Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Saturday, April 14, 2012

மண்பாண்டங்களில் தேவ பொக்கிஷம் - Manpaandangalil deva pokkisham


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 20-ம் தேதி - வியாழக் கிழமை
மண்பாண்டங்களில் தேவ பொக்கிஷம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். - (2 கொரிந்தியர் 4:7).

என் நண்பருடைய வீட்டிலே சிறந்த ஓவியர் ஒருவரால் கொடுக்கப்பட்ட அன்பளிப்பு ஒன்றை பார்த்தேன். அது தெருவிலே விற்கப்பட்ட சாதாரண மண்பானையால் ஆனது. ஆனால் அந்த ஓவியர் தன் கலைத்திறனால் அதன் மீது மரங்களும், தாவரங்களும், பழங்களும், பூக்களும் நிறைந்த ஒரு சோலைவனம் ஒன்றை வரைந்திருந்தார். அதை அவர் வீட்டிற்கு வருகிறவர்கள் கண்டு ரசிக்கும்படியான ஓரிடத்தில் வைத்திருந்தார். அதை காண்கிறவர்கள் அனைவரும் அது எங்கு, என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டது? எனறு கேட்டனர். அது மிகவும் அற்பமான ஒரு மண்பாண்டத்தை மூலப்பொளூக கொண்டு செய்யப்படடது என்பதை அறிந்ததும் மிகவும் வியப்படைந்தனர். அதன் மதிப்பு வெறும் பதினைந்து ரூபாய் தான். ஆனால் அதன் உண்மை மதிப்பை பணத்தினால் அளவிட முடியாது.
.
நாமும் கூட அற்பமான களிமண்ணால் செய்யப்பட்ட மண்பாண்டங்கள்தான். ஆனால் தேவக்குமாரனுடைய இரத்தத்தாலே கிருபையாக மீட்கப்பட்ட வேளையில் தானே மிகவும் ஒப்பற்ற ஓவியராகிய தேவனின் கரங்களில் கொடுக்கப்படுகிறோம். நாம் அறியாத முறையில் நமது புத்திக்கெட்டாத வகையில் தேவன் அவற்றின் மீது விநோதமான அற்புத வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அது ஒரு ஆவிக்குரிய ஓவியமாகும். இவ்வுலக மக்கள் நம்முடைய இலட்சணமில்லாத தோற்றத்தையும், கறுப்பு நிறத்தையும், சப்பை மூக்கையும் வேறு பல குறைபாடுகளையும் கண்டு அருவருக்கலாம். ஆனால் தேவன் அவ்விதமாக பார்ப்பதில்லை. இராப்பகலாக இடைவிடாது தமது சித்தத்தையும், விருப்பத்தையும் நம்மில் நிறைவேற்றி கொண்டே இருக்கிறார். வெகு சீக்கிரத்தில் அதை செய்து முடித்தவராக தம் தூதர்களுக்கும் சகல சிருஷ்டிகளுக்கும் காண்பிப்பார். 'தூதர்களே பாருங்கள், நான் உருவாக்கிய பவுல் என்னும் இந்த பாத்திரத்தையும், பேதுரு, யாக்கோபு, யோவான் என்று அந்த பாத்திரங்களையும் உற்று பாருங்கள்' என்பார். அவர்களோ, வியப்புடன், 'இவர்களை அத்தனை அழகுள்ளவர்களாக, பூரணர்களாக எவ்வாறு சிருஷ்டித்தீர்! அவர்களை நாங்கள் உலகில் பார்த்திருக்கிறோமே, அப்போது அவர்கள் அழகற்றவர்களாக, குறைவுள்ளவர்களாகத்தானே இருந்தனர். மக்களும் இவர்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லையே' என்று கூறுவார்கள். இது கற்பனையல்ல, கதையுமல்ல, வேதாகமம் கூறும் உண்மை! இந்த அருமையான சத்தியத்தை காலஞ்சென்ற பரிசுத்தவான் சகோ பகத்சிங் அவர்கள் கூறியதாகும்.
