Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

நம்முடைய காலங்கள் - Nammudaiya Kaalangal


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 5-ம் தேதி - புதன் கிழமை
நம்முடைய காலங்கள்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25).


இரு வாலிபர்கள் (ஒருவன் விசுவாசி, மற்றவன் அவிசுவாசி) ஒரு மலையின் மேல் நடந்துப் போய்க் கொணடிருந்தார்கள். அப்போது விசுவாசியான வாலிபன், கர்த்தருடைய அநாதி திட்டங்களையும், அவருடைய சிருஷ்டிப்பின் மகிமையையும் பேசிக் கொண்டே இருவரும் நடந்துப் போய் கொண்டிருந்தார்கள். ‘எனக்கு எந்தவித கவலையும் இல்லை ஏனென்றால் என்னுடைய நடைகளை அவர் தீர்மானிக்கிறார். அவருடைய பாதுகாப்பு எனக்கு இருப்பதால் எனக்கு எந்தவிதக் கவலையும் இல்லை’ என்று விசுவாசியான வாலிபன் கூறினான்.
அதற்கு அவிசுவாசியான வாலிபன், ‘என்னை நடத்திக் கொள்ள எனக்குத்தெரியும் யாருடைய தயவும் எனக்கு வேண்டுவதில்லை’ என்றுக் கூறிவிட்டு, ஒரு கல்லை தூரத்தில் எறிந்து, ‘கடவுள் இந்தக் கல் எங்கே போய் விழ வேண்டும் என்று தீர்மானிக்கிறார்’ என்று கேலியாக கேட்டுவிட்டு, ‘பார், அந்த மரம் மலையின் ஓரத்தில் வளர்ந்து இருக்கிறது. அதையும் கர்த்தர்தான் வைத்தார் என்று சொல்லாதே, யாரோ வழிபோக்கன் விதையை எறிந்திருக்கிறான் அது இங்கே முளைவிட்டு மரமாக இருக்கிறது. இதற்கு என்ன பதில் சொல்கிறாய்’ என்று அந்த மரத்தின்மேல் சாய்ந்து நின்றான். திடீரென்று அந்த மரத்தின் கீழ் இருந்த மண் சரிய ஆரம்பித்தது. அந்த வாலிபன் நகர்வதற்குள் மண்சரிந்து தாழ இருந்த பாறைகளுக்குள் விழ ஆரம்பித்தது. ஒரு கையை மரத்தைச் சுற்றி பிடித்தும் ஒரு காலை அங்கு இருந்த பாறையின் மேலும் வைத்து தப்பித்தான். இருவரும் சில நிமிஷங்கள் அப்படியே உறைந்துப் போய் நின்றார்கள்.
விசுவாசியான வாலிபன் உடனே அந்த இடத்திலேதானே முழங்கால்படியிட்டு, தேவனுக்கு தன் நண்பனின் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி சொன்னான். பக்கத்தில் மற்றவனும் முழங்கால்படியிட்டு நன்றி சொன்னான் இருவரும் மீதமிருந்த தங்கள் பயணத்தில் ஒன்றும் பேசாமல் தொடர்ந்தனர். தேவன் அவிசுவாசியான வாலிபனோடு பேச ஆரம்பித்தார். தன்னை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து ஒரு ஊழியக்காரனாக அவன் மாறினான்.
நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது. அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலுள்ள ஒரு முடியும் கீழே விழுவதில்லை. நட்சத்திரங்களையே பெயர் சொல்லி அழைக்கிற தேவன் அவைகளை பார்க்கிலும் விசேஷித்தவர்களாகிய நம்முடைய தேவைகளையும் வாஞ்சைகளையும் நிறைவேற்ற வல்லவராகவே இருக்கிறார். ‘இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்’ - (லூக்கா.12:6,7) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆகையால் எதைக் குறித்தும் கவலைப்படாமல், அவரை சார்ந்து ஜீவிப்போம். யெகோவாயீரேவாகிய அவர் நம்மை பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென், அல்லேலூயா!
கவலையினால் சரீர அளவில்
ஒன்றையும் கூட்டவே முடியாது
நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட வேண்டாம்
..

