Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Saturday, April 14, 2012

நம் அர்ப்பணிப்பு எது? - Nam arpannipu ethu


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 6-ம் தேதி - வியாழக் கிழமை
நம் அர்ப்பணிப்பு எது?
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். - (யோவான் 12:25). 

'இப்பொழுது நாம் என்ன செய்வது? கீழே ஒரு நகரம் இருக்கிறது. பள்ளிக்கூடம் ஒன்றும் காணப்படுகிறது. இங்கே இந்த ஹெலிகாப்டர் வெடித்து கீழே விழுந்தால் இந்நகரிலுள்ள அநேகர் இறந்து விடுவார்கள். ஆனால் நாம் தப்பித்து கொள்ள பாராசூட் இருக்கிறது' என்று கூறி கொண்டிருந்தவரிடம் மற்றொருவர், 'நாம் முடிந்த அளவு வேகமாக ஹெலிகாப்படரை ஓட்டி சென்று விடுவோம். ஒருவேளை ஹெலிகாப்டர் வெடித்தால் நாம் இருவர் மாத்திரமே இறப்போம். ஆனால் கீழேயுள்ள அநேகரை காப்பாற்றி விடலாம்' என்று கூறி கொணடிருக்கும்போதே அந்த ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. பழுதடைந்த அந்த ஹெலிகாப்டர் ஊருக்கு வெளியில் சென்று வெடித்ததால் நகர மக்களுக்கு எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. ஆனால் அதை ஓட்டி சென்ற இரண்டு இளம் இராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்து விட்டனர். இந்த இருவரும் பேசிய இறுதி பேச்சுக்களே மேலே படித்த சம்பவம்.
.
அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் விஜய நகரத்தை சேர்ந்த 28 வயதான இராணுவ அதிகாரி பானுசந்தர். கணிணி துறையில் இஞ்சினியரான இவர் பல்கலை கழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருந்த போதிலும், தனக்கு வந்த வேலை வாய்ப்புக்களை தள்ளிவிட்டு நாட்டு மக்களுக்கு சேவை செய்யும்படி இராணுவத்தில் சேர்ந்து கடின உழைப்பு மற்றும திறமையினால் சிறுவயதிலேயே அதிகாரியாக உயர்ந்தவர். மற்றவர் சண்டிகரை சேர்ந்த ராதோர். பெற்றோருக்கு ஒரே மகனான இவர் தன்னை தேசத்தை காக்கும் பணியில் ஈடுபடுத்தி கொண்டார். இந்த இருவரும் தப்பித்து கொள்ள வாய்ப்பிருந்தும் தப்பித்து கொள்ளாமல் இறந்ததற்கு காரணமென்ன? நான் மரணமடைவதாயிருந்தாலும் என் தேசத்சை காக்கும்படி கடைசி மூச்சு வரை போராடுவேன் என்ற அவர்களின் உறுதி மொழியே! அர்ப்பணிப்பே அப்படி செய்ய தூண்டியது.
.
நாம் ஆராதிக்கும் ஆலயங்கள் ஏற்பட காரணமாயிருந்த மிஷனெரிகள் அநேகருடைய வாழ்க்கை சரிதைகளை வாசித்து பார்ப்போமானால் நாற்பது, நாற்பத்தைந்து வயதிற்குள்ளாகவே அநேகர் மரணமடைந்திருக்கிறார்கள். ஒரு நண்பர் எழுதின கடிதத்தை படித்த கிரஹாம் ஸ்டெயின்ஸ் இந்தியாவின் மீது பாரம் கொண்டு அந்த கடிதத்தையே அழைப்பாக ஏற்று குஷ்டரோகிகளின் மத்தியில் ஊழியம் செய்து, அவரும், அவருடைய இரண்டு மகன்களும் இரத்த சாட்சியாக மரித்தது நாம் அனைவரும் அறிந்ததே! ஒரு மிஷனெரியின் பிரசங்கத்தின் மூலம் இந்தியாவின் நிலைமையை அறிந்த வில்லியம் கேரி அறியாமையிலுள்ள மக்களை விடுவிக்கும்படி ஜெபித்தார். குறைந்த கலிவியறிவு உடையவராக இருந்தாலும் மிஷனெரியாக இந்தியா வந்து 40க்கும் மேற்ப்பட்ட இந்திய மொழிகளி;ல் பைபிள் அச்சிடப்பட காரணமாயிருந்தார். இப்படி அநேகர் பணி செய்யும்படி அவர்களை உந்தி தள்ளியது என்ன? சிலுவை அன்பே! அதே அன்பை நமக்குள்ளும் வாசம் செய்கிறது. ஆனால் அந்த அன்பை வெளிப்படுத்த நாம் என்ன செய்கிறோம்?
.