.
ஒன்றுக்கும் தகுதியில்லாத நம்மை தேவன் எவ்வாறு விண்ணோரும் மண்ணோரும் போற்றும் மகிமையான கிரீடமாக மாற்றுவார்? இந்த உலக வாழ்விலே நம்மை முழுவதும் தேவ கரத்தில் அர்ப்பணிக்கும்போது மாத்திரமே! 'ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்'. - (2 தீமோத்தேயு 2:21) என்று வேதம் கூறுகிறது. எஜமானால் பயன்படுத்தப்படும் பாத்திரமாக நாம் மாற வேண்டுமானால், நம்மை கிறிஸ்துவினுடைய இரத்தத்தால் சுத்திகரித்து கொள்ளும்போது மாத்திரமே, நாம் அவருக்கு பிரயோஜனமான பாத்திரமாக மாற முடியும். குயவனாகிய அவருடைய கரத்தில் களிமண்ணான நம்மை ஒப்படைக்கும்போது, அவர் நம்மை அவருக்கு உகந்த பாத்திரமாக மாற்றுவார்.
.
கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மேற்கண்ட வசனத்தின்படி தங்களை குயவனாகிய தேவனிடத்தில் களிமண்ணாக படைத்து, அவருடைய சித்தத்திற்கு தங்களை வனையும்படி ஒப்புக்கொடுத்ததினால் மாத்திரமே அவரால் பயன்படுத்தப்பட முடிந்தது. அப்படிப்பட்ட பாத்திரமாக நம் ஒவ்வொருவரையும் தேவனே வனைந்து, எஜமானாகிய அவருக்கு பிரயோஜனமுள்ள பாத்திரங்களாக நம்மை மாற்றுவாராக! ஆமென் அல்லேலூயா!
.
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்க செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களை படைத்திட்ட குயவனே, எஜமானாகிய உம்முடைய கரத்தில் எங்களை படைக்கிறோம் தகப்பனே. உமக்கு உகந்த பாத்திரங்களாக எங்களை மாற்றுமே. வேதத்தில் நீர் வல்லமையாக பயன்படுத்தின பாத்திரங்களை போல எங்களையும் இந்த கடைசி நாட்களிலே வல்லமையாக, தேவன் விரும்புகிறபடி பயன்படுத்துமே! எங்களை அர்ப்பணிக்கிறோம், ஏற்று கொள்ளும், வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் நான் அதை தருவேன் என்று வாக்குதத்தம் செய்தவரே, உம்முடைய வாக்குதத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம்.
..
சகோதரன் ஜான் ஜெமினி அவர்கள் 50 வருடங்களாக கடினமாக உழைத்த சம்பாத்தியம் எல்லாம் அவர் ஆரம்பித்த வியாபாரத்தில் நஷ்டமடைந்து, அவர் செய்கிற காரியங்கள் வாய்க்காதே போகிறது என்று எழுதியிருக்கிறாரே தகப்பனே, கர்த்தருக்கு பயந்து அவர் வழிகளில் நடக்கிற மனுஷன் பாக்கியவான், நீ உன் கைகளின் பிரயாசத்தை சாப்பிடுவாய், உனக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் என்று வேத வாக்கியம் கூறுகிறபடி, அவர் உம்முடைய வழிகளில் நடக்கிறபடியால், அவருக்கு பாக்கியமும் நன்மையும் உண்டாகும்படி ஆசீர்வதிப்பீராக. அவருடைய குடும்பத்தார் தங்கும்படி, ஒரு அருமையான வீட்டை அவருக்கு கொடுப்பீராக. அவர் வேதத்தில் பிரியமாயிருந்து, அவர் செய்வதெல்லாம் வாய்க்கும்படியாக தேவன் கிருபை பாராட்டும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி ஜெனிபர், ஸ்டெல்லா கிரேசி அவர்கள் கனடா இமிகிரேஷனுக்கு முயற்சிகள் எடுத்து கொண்டிருப்பதால், அவர்கள் பெண்கள் தானே என்று யாரும் அவர்களை ஏமாற்றி விடாதபடி காத்து கொள்ளும். அவர்கள் அதற்காக எடுத்து கொள்ளும் பிரயாசங்களை வாய்க்க செய்யும். அவர்கள் செலவு செய்யும் பணம் ஒன்றும் வீணாக போய் விடாதபடி காத்து கொள்ளும். எல்லாம் நல்லபடியாக முடிந்து, அவர்கள் அங்கு சென்று உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
..
