Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

இருக்கிறவண்ணமாகவே வருவோம் - Irukiravannamaagave varuvom


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 21-ம் தேதி - வெள்ளி கிழமை
இருக்கிறவண்ணமாகவே வருவோம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
மனுஷனுடைய வழிகளெல்லாம் அதன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். - (நீதிமொழிகள் 16:2).

கெட்ட குமாரன் என்ற தலைப்பில் தான் வரைய வேண்டிய ஓவியத்திற்காக நல்ல ஒரு மாடலை தேடி நியூயார்க் நகர வீதிகளில் அந்த ஓவியன் அலைந்து திரிந்தார். ஒரு நாள் அவர் ஒரு பார்க் வழியாக செல்லும்போது அங்கு படுத்திருந்த ஒரு ஏழையான பிச்சைக்காரனை கண்டு, அவன்தான் தான் தேடி கொண்டிருக்கும் சரியான மாடல் என்று நினைத்து மகிழ்ந்தார். அவனிடம் சென்று தான் வரையும் ஓவியத்திற்கு அவன் உட்கார்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அதற்கு தகுந்த பணம் தருவதாகவும் கூறினார். அதற்கு அந்த பிச்சைக்காரனும் சம்மதித்தான்.
.
குறிப்பிட்ட அந்த நாளில் ஓவியரின் வீட்டு வாசலில் ஒரு மனிதன் நன்றாக உடை உடுத்தி வந்து கதவை தட்டினான். கதவை திறந்த ஓவியர் 'நீங்கள் இடம் மாறி வந்திருக்கிறீர்கள். நீங்கள் தேடும் நபர் நான் அல்ல' என்று கூறி கதவை மூட முயன்றார். வெளியில் நின்றிருந்தவர், 'ஐயா, நான்தான் அந்த பிச்சைக்காரன். நீங்கள் என்னை ஓவியமாக வரைய வேண்டுமென்று சொன்னதால், நான் குளித்து, முகச்சவரம் செய்து புதிய உடை உடுத்தி நேர்த்தியாக வந்திருக்கிறேன்' என்றான். மனதில் அதிருப்தி அடைந்த ஓவியர், 'நான் வரையும் ஓவியத்திற்கு நீ தகுதியானவன் அல்ல' என்று திருப்பி அனுப்பி விட்டார். அந்த பிச்சைக்காரன் தன்னை தகுதியுள்ளவனாக காட்ட விரும்பினான். ஆனால் ஓவியரோ அவன் இருந்த வண்ணமாகவே அவனை சிறந்த ஓவியமாக தீட்ட விரும்பினார்.
.
இதைப்போலத்தான் நாமும் தேவனுக்கு முன்பாக வரும்போது, நமது சுயநீதிகளினால் நம்மை அலங்கரித்து கொண்டு வரக்கூடாது. அதாவது தேவ சமுகத்தில் முழங்கால்படியிடும்போது, 'இம்மாதம் தசமபாகம் செலுத்தி விட்டேன், என் வீட்டிலே நான் தான் நல்லவன், என் பிள்ளைகளை நான் நன்றாக வளர்த்திருக்கிறேன், நான்தான் தினமும் சரியாக ஜெபிக்கும் பழக்கமுள்ளவன், நான் எல்லவற்றிலும் சரியாக இருக்கிறேன்' என்பது போன்ற சுயநீதிகளால் அலங்கரித்து கொண்டு, வரும்போது தேவன் நம்மில் கிரியை செய்யவே முடியாது. நம்மை பரிசுத்தப்படுத்தவும் முடியாது. ஆனால் அவருக்கு முன்பாக எந்த ஒளிவு மறைவுமின்றி, சுயபெருமையுமின்றி இருக்கிற வண்ணமாக இயல்பாகவே வர வேண்டும்.
.
'தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு' (நீதிமொழிகள் 30:12) என்று வேதம் கூறுகிறது. தங்கள் பார்வைக்கு அவர்கள் நீதிமான்கள் போன்று தோன்றுகிறார்கள். என்னை போன்று பரிசுத்தமுள்ளவன் யார்? என்று நினைத்து கொள்கிறார்கள். நாம் வாழும் இந்த உலகம் பாவங்களும், இச்சைகளும், அசுத்தங்களும் நிறைந்தது. கொடுமை நிறைந்தது. அப்பேற்பட்ட உலகத்தில் வாழுகிற நம்மேல், அதன் தூசி நிச்சயமாய் பட்டிருக்கும். ஏதாவது ஒரு வகையில், நம் பேச்சிலோ, நடத்தையிலோ நம்மை அறியாமல் பாவத்தில் விழுந்திருக்கலாம். ஆகையால்; ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய கிருபையினால், அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக வாழ வேண்டும்.
.
பிரியமானவர்களே, நாம் எவ்வளவு அலங்கரித்து கொண்டு வந்தாலும் நம்முடைய குறைவுகள், பெலவீனங்கள் எல்லாம் நம் தேவனுக்கு தெரியும். நம்மால் எதையும் அவரிடம் இருந்து மறைக்க முடியாது. ஆகவே நாம் திறந்த மனதோடு, ' தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று ஜெபித்து அவருடைய கிருபைக்காக காத்திருக்கும்போது, தேவன் நம்மை மார்போடு சேர்த்து அணைத்து, நம்மை ஏற்று கொள்வது நிச்சயம். நாம் நம்மை இருக்கிற பிரகாரமாகவே அவரிடத்தில் வந்து, அவருடைய கிருபையை பெற்று வாழும்படியாக தேவன் தாமே கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!
.