நம்மை சுற்றியுள்ள மக்களை பார்க்கும்போது மேய்ப்பனற்ற ஆடுகளை போல இருக்கிறார்களே என்று கண்ணீர் விடுகின்ற இயேசுவுக்கு உங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்த போகிறீர்கள்? அறுவடையோ மிகுதி ஆட்களோ கொஞ்சம் என்ற ஏக்கமுள்ள இருதய பாரமுள்ள வார்த்தைகளுக்கு நமது பதில் என்ன? நம்முடைய கிறிஸ்துவுக்கு அவருக்காக நிற்க, உழைக்க ஆட்கள் தேவை! நமது வாழ்க்கை, தாலந்துகள், நேரங்கள், விடுமுறைகள் எல்லாவற்றையும் அவருக்காக அர்ப்பணிப்போமா? அவர் நமக்கு செய்த, நமக்கு கொடுத்த எல்லா காரியங்களுக்கு ஈடாக நாம் என்னத்தை செலுத்த முடியும்? எது ஈடாகும்? ஓன்றுமே இல்லை! ஆனாலும் நம்மால் இயன்றதை அவருக்காக செய்வோமா? குடும்பத்திலுள்ளவர்கள் அதிலிருந்து பிரிந்து, தியாகமாக செய்தால்தான் ஊழியம் என்று நினைக்காதீர்கள். கர்த்தர் உங்களை குடும்பமாக இணைத்திருந்தால், குடும்பமாக அவருக்கென்று ஊழியம் செய்யுங்கள். குடும்பத்தை விட்டு விட்டு, ஊழியத்திற்கு போகிறேன் என்று சொல்லாதிருங்கள். கர்த்தர் இணைத்து வைக்கிற தேவன், பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறவர் அல்ல! மனைவி ஊழியத்திற்கு வர மாட்டேன் என்று சொல்வார்களானால், அவர்களுக்காக தேவனிடத்தில் உங்கள் ஜெபத்தில் மன்றாடுங்கள். கர்த்தர் அவர்களையும் உங்களோடு இணைந்து ஊழியம் செய்ய வைப்பார்.
.
இந்த வாரத்தில் ஈரான் தேசத்தில், நீதிமன்றத்தில் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த வாலிப போதகர் யூசுப் நடர்கனி அவர்களுக்கு சென்ற வருடமே அவர் கிறிஸ்துவை ஏற்று கொண்டதால் மரண தண்டனை விதித்த ஈரானின் அரசு இப்போது இந்த வாரத்தில் எப்போது வேண்டுமானாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறது. தனது உயிரே போனாலும் நான் கிறிஸ்துவை மறுதலிக்க மாட்டேன் என்று கிறிஸ்துவை பற்றி கொண்டிருக்கிற அவருக்கு ஈரான் அரசு தயவு காட்டும்படியாக நாம் ஜெபிப்போமா? அன்று நேபுகாத்நேச்சார் உருவாக்கின சிலையின் முன் வணங்க மாட்டோம் என்று எதிர்த்து நின்ற எபிரேய வாலிபர்களை போல இவரும் கர்த்தருக்காக நிற்பதை கர்த்தர் நிச்சயமாய் கனம் பண்ணுவார். 'நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது' (தானியேல் 3:17-18) என்று வைராக்கியமாக நின்ற அந்த வாலிபர்களை போல யூசுப்பும் வைராக்கியமாக நிற்கத்தக்கதாக அவருக்காக ஜெபிப்போம்.
.
ஈரான் தேசத்தில் இந்த யூசுப்பை போலவும், மற்றும் வெளியே தெரியாமல் இரகசிய கிறிஸ்தவர்களாக, அல்லது அரசாங்கத்தால் கிறிஸ்தவர்கள் என்னும் பேரினிமித்தம் பாடுபடும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் ஜெபங்களினால் கிறிஸ்துவுக்காக எழும்ப போகிற அநேக வாலிபர்களை என்ன செய்வது என்று ஈரான் அரசு திகைக்கும் காலம் கர்த்தரை மறுதலிக்கிற அந்த தேசத்தில் நிச்சயம் வரப்போகிறது. 'மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்' என்ற கர்த்தரின் வார்த்தைகள் அந்த தேசத்தில் நிறைவேறும்படியாக ஜெபிப்போம்.
.