சகோதரன் வில்சன் ரவி அவர்கள் அடுத்த வாரம் U.K. போவதற்கு விசா அப்ளை செய்ய போவதால், தேவரீருடைய சித்தம் அவர் வாழ்வில் நிறைவேறும்படி ஜெபிக்கிறோம். உம்முடைய வழிநடத்துதலும், உம்முடைய கிருபையும் அவரை சுற்றி சூழ்ந்திருக்க ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் வி.கே மாதவன், அவருடைய மனைவி கஸ்தூரி, அவருடைய மகள் கோகுல சரண்யா, மகன் செந்தில் நாதன் இவர்களுக்காக ஜெபிக்க கேட்டிருக்கிற இந்த சகோதரன் குடும்பத்தை ஆசீர்வதிப்பீராக. இந்து குடும்பத்திலிருந்து அவர்கள் உம்மை நேசிப்பதால், அவர்கள் நீரே ஜீவனுள்ள தேவன் என்பதை அறிந்து உமக்கென்று வாழ கிருபை தாரும். இந்த குடும்பத்தின் தேவைகளை சந்திப்பீராக. பிரச்சனைகள் எதுவும் வராதபடி காத்து கொள்வீராக. உமக்கென்று வாழ கிருபை செய்யும்.
..
பாஸ்டர் ஆபிரகாம், அவருடைய மனைவி ஞானசெல்வி அவர்களுக்காக உம்மிடத்தில் ஜெபிக்கிறோம். அவருடைய சபையை ஆசீர்வதிப்பீராக. சத்தியத்தை சத்தியமாக போதிக்கும் ஞான வரத்தை அவருக்கு கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் செய்யும் ஊழியத்தின் மூலம், சுற்று வட்டாரத்திலுள்ள புறஜாதி மக்கள் சத்தியத்தை அறிந்து கர்த்தருக்குள் வர கிருபை செய்யும். அவருடைய ஊழிய தேவைகளை தேவன் தாமே சந்திக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி கரோலின் யமுனா அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் மாத்திரமே கிறிஸ்தவர்களாக இருப்பதால், அவர்களுக்கு விரோதமாக ஒரு மனிதன் காரியங்களை செய்து கொண்டிருப்பதை அறிகிற தேவனே, உனக்கு விரோதமாக எழும்பும் ஆயுதமும் வாய்க்காதே போகும் என்ற வாக்குதத்தத்தின்படி, உம்முடைய பிள்ளைகளை காத்து கொள்வீராக. அவர்களுக்கு அந்த இடத்தில் சொந்தமாக ஒரு வீடு கிடைக்கவும், மற்றவர்களுக்கு முன்பாக அவர்கள் கிறிஸ்துவே தேவன் என்பதை வெளிப்படுத்தும் வண்ணமாக, மற்றவர்களுக்கு சாட்சியாக வாழவும் கிருபை தருவீராக. அவர்கள் இருக்கும் விக்கிரகங்கள் நிறைந்த நகரமாகிய காஞ்சிபுரத்தை சந்திப்பீராக. அங்கு வாழும் மக்கள் கிறிஸ்துவே தேவன் என்பதை அறிந்து கொள்ள சுவிசேஷத்தின் வாசல்கள் திறக்கப்பட ஜெபிக்கிறோம். சகோதரி கரோலினும் அவர்களுடைய சகோதரி எழுதும் பரிட்சைகளிலும், தேவ கரம் கூட இருந்து, எல்லாவற்றையும் நன்றாக செய்து முடிக்க தேவ ஞானத்தை கொடுப்பீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.