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தன் பெலனுடன்
சேவை செய்ய கிருபை தாருமே
..
தம் கிருபை பெரிதல்லோ
என் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே




ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் இருக்கிற வண்ணமாகவே உம்முடைய சமுகத்தில் வருகிறோம் தகப்பனே. எங்களிலே காணப்படும் பெருமைகள், சுயநீதிகள், எங்கள் அந்தஸ்து எல்லாமே உமக்கு முன்பாக ஒன்றுமில்லை, அழுக்கான கந்தைகள் என்று அறிந்து உணர்ந்து, உம்முடைய நீதியையே சார்ந்து வருகிறோம் ஐயா. எங்களை ஏற்று கொள்ளும். வழிநடத்தும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் ஜெபங்களை கேட்டு பதில் கொடுக்கிற நல்ல தகப்பனே, சகோதரிஇந்து ராஜீவ் அவர்களின் கிராமத்தில் நடைபெறும் கர்த்தருடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பீராக. கிராமத்து மக்கள் கர்த்தரே தெய்வம் என்பதை அறிந்து கொள்ள கிருபை தாரும். அந்த ஊழியங்களை நடத்தும் போதரைஆசீர்வதியும். அவருடைய பிள்ளை சிவரஞ்சனி, சந்தியா உஷா இவர்கள் எழுத இருக்கும் பரிட்சையில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற தேவன் இவர்களுக்கு கிருபை செய்வீராக.
..
சகோதரன் அபின் அவர்களின் சகோதரி அனுபா அவர்களின் திருமணம் வரும் நவம்பர் மாதம் 7ம் தேதி நடக்க இருக்கிற திருமணத்தில் தேவ பிரசன்னம் இருந்து வழிநடத்தும்படியாக ஜெபிக்கிறோம். திருமண தேவைகளை தேவன் சந்திக்கும்படியாக ஜெபிக்கிறோம். ஆசீர்வாத குடும்ப வாழ்க்கையை கட்டளையிடுவீராக.
..
நைஜீரியாவில் ஒரு ஆலயத்தை இஸ்லாம் தீவிரவாதிகள் நெருப்பிட்டு கொளுத்தி, அதில் இருந்த விசுவாசிகள் எல்லாம் கருகி இரத்த சாட்சிகளாய் மரித்ததை நாங்கள் கண்டு, எங்கள் சக விசுவாசிகளுக்கு நேரிட்ட இந்த அநியாயத்தை உம்முடைய கரத்தில் வைக்கிறோம் தகப்பனே, கண்ணோக்கி பாரும் ஐயா! கிறிஸ்தவர்களை கொல்லுவது அவர்களுக்கு அத்தனை எளிதாக இருக்கிறதே தகப்பனே, இந்த உலகத்தின் பாவ சாபங்களிலிருந்து எங்களை மீட்டு விட இயேசுவே சீக்கிரமாய் வாரும், எங்களை உம்மிடத்தில் சேர்த்து கொள்ளும். அநீதி நிறைந்த இந்த உலகத்தில் நியாயம் செய்ய சீக்கிரமாய் வாரும். இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.