எரியும் சூளையோ ஏழு மடங்கு எரிந்தாலும்
என் தேவன் தப்புவிக்க வல்லவர்
சிங்க கெபியே என்னை பட்சிக்க வந்தாலும்
என் தேவன் தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவன் இயேசு
என்னை தப்புவிக்க வல்லவர்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, எங்களுக்காக தம் ஜீவனையே கொடுத்த எங்கள் இயேசுவுக்காக நாங்கள் என்னத்தை ஈடாக கொடுக்க முடியும் தகப்பனே, எங்களையே அவருக்காய் படைக்கிறோம். எங்கள் தாலந்துகள், எங்கள் விடுமுறைகள், எங்கள் நேரங்கள், எங்கள் வாழ்க்கை எல்லாவற்றையும் உமக்கே கொடுக்கிறோம். தகப்பனே ஈரானில் உள்ள போதகர் யூசுப் நடர்கனி அவர்கள் கிறிஸ்துவை மறுதலிக்க மறுத்த காரணத்திற்காக அவருக்கு மரண தண்டனை எந்த வேளையிலும் நிறைவேற்றப்படலாம் என்று இருக்கிற இந்த நேரத்தில் அவருக்காக நாங்கள் மன்றாடுகிறோம் தகப்பனே, எங்கள் தேவன் எங்களை தப்புவிக்க வல்லவராகயிருக்கிற படியால், நீர் அவரை அந்த அரசின் தண்டனையிலிருந்து விடுவிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அந்த அரசின் கண்களில் அவருக்கு தயவு கிடைப்பதாக. அந்த தேசத்தில் உமக்கென்று சாட்சியாக அவரை வைத்து, அவரை வாழ வைப்பீராக. அவர் எந்த சூழ்நிலையிலும் உம்மை மறுதலித்து போய் விடாதபடிக்கு அவரை பெலப்படுத்தும். சுவிசேஷத்திற்கு இரும்பு கதவுகளை கொண்டு அடைத்திருக்கிற அந்த தேசத்தில் யூசுப்பை போன்று உமக்காக வைராக்கியமாய் நிற்கிற வாலிபர்களை எழுப்பும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் ஜெபத்தை கேட்கும் நல்ல தகப்பனே, நீர் எங்கள் ஜெபங்களை கேட்டு செய்கிற அற்புதங்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் தகப்பனே. நீர் அற்புதர், உம் நாமம் அதிசயம். உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை தகப்பனே. இந்தவேளையிலும் நாங்கள் ஏறெடுக்கும் ஜெபத்திற்கு உமது செவிகள் திறந்திருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். சகோதரன் ராஜீவ் யாக்கோபு அவர்களின் வலது கண்ணில் பார்வை குறைவாக இருப்பதால், அவர் கண்களை தொட்டு சுகப்படுத்துவீராக. நல்ல பார்வையை பெற்று உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
..
சகோதரி டாரத்தி மேத்யூ அவர்களின் வேலை மிகவும் மந்தமாக இருப்பதால், அந்த வேலையை தேவரீர் ஆசீர்வதிக்கவும், செழிப்பாக மாற்றி தரும்படியும் ஜெபிக்கிறோம். அவரது சகோதரன் பிரேம் டேவிட் அவர்கள் கேன்சர் வியாதியால் பாதிக்கப்பட்டு, மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அவரை தேவரீர் சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். அவருக்கு இருக்கும் வேதனைகளை மாற்றுவீராக. பெலப்படுத்துவீராக. சுகத்தை தருவீராக.
..
சவுதி அரேபியாவில் உள்ள சகோதரன் சுரேஷ் அவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் ஏழாம் தேதி திருமண காரியங்கள் ஒழுங்காகி இருப்பதால், அவருக்கு லீவு கிடைக்கும்படியாக ஜெபிக்கிறோம். மேலதிகாரிகளின் கண்களில் தயவு கிடைத்து, அவருக்கு ஏற்ற விடுமுறைகளை கொடுக்கத்தக்கதாக ஜெபிக்கிறோம். அவர் இருக்கும் கிராமத்தில் முதல் கிறிஸ்தவ திருமணமாக இருப்பதால், தேவரீருடைய பிரசன்னம் இருந்து அந்த கிராமத்து மக்களின் மத்தியில் ஒரு சாட்சியுள்ள திருமணமாக அமையவும், திருமண தம்பதிகளை நீர் ஆசீர்வதிக்கவும் ஜெபிக்கிறோம்.
..
அமெரிக்காவில் பத்து வருடங்களாய் கர்த்தருடைய ஊழியத்தை செய்து வந்தபோதகர் ராபர்ட் வேதநாயகம் அவர்களுடைய வேலையை ஏதோ காரணத்தினால் ராஜினாமா பண்ண வேண்டி வந்தபடியால், இப்போது வேலையில்லாமல் இருக்கும் அவருக்கு ஒரு நல்ல சபையில் வேலை கிடைக்க கிருபை செய்வீராக. நீதிமானுடைய சந்ததி அப்பத்துக்காக இரந்து திரிவதில்லை என்ற வாக்குதத்தத்தின்படி, உம்முடைய பிள்ளையும்,அவருடைய குடும்பமும் பிரச்சனை இல்லதாபடி வாழும்படியாக ஒரு வேலையை கட்டளையிடுவீராக.
..
சகோதரன் பேதுரு செல்லயா அவர்கள் எழுதி கொண்டிருக்கும் "Cloud Enterprise Architecture" என்னும் புத்தகம் CRC Press, New York-ல் பிரசுரம் ஆக கிருபை தருவீராக. எல்லா தடைகளையும் மாற்றி, அது சீக்கிரமாய் வெளிவர கிருபை செய்யும். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.