Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 15, 2012

அருமையான குடும்பம் ஒரு அழகிய தோட்டம் -Arumaiyaana kudumbam oru azhagiya thottam


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 அக்டோபர் மாதம் 28-ம் தேதி - வெள்ளி கிழமை
அருமையான குடும்பம் ஒரு அழகிய
தோட்டம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் 

அன்புகூருகிறான். - (எபேசியர் 5:28ன் பின்பகுதி).


நீங்கள் ஒரு நாள் இரண்டு வீடுகளுக்கு போகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். ஒரு வீட்டில் உள்ள தோட்டம் அருமையானதாய் இருக்கிறது. அடுத்த வீட்டு தோட்டத்திலே எங்கு பார்த்தாலும் களைகளும், முட்செடிகளும், காய்ந்த புல்லுகளுமாயிருந்தது. இரண்டும் பக்கத்து பக்கத்து வீடுகள்தான். என்ன வித்தியாசம் பாருங்கள்! தேவன் பட்சபாதமுள்ளவராயிருந்து இவருக்கு அருமையான தோட்டத்தையும், அவருக்கு பிரயோஜனமற்ற தோட்டத்தையும் கொடுத்து விட்டாரோ? இல்லை. முதல் வீட்டிலுள்ள கணவனும், மனைவியும் அருமையான ஒரு தோட்டத்தை உருவாக்க அநேக மணி நேரங்கள் பிரயாசப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு தோட்டங்களும், இரு வேறு திருமண வாழ்வை சித்தரிக்கிற படம் போன்றது. ஒரு திருமணம் அருமையான ஒரு தோட்டம் போல் இருக்கிறது. அங்கேயும் அநேக களைகள் இருந்தன. ஆனால் அதையெல்லாம் அவர்கள் அன்றன்றே பிடுங்கி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் களைகள் முளைக்கும்போதே அவை பிடுங்கப்பட்டு விட்டன.
.
அதன் பொருள் என்னவென்றால், இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்ட தீவிரமாயிருந்தனர். பிரச்சனையை வளர விடவில்லை. அன்றைக்கே அப்பொழுதே மன்னிப்பு கேட்டு, அதை மறந்து அடுத்த காரியத்தை குறித்து பேச ஆரம்பித்து விட்டனர். ஆகவே தான் அவர்கள் திருமண வாழ்வாகிய தோட்டம் அருமையாக காணப்பட்டது.
.
தேவன் ஒவ்வொருவருக்கும் அருமையான தோட்டத்தை போன்று திருமண வாழ்க்கையை தருகிறார். அதை அழகாக ஒரு நல்ல கனி தரும் தோட்டமாக மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது. அதற்காக நேரம் எடுத்து, தண்ணீர் பாய்ச்சி, எரு இட்டு, களைகளை பிடுங்கி வேலி அடைத்து காத்து கொள்ளும்போது, அந்த தோட்டம் நல்ல கனிதரும் மரங்களையும், செடிகளையும் கொடுத்து அருமையான தோட்டமாக மாறுகிறது. அதுபோல குடும்பத்திற்காக நேரம் எடுத்து, மனைவி பிள்ளைகளுக்காக நேரம் கொடுத்து, அவர்களின் தேவைகளை சந்தித்து, தேவையானவற்றை வாங்கி கொடுத்து, குடும்பமாக தேவ சமுகத்தில் காத்திருந்து ஜெபித்து, பிள்ளைகளுக்கு வேதத்தை குறித்து போதித்து, கர்த்தருடைய வழியில் நடத்தும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக உருவாகிறது.
.
அதே சமயத்தில் களைகளை வளரவிட்டு, தண்ணீர் கூட பாய்ச்சாமல் இருந்தால் அந்த தோட்டத்தின் செடிகள் வளரவது எப்படி? ஒரு அன்பான வார்த்தைக்கூட பேசாமல் ஒரு கணவன் இருந்தால் அவனை நம்பி வந்த மனைவிக்கு எப்படி இருக்கும்? எப்போது பார்த்தாலும் கோபம், கோபம், எதற்கெடுத்தாலும் கையை ஓங்குதல் போன்றவை இருந்தால் அந்த குடும்பம் எப்படி அழகான தோட்டமாக இருக்க முடியும்? கிறிஸ்தவர்களாக இருந்தாலும் மனைவியை அடிக்கிற கணவர்கள் எத்தனை பேர்? உண்மையிலேயே வேதனையான விஷயம்! வீட்டிலே சாட்சியை காத்து கொள்ளாமல் வெளியே போய் சாட்சி சொன்னால் அது யாருக்கும் பிரயோஜனமாயிருக்காது.
.
குடும்ப வாழ்க்கையிலே எப்போது வேண்டுமானாலும் சமாதானத்தை குலைக்கும் காரியங்கள் ஏற்படலாம். பிரச்சனை, கசப்பு, கோபம் வரலாம். ஆனால் அவற்றை உடனே களைந்து, மன்னிப்பு கேட்க வேண்டி இருந்தால் கேட்டு, உடனுக்குடன் சரி செய்து விடும்போது, அது மீண்டும் சந்தோஷத்தை கொடுக்கும் வீடாக மாறுகிறது.
.
தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான் என்று வேதம் கூறுகிறது. நாம் நம்மில் அன்புகூருவதால்தானே, வேளாவேளைக்கு சாப்பிடுகிறோம், நம் உடல் நலத்தில் கவனம் செலுத்துகிறோம். அதை போலவே நாம் நம் மனைவியின் மீது அன்புகூர வேண்டும். திருமணத்திற்கு பின் கணவனும் மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். கணவன் வேறு, மனைவி வேறு என்று இல்லை. ஆகவே ஒருவருக்கொருவர் செய்யும் தவறுகளை விட்டு கொடுத்து, மன்னித்து வாழும்போது, அந்த குடும்பம் ஒரு அழகிய தோட்டமாக மாறி விடுகிறது.
.
பிரியமானவர்களே, நாம் ஒருவரையொருவர் மன்னித்து விடாதிருக்கும் பட்சத்தில், களைகள் வளர்ந்து, முடசெடிகள் செழித்து, வளர்ந்து தோட்டத்தையே பாழாக்கி விடும். ஆகவே சூரியன் அஸ்தமிக்கும் முன்பாக நம் கோபம் மறையட்டும். மறுநாள் மறுநாள் என்று பிரச்சனையை இழுத்து கொண்டே போவாமானால், பிரச்சனைக்கு முடிவே வராது. வளரும் களைகளை அன்றே பிடுங்குவோம், பிரச்சனைக்கு உடனே முடிவு கட்டுவோம். தேவன் தாமே அதற்கு உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!
.
நல்ல குடும்பம் நீர் தந்தீரையா

செல்ல பிள்ளைகள் தந்தீரையா

அணைக்கும் கணவரை தந்தீரையா

அன்பு மனைவியை தந்தீரையா
..
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே


ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல என்று குடும்பமாக அவனை சேர்த்து வைத்து அந்த குடும்பத்தில் பிரியப்படுகிற நல்லவரே, அந்த குடும்பத்தை ஒரு அழகிய தோட்டமாக மாற்றவும், சபைக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும் குடும்பமாக வாழவும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீரே தலைவராக இருந்து நடத்துவீராக