்பாட்டின் ருசியைக் குறித்து குறை சொல்வதற்கு முன் சாப்பிட ஒன்றுமே இல்லாமல் பட்டினியாக இருப்பவரைக் குறித்து நினையுங்கள்.
.
இன்று உங்கள் கணவரைப் பற்றியோ மனைவியைப் பற்றியோ குறை சொல்வதற்கு முன் தனக்கு இன்னும் திருமணமாகவில்லையே என்று கடவுளிடம் முறையிடும் நபரைக் குறித்து சிந்தியுங்கள்.
.
இன்று உங்கள் வாழ்க்கையை குறித்து முறுமுறுப்பதற்கு முன் சிறு வயதிலும் வாலிப வயதிலும் மரித்து பரலோகத்திற்கு சென்றுவிட்ட ஆத்துமாக்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.
.
இன்று உங்கள் பிள்ளைகளைக் குறித்து குறைகளை சொல்வதற்கு முன் பிள்ளையை வாஞ்சித்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களைக் குறித்து யோசியுங்கள்.
.
இன்று உங்கள் வீடு அழுக்காக இருக்கிறது, சுத்தமாக வைக்கவில்லை என்று மற்றவர்களை குறை சொல்வதற்கு முன் தெருக்களில் அழுக்கில் வாழ்பவர்களைக் குறித்து யோசியுங்கள்.
.
இன்று இவ்வளவு தூரம் நான் காரை ஓட்டிச் செல்ல வேண்டுமே என்று முறுமுறுக்குமுன் அவ்வளவு தூரம் கால்நடையாகவே நடக்கிறவர்களை குறித்து யோசியுங்கள்.
.
இன்று உங்களது அதிகமான வேலையைக் குறித்து முறுமுறுக்கிறதற்க்கு முன் வேலை இல்லாதவர்களையும், உங்கள் வேலை தனக்கு இல்லையே என்று ஏங்குகிறவர்களையும் யோசியுங்கள்.
.
இன்று மற்றவர்களை குற்றம் சொல்வதற்கு உங்கள் விரலை அவர்கள் மேல் காட்டுவதற்கு முன் பாவம் செய்யாதவர்கள் யாரும் இந்த உலகில் இல்லை என்பதையும் நாம் எல்லாரும் கர்த்தருக்கு முன்பாக பதில் சொல்ல வேண்டும் என்பதையும் யோசியுங்கள்.
.
நீங்கள் வாழுகிற வாழ்க்கை கர்த்தரால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரிசு. அதை சந்தோஷமாய் கொண்டாடுங்கள், வாழுங்கள், நல்லபடியாக நிறைவேற்றுங்கள். தேவையில்லாமல் முறுமுறுத்து உங்கள் சந்தோஷத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
.
ஆகவே, இன்று வாழும்போதே உங்கள் அன்பை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள். அன்பு என்பது மறைத்து வைக்கவோ, பூட்டி வைக்கவோ அல்ல, அதை மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கவே, ஆகையால் கொடுக்க வேண்டியவர்களுக்கு உங்கள் அன்பை கொடுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!
.
நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கர்த்தர் தந்த ஆசீர்யாவும் கண்டு
நன்றியாய் சேவிப்பாயா

ஜெபம்
எங்கள் இரக்கமும் மன உருக்கமுமுள்ள நல்ல தகப்பனே, நாங்கள் எங்கள் குறைகளையே பெரிதாக எண்ணி முறுமுறுத்துக் கொண்டிராமல், உலகில் எத்தனைப் பேர் எங்களைவிட தாழ்நத நிலையில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து எங்களை இந்த நல்ல நிலையில் வைத்த தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்கிறோம். நீர் எங்களுக்கு கொடுத்த நல்ல வாழ்க்கைக்காக நன்றி தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.