கர்த்தர் உன்னை விசாரிப்பார்
கர்த்தர் உன்னை ஆதரிப்பார்
கர்த்தர் உன்னை தாங்கிடுவார்
கர்த்தர் உன்னை தேற்றிடுவார்
ஜெபம்
எங்கள் அன்பின் பரம பிதாவே, நாங்கள் எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லாவற்றிற்கும் உம்மையே சார்ந்து ஜீவிக்க உதவி செய்யும். எங்களை நீர் விசேஷித்தவர்களாக வைத்திருக்கிற தயவுக்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் தேவைகளை நீர் சந்திக்கிறதற்காக ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் ஜெபங்களை கேட்டு பதில் கொடுக்கும் பரிசுத்தமுள்ள நல்ல தகப்பனே, இந்த வேளையிலும் சகோதரி கல்பனாவின் கருவை தேவரீர் ஆசீர்வதித்து, ஏற்ற வேளையில் ஆரோக்கியமான குழந்தை பெற்றெடுக்க கிருபை செய்வீராக. அவர்களது சகோதரி பாகவதி அவர்களுக்கு தேவரீர் குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு, அவர்களது இருதய வாஞ்சையை நிறைவேற்றுவீராக.
..
ஜெர்மனியில் இருக்கிற சகோதரி பிரசன்னாவின் கிட்னியை உருவாக்கியவர் நீர் தகப்பனே, இப்போதும் கிருமிகளால் தாக்கப்பட்டு, சரியாக வேலை செய்யாதிருக்கிற கிட்னியை நீர் சுகமாக்கும்படியாக ஜெபிக்கிறோம். நீர் சொல்ல ஆகும், நீர் கட்டளையிட நிற்குமே, தேவன் தாமே அந்த கிட்னிகளுக்கு சரியானபடி வேலை செய்யும்படியாக கட்டளையிடுவீராக. பரிபூரண சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி பிரேமா ஜார்ஜ் அவர்களுக்கு இருக்கிற தூக்கமின்மையை நீக்கி, சுகமாக உறங்கும்படியாக தேவன் கிருபை பாராட்டுவீராக. தேவையில்லாத கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, நீரே எல்லாவற்றையும் பார்த்து கொள்வீர் என்று உம்முடைய கரத்தில் தன்னுடைய மன பாரங்களை வைத்துவிட்டு, கவலையின்றி வாழ கிருபை தாரும். மன வாஞ்சைகளை தீர்த்தருளும். நல்ல நித்திரையை கொடுத்து அவர்கள் சுகமாயிருக்கவும், அவர்களது பிரச்சனைகளை தீர்க்கும்படியாகவும் ஜெபிக்கிறோம்.
..
சகோதரி மணிமேகலாவின் 12 ஆவது படிக்கும் சகோதரன் ஜோசப்பிற்குதேவன் நல்ல ஞானம் அறிவு புத்தியை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாகவும், பரிட்சையில் நல்ல மார்க்குகள் எடுத்து பாஸ் பண்ணும்படியாகவும், தேவ கிருபை அவரை எப்போதும் சூழ்ந்து கொண்டு வழிநடத்தும்படியாகவும் ஜெபிக்கிறோம். மற்ற சகோதரன் மணிக்கு படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரியின் பெற்றோர் தேவனால் சந்திக்கப்பட்டு, இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் மைக்கேல் ஜார்ஜின் ஜெபக்குறிப்பை உமது பாதத்தில் வைக்கிறோம். அபுதாபியிலும், மற்ற அரபு நாடுகளிலும் அவர்களது நாட்டு மக்களின் வேலைக்காக மற்ற நாடுகளை சேர்ந்தவர்களின் வேலைகளை நீக்குவதாக எழுதியிருக்கிறபடியால், தேவன் தாமே தங்கள் குடும்பத்தின் நல வாழ்வுக்காக எல்லாரையும் விட்டுவிட்டு, எப்படியாவது கொஞ்சம் சம்பாதித்து போக வேண்டும் என்ற வாஞ்சையோடு வந்திருக்கும் ஏழை மக்களின் வேலைகள் பறி போகாதபடி தேவன் தாமே கிருபை செய்வீராக. அவர்கள் ஆசீர்வாதமாக இருக்கும்படிக்கு கிருபை செய்யும். அவர்களது வேலைகளை நிரந்தரமாக்கும். எப்போது தங்கள் வேலை போகும் என்று பயப்படாதபடி, அவர்களை அந்த இடத்தில் நிலைத்திருக்க கிருபை பாராட்டும். எங்கள் ஜெபங்களை கேட்ட தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். புதில் கொடுக்கபோகிற தயவிற்காக உமக்கு நன்றி. எங்கள் விண்ணப்பங்களை துதி ஸ்தோத்திரங்களோடு, இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.