Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் - Kelungal tharappadum thattungal thirakkapadum Lyrics


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு 
தேடுங்கள் கிடைக்குமென்றார் 
பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள்

/heartஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே 
ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்  
இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே 
எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள்

/heartஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே  (2) 
பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே 
இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே  (2) 
இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே 
இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள்

/heartதந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே 
தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே 
நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா  சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் 
எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு 
ஒன்றாக பதிந்து விட்டார்
அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு 
ஆண்டவன் தொண்டு என்றார்

/heartமுப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே 
யோவான்  என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே 
ஞானஸ்தானமும் பெற்றாரே 
துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2)
இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே 
முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே.

/heartஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே 
தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2)
சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்
Video:

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.