Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

Fish

Search This Blog

Loading...

Friday, April 13, 2012

மன்னிப்பு தரும் சுகம் -Mannippu tharum sugam


This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 டிசம்பர் மாதம் 07-ம் தேதி - புதன் கிழமை

மன்னிப்பு தரும் சுகம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்'. - (மாற்கு 11:25).
.
ஒரு பெண்மணி புற்று நோயினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாள். அவள் அதிக பட்சம் ஆறு மாதங்களே உயிரோடிருப்பாள் என மருத்துவர்க்ள கூறி விட்டனர். ஒரு நாள் மருத்துவர்கள் சொன்ன முடிவை தனது 12, 14 வயது மகன்களிடம் தெரிவித்தாள். உடனே மூத்தவன் ஒரு வேதாகமத்தை கொண்டு வந்து தாயின் அருகில் அமர்ந்து மாற்கு 11:24-ம் வசனத்தை வாசித்தான். 'ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்'. 'இந்த வார்த்தையின்படி நாம் ஜெபிப்போம் அம்மா, கர்த்தர் உங்களுக்கு சுகத்தை தருவார்' என்று கூறினான். அந்த வசனத்தை கேட்டவுடன் அந்த தாய் மிகவும் ஆச்சரியப்பட்டாள். அவள் ஒரு கிறிஸ்தவளாயிருந்தாலும் இந்த வசனம் வேதத்தில் இருப்பத்தை அறிந்திருக்கவில்லை. அன்றிரவு படுக்கைக்கு செல்லும் முன் மகன் வாசித்த வேத வசனத்தை எடுத்து வாசித்தாள். அதை தொடர்ந்துள்ள வேத வசனங்களையும் வாசிக்க தூண்டப்பட்டாள். 'நீங்கள் நின்று ஜெபம் பண்ணும்போது, ஒருவன் பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்' இவ்வசனம் அவளோடு இடைபட ஆரம்பித்தது. அவளுடைய உறவினர்கள் பேரில் அவளுக்கிருந்த மன்னிக்க முடியாத நிலைமையை அவளுக்கு உணர்த்திற்று.
.
தன் உறவினர்கள் அனைவரையும் மன்னிக்க தனக்கு உதவிசெய்யம்படி கர்த்தரிடம் மனங்கசந்து அழுது மன்றாடினாள். என்ன ஆச்சரியம்! அநேக மாதங்களாக நித்திரையின்றி கஷ்டப்பட்ட தாய் ஒரு குழந்தை தன் தாயின் கரங்களில் உறங்குவது போல அன்றிரவு நன்றாக உறங்கினாள். மறுநாள் காலையில் தான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர்ந்து மருத்துவரை காண சென்றாள். புற்று நோய் முற்றிலும் அற்று போயிருப்பதை கண்டு மருத்துவர்கள் பிரமிப்படைந்தனர். இப்போது நல்ல சுகத்துடன் அந்த சகோதரி புற்று நோயாளிகள் மத்தியில் ஊழியக்காரியாக தொண்டு செய்து வருகிறார்கள். எல்லா புற்றுநோயும் மன்னிக்காததினால் தான் வருகின்றது என்று சொல்ல முடியாது. மன்னிக்காததினாலும் வரலாம் என்பதற்கு இது ஒரு சாட்சி.
.
'மன்னிப்பு' என்பதற்கு கிரேக்க பதத்திற்கு 'விடுதலையாக்குதல்' என்ற அர்த்தமும் உண்டு. நமக்கு விரோதமாக தவறிழைத்தவர்களை மன்னிப்பதின் மூலமாக நாம் அவர்களை விடுதலையாக்குவதோடு மட்டுமல்லாமல், நம்மையும் விடுவித்து கொள்கிறோம். மற்றவர்களை முழு இருதயத்தோடும் மன்னிக்க முடியாதவர்களால் மெய்யான விடுதலையை ஒருபோதும் அனுபவிக்க முடியாது. பிறரை மன்னிக்க முடியாதவர்கள் கோபம், பழிவாங்குதல், கசப்பு, சீற்றம் முதலான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களால் நிறைந்த நோய் கொண்ட ஒரு உலகமாகவே காணப்படுவார்கள். உடனுக்குடன் மன்னித்து தங்களுடைய இருதயத்திலிருந்து அன்புகூரக்கூடிய ஒரு கூட்ட ஜனங்கள் தேவனுக்கு தேவையாயிருக்கிறார்கள். அவர்களையே அவர் வல்லமையாக பயன்படுத்துகிறார்.
.
மன்னித்தல் நொறுங்கிய இருதயங்களை குணமாக்கும். முறிந்து போன விவாகங்களை இணைத்து விடும். சிதைந்து போன வாழ்க்கையை சீர்ப்படுத்தி விடும். தகர்ந்து போன குடும்பங்களை ஒன்றாக்கி விடும்;. மன்னிக்கும் ஜனங்களுக்கு மாத்திரமே ஒளிமயமான எதிர்காலம் உண்டு. இவர்கள் மட்டுமே சிறந்ததொரு வருங்காலத்தை மற்றவர்களுக்கு வழங்கக்கூடும்.
.
பிறரை மன்னிக்க முடியாதவர்கள் மரிக்கும்போது கூட பற்களை கடிக்கின்றனர் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் நம்முடைய அருமை ஆண்டவர் இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி கொண்டிருக்கும்போது கூட 'பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்று சொல்லி தமக்கு விரோதமாக தம்மை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். பிறரை மன்னித்தவர்களால் மாத்திரமே தங்கள் ஆவியை பிதாவின் கரங்களில் சமாதானத்துடன் ஒபபு கொடுக்க முடியும். பிறரை மன்னிக்க முடியாதவர்கள் கசப்பான எண்ணங்களுடனேயே புறம்பான இருளுக்குள் கடந்து செல்வார்கள். ஆகவே மற்றவர்களை மன்னிப்போம், இந்த வாழ்விலும், மறுமையிலும் சந்தோஷமாய் நாம் வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!
.
என்னை மன்னித்தது போல

