Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, April 14, 2012

இலக்கை நோக்கி ஓடுவோம் - Ilakkai nokki oduvom


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 13-ம் தேதி - வியாழக் கிழமை
இலக்கை நோக்கி ஓடுவோம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். - (பிலிப்பியர் 3:13-14).


வேட்டையாடுவதில் அதிக ஆர்வமுள்ள ஒரு இராஜா நல்ல வேட்டை நாய் ஒன்றை வாங்கினார். மிகப்பெரிய விலங்குகளை எல்லாம் வேட்டையாட வேண்டும் என்ற ஆவலோடு நாயுடன் காட்டிற்கு சென்றார். அந்த வேட்டை நாய் முதலாவது ஒரு சிங்கத்தினை துரத்தி சென்றது. நாம் வாங்கியது மிகவும் திறமை வாய்ந்ததுதான் என்று எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் சிறிது தூரம் சென்றதும் அது ஒரு கரடியை துரத்தியது. என்ன இது, சிங்கத்தை விட்டுவிட்டு கரடியை துரத்துகிறதே, சரி கரடியையாவது சுட்டுவிட வேண்டும் என்று எண்ணி, ராஜா துப்பாக்கியை எடுத்தார். அதற்குள் அந்த வேட்டை நாய் ஒரு முயலை கண்டு அதை துரத்த ஆரம்பித்தது. ராஜாவிற்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது. இந்த முயலை பிடிப்பதற்காகவா நான் வேட்டை நாயை வாங்கினேன் என்று எண்ணி ராஜா சோர்வடைந்தார்.
.
இதே போலத்தான் நம் ஒவ்வொருவரையும் தேவன் ஒரு இலட்சியத்தோடு இந்த உலகில் படைத்து இம்மட்டும் வாழ வைத்திருக்கிறார். உயர்ந்த இலட்சியத்திற்காக உருவாக்கப்பட்ட நாம் எதை நோக்கி ஓடி கொண்டிருக்கிறோம்? பாதையும் பார்வையும் சரியாக இருந்தால் நம் வாழ்க்கையை வெற்றியோடு ஓடி முடிக்கலாம். பாதையை விட்டு பக்கங்களில் கவனம் வைத்தால் விபத்து நேரிடுவது எளிதாகும்.
.
நம் வாழ்வில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை நியமிக்கப்பட்டடிருக்கிறது. நமக்கு நியமிக்கப்பட்டிரு;கிற பாதையில் தடம் புரளாமல் முன் செல்ல வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போன்று நம் சிந்தையில் கற்பனை செய்துகொள்வோம். ஓடுகிற பாதையில் நம் முன் பணம், புகழ், வெற்றி, தோல்வி என எது வந்து நின்றாலும் நாம் அதில் மயங்கியோ சோர்ந்தோ அப்படியே நின்று விடக்கூடாது. நம் அருகில் ஓடுகிறவர்களை கவனித்துக் கொண்டேயும் ஓட வேண்டாம். அவர்களின் குறைகளையே பார்த்து பார்த்து நமது குறைகளை கவனிக்காமல் விட்டு விடுவோம்.
.
சிலருக்கு ஓட்டத்தின் ஆரம்பம் நன்றாக இருந்திருக்கலாம். சிலர் பாதி தூரம் நன்றாக ஓடியிருந்திருக்கலாம். ஆனால் முடிவு வரை ஓடி முடிப்பவர்களுக்கே வெற்றி. ஓட்டத்தை வேகமாய் ஆரம்பித்த அநேகர் பாதி வழியில் நின்று விடுகின்றனர். பக்கமாய் விலகி விடுகின்றனர். இதை வாசிக்கிற நாம் எப்படி ஓடி கொண்டிருக்கிறோம்?
.
வேதத்திலே தக்பபனை ஏமாற்றிய யாக்கோபின் வாழ்க்கை பாதையை பார்ப்போமானால் எத்தனையோ ஏமாற்றங்கள், தோல்விகள், இழப்புகள் ஆகியவற்றை சந்தித்ததை பார்க்கிறோம். ஆனால் தேவனோடு ஐக்கியப்பட்டு எல்லாவற்றையும் சரிபடுத்துகிறார். விடாப்பிடியாக தேவனிடத்தில் மன்றாடி ஆசீர்வாதத்தையும் பெற்று கொண்டார். நாமும் பாதையில் தவறியிருந்தாலும், திசை மாறி சென்றிருந்தாலும் இருக்கிற வண்ணமாகவே தேவனிடத்தில் வருவோமானால் தேவன் நம்மை சரிப்படுத்தி வாழ்க்கை பாதையில் சீராய் ஓட செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
எத்தனைதான் இடறல்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இன்ப பாதையிலே நான் ஓடுகிறேன்
..
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் (2)
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரிசுத்தமுள்ள தகப்பனே, தேவரீர் எங்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் எத்தனை இடர்கள் வந்தாலும், எத்தனை சோதனைகளோ, பிரச்சனைகளோ வந்தாலும், பாதையை விட்டு நாங்கள் விலகி விடாமல், இலக்கை நோக்கி ஓடி முடிக்க கிருபை செய்வீராக. ஒரு வேளை பாதையை விட்டு விலகியிருந்தால் மீண்டும் எங்களை சேர்த்து கொள்கிற, யாரையும் தள்ளி விடாத உம்மிடத்தில் வந்து சேர்ந்து, சீராய் ஓட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்களை நேசித்து வழிநடத்துகிற நல்ல தகப்பனே, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள் என்று வாக்குதத்தம் செய்தவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
..
சகோதரி கிறிஸ்டினா அவர்களின் எட்டு வயது மகள் பிரிசிஸ்லாவிற்கு கடந்த பத்து நாட்களாக இருக்கிற காய்ச்சலிலிருந்து சுகத்தை கட்டளையிடுவீராக. எந்த வகையான காய்ச்சலாக இருந்தாலும் அவை அந்த பிள்ளையின் சரீரத்தை விட்டு விலகும்படியாக இயேசுவின் நாமத்தில் கட்டளை கொடுக்கிறோம். பரிபூரண சுகத்தை கட்டளையிடுவீராக.
..
சகோதரி இந்து ராஜீவ் அவர்களின் முழு குடும்பமும் கர்த்தரை அறிந்து ரட்சிக்கப்பட கிருபை செய்வீராக. அந்த சகோதரியின் வாஞ்சையை அறிகிற தேவன் அந்த குடும்பம் இரட்சிக்கப்படவும், அவர்கள் இருக்கிற கிராமம் முழுவதும் கர்த்தரை அறிகிற அறிவிற்குள் வரவும் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். சுவிசேஷத்திற்கு கீழ்ப்படிகிற இருதயத்தை அந்த கிராம மக்கள் அனைவருக்கும் கட்டளையிடுவீராக.
..
சகோதரர் கிறிஸ்டோபர் ஞானராஜ் அவர்களின் சகோதரி கமலி கிறிஸ்டினா அவர்களுக்கு ஏற்ற துணையை, இரட்சிக்கப்பட்ட ஒரு மகனை கணவராக கொடுக்கும்படியாக உம்மிடத்தில் மன்றாடுகிறோம். தேவரீர் கிருபையாய் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு குடும்ப வாழ்க்கையை அந்த சகோதரிக்கு கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
இலங்கையில் உள்ள சகோதரி மேரி மகேந்திரன் அவர்களின் நண்பர்சதீஸ், பிரியா ராஜசிங்கம் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற பிரச்சனைகளை தேவன் தாமே நீக்கும்படியாக ஜெபிக்கிறோம். விவாக ரத்து வரை சென்றுள்ள பிரச்சனைகளை நீர் தாமே நீக்கி இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ தக்கதாக, சேர்ந்து வாழும்படியாக கிருபை செய்வீராக. பிரச்சனைகளை மாற்றுவீராக.அவர்ளின் நான்கு வயது மகன் பானுஜாவின் எதிர்காலத்தை ஆசீர்வதிக்கும்படியாகவும், அவர்கள் குடும்பமாக சேர்ந்து வாழும்படியாகவும் கிருபை செய்யும்.
..
சகோதரன் மார்க் அவர்களின் தாத்தா நடந்து சென்று கொண்டிருக்கும்போது விழுந்து தலையில் அடிபட்டு, ஆஸ்பத்திரியில் இருப்பதால், தேவன் தாமே அவரை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். பரிபூரண சுகத்தை பெற்று சீக்கிரமாய் வீடு வந்து சேரும்படியாக கிருபை செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.