Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

நமது வெற்றிக் கொடி - Namathu vetri kodi


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 14-ம் தேதி - வெள்ளி கிழமை
நமது வெற்றிக் கொடி
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். – ஏசாயா. 40:31.

 ஒரு உற்சாகமான வாலிபன் இல்லினோயிஸின் (Illinois) சட்டசபை தேர்தலில் நின்று வெகு சொற்ப ஓடடுகளை எடுத்து படுதோல்வியடைந்தான். மனம் சோர்வடையாமல், தன் கவனத்தை வியாபாரத்தில் செலுத்தினான். ஆனால் அவனுடன்கூட இருந்து வியாபாரம் செய்தவன் அவனை ஏமாற்றியபடியால் பணமெல்லாம் செலவாகி, கடனை வாங்கி, அவற்றை செலுத்தி முடிக்க 15 நீண்ட வருடங்கள் ஆனது.

.
பின் அவர் வாழ்வில் வந்த ஒரு அழகிய பெண் வசந்தத்தைக் கொண்டு வருவாள் என்று எதிர்ப்பார்த்தார். அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தபோது அவளுக்கு மலேரியா காய்ச்சல் வந்து அவள் மரித்துப் போனாள். கடைசியாக, திரும்பவும் அரசியலில் நுழைந்து, மாநில அளவில் அவர் நின்று ஜெயித்தபடியால், அவருக்கு தேசிய அளவில் நிற்க வேண்டும் என்று தோன்றிற்று. ஆனால் அதுவோ அவருக்கு எட்டாதக் கனியாகத் தோன்றிற்று. ஆனால் இரண்டாவது முறையாக அவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் நின்று ஜெயித்தார். ஆனால் அவருக்கு போதிய அளவு அவையில் ஆதரவு இல்லாததால், இரண்டு வருடங்கள் கழித்து, வாஷிங்டனை விட்டே வெளியே செல்ல நேரிட்டது.
.
இத்தனை நடந்தும் அவர் மனம் சோர்ந்துப் போகவே இல்லை. திரும்பவும், அமெரிக்க பாராளுமன்றத்துக்கு ஒரு உறுப்பினராக போட்டியிட்டார். தோற்றுப் போனார். இரண்டாவது முறையாக நின்றும் தோற்றுப் போனார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஒரு நாள் தான் எப்படியும் வெற்றிப் பெறுவோம் என்று நம்பிக்கையோடு விடாது முயற்சி செய்தார். அவரது முயற்சி வீண் போகவில்லை. இறுதியாக வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் ஜனாதியதியாக நுழைந்தார். அவர் தான் கறுப்பர்களின் விடுதலைக்காக போராடிய அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) ஆவார். அவர் ஒரு சிறந்த கிறிஸ்தவராக இருந்தபடியால் ஒரு சிறந்த ஜனாதிபதியாக இன்று வரைப் போற்றப்படுகிறார்.
.
ஆம் பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தோல்வி மேல் தோல்வியா? மனம் சோர்ந்துப் போகாதீர்கள். என்ன வாழ்க்கை என்று கசந்துக் கொள்ளாதிருங்கள். விடா முயற்சி செய்யுங்கள். வெற்றி பெற்று இப்போது புகழ் பெற்று விளங்குகிறவர்கள் யாருக்கும் வெற்றி உடனே வந்து விடவில்லை, அவர்களுடைய விடா முயற்சியும், கர்த்தர் மேல் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையுமே அவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். ஏசாயா 40:31 என்று வசனம் கூறுகிறது. கர்த்தர் எல்லாவற்றையும் அதினதின் நேரத்தில் நேர்த்தியாய் செய்கிறவர். நாம் அவரை உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போமானால், தோல்வியைக் கண்டு துவள மாட்டோம். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் என்று சங்கீதம் 37:5 -ல் வாசிக்கிறோம். நமது தேவன் யெகோவா நிசி, நம் ஜெயக் கொடியானவர். நமக்கு ஜெயத்தை தராமல் யாருக்கு ஜெயத்தை தரப் போகிறார்? கர்த்தர் நம் பட்சத்தில் இருக்கும்போது நாம் தோல்வியைக் கண்டு கலங்கத் தேவையில்லை. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் ரோமர் 8:28. ஆகையால் மனம் கலங்காதீர்கள். அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது. யெகோவாநிசியையே நோக்கிப் பார்ப்போம் வெற்றி நமக்குத்தான். அல்லேலூயா!
.
யெகோவாநிசி யெகோவாநிசி
எங்கள் கொடி வெற்றிக் கொடியே! 
ஜெபம்
எங்கள் வெற்றிக் கொடியாகிய யெகோவாநிசியே, எங்களுக்கு வெற்றியை எப்போதும் தருகிறவரே, உம்மைத் துதிக்கிறோம். தோல்வியைக் கண்டு நாங்கள் சோர்ந்துப் போகாமல், உம்மையேப் பற்றிக் கொண்டு வெற்றியை சுதந்தரிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்களை நேசித்து வழிநடத்துகிற நல்ல தகப்பனே, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்று வாக்குதத்தம் செய்தவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
..
சகோதரி லதா லிடியா அவர்களும் அவருடைய தோழிகளும் 17-ம் தேதி எழுத இருக்கிற பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற தேவன் தகுந்த ஞானத்தையும் அறிவையும், புத்தியையும் கொடுப்பீராக. அவர்களுடைய குடும்பத்தின் தேவைகளை தேவன் சந்தித்து, ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் மாரி மகேந்திரன் அவர்களுக்கு ஏற்ற ஒரு தொழிலை தேவன் தாமே கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர் அதில் சிறந்து விளங்கும்படியாக தேவன் ஏற்ற ஞானத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி ரெபி கிறிஸ்டி அவர்களின் திருமணத்திற்காக உம்மை நோக்கி பார்க்கிறோம் தகப்பனே, தேவன் தாமே அவர்களுக்கு ஏற்ற துணையை ஏற்ற வேளையில் கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாகவும், அவர்களது குடும்ப வாழ்க்கை தேவனுக்கேற்றதாய், சாட்சியாய் இருக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம்.
..
சகோதரி யமுனா கேரலின் இஞ்சினியரிங் கடைசி வருடம் படித்து கொண்டிருக்கும் அவருக்கு இந்த நாளில் அவர் செய்ய இருக்கும் பிராக்டிகல் பரிட்சையில் நன்கு செய்யும்படியாக தேவ ஞானத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். அடுத்த மாதம் நடக்க இருக்கும் பரிட்சையிலும் நன்கு எழுதி, ஒரு நல்ல கம்பெனியில் பிளேஸ்மென்ட் கிடைக்க தேவன் கிருபை செய்வீராக.அவர்களுடைய பெற்றோர் மற்றும் தங்கை இவர்களையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் செல்லும் சபையில் கட்ட இருக்கும் கட்டிட தேவைகளை தேவன் தாமே சந்தித்து, சரியானபடி கட்டி முடிக்க பெலப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.