மற்றவர்களை நானும் மன்னிக்கணுமே

என் அன்றாட உணவை

அனுதினமும் தர வேண்டுமே

இயேசு மகராஜனே மீண்டும் வந்திடுவீரே

உம் மக்களாய் கூடி வந்துள்ளோம்

உம் மகிமையை தரிசிக்க


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்களை மன்னித்து, எங்கள் ஆத்துமா நரகாக்கினையில் விழுந்து விடாதபடி, பரலோக ராஜ்யத்திற்கு தகுதிபடுத்தினீரே உமக்கு எங்கள் நன்றி ஐயா. நாங்களும் மற்றவர்களுக்கு மன்னிக்க எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் மற்றவர்களுக்கு மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்கிற கர்த்தரின் ஜெபத்தை உணர்ந்து சொல்கிறவர்களாக எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள்ஜெபத்தை கேட்பதற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் நேச தந்தையே உமது பரிசுத்த குமாரன் இயேசுகிறிஸ்து 'ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்' என்று சொன்ன வாக்குதத்தத்தின்படி நாங்கள் விசுவாசத்தோடு எங்கள் ஜெபங்களை உம்மிடத்தில் ஏறெடுக்கிறோம் தகப்பனே,
..
சகோதரி ஜேஸ்லின் அவர்களின் கணவருக்கு வேலையிடத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கவும், அந்த வேலையில் நல்ல முன்னேற்றத்தை காணவும், அவர் வேலை செய்யும் இடத்தில் காணப்படும் எல்லா தொய்வுகளையும் மாற்றி, அந்த இடம் செழிப்பாக மாற ஜெபிக்கிறோம்.
..
தன் கணவரை பத்து வருடங்களாக பிரிந்து தனிமையிலிருக்கும் சகோதரிஷீபா ஜஸ்டஸ் அவர்கள் தன் கணவரோடு சேர்ந்து வாழ தேவன் கிருபை செய்வீராக. எல்லா பிரச்சனைகளையும் மாற்றி, மன்னித்து மறந்து, குடும்பமாக சேர்ந்து வாழ கிருபை செய்வீராக.
..
கேம்பஸ் குருசேடில் இருக்கும் சகோதரன் சார்லஸ் அவர்களின் தாயார் புஷ்பம் அவர்கள் கிட்னி வேலை செய்யாததால், டயாலிஸ் செய்து கொண்டிருக்கிறார்களே, அவர்களுடைய வேதனைகள் யாவையும் அறிந்த தேவன் நீரல்லவா தகப்பனே, தயவாய் அம்மாவிற்கு சுகத்தை கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம். வேதனைகள் நீங்கி சுகமாயிருக்க கிருபை செய்யும். பரிபூரண சுகத்தை கட்டளையிடுவீராக.
..
சகோதரி கலீஸ்வரி அவர்களின் தகப்பனார் வியாதியின் நிமித்தம் படுகிற பாடுகளை அறிந்த தேவன் அவருக்கும் நல்ல சுகத்தை கட்டளையிடும். எந்த வியாதியாயிருந்தாலும் நீர் தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் காட்பிரே (Godfrey) அவர்கள் வரும் வாரத்தில் Cognizant Technology Solutions கம்பெனியில் நடக்க இருக்கும் பரிட்சையில் கலந்து கொள்ள இருப்பதால், தேவ சித்தம் அவருடைய வாழ்வில் நிறைவேறும்படி, உமக்கு சித்தமானால் அந்த வேலை அவருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் கிடைக்கும்படி ஜெபிக்கிறோம். அவருடைய சிந்தனைகளையும், எண்ணங்களையும் தூய்மையாக பாதுகாத்து கொள்ள உதவும். இந்த வாலிப வயதில் உமக்காக வாழ கிருபை செய்யும்.
..
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் சகோதரி ஜெரி சத்யா அவர்களுக்கு திருமணம் ஜனவரி மாதம் 4-ம் தேதி நிச்சயக்கப்பட்டிருப்பதால், அவர்கள் இந்த மாதம் 14-ம் தேதிக்குள் இந்தியாவிற்கு செல்ல தீர்மானித்திருந்தும், அவர்கள் வேலை செய்யும் கம்பெனியில் ஸ்பான்சர்ஷிப் மாற்றாததால் இருக்கும் பிரச்சனைகளை தேவரீர் தாமே மாற்றுவீராக. யார் யார் கண்களிலே தயவு கிடைக்க வேண்டுமோ அவர்கள் கண்களில் தயவு கிடைக்கவும், குறிப்பிட்ட நாளுக்குள் ரிலீஸ் கிடைத்து அவர்கள் இந்தியா போய் சேரவும் தேவன் தாமே கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
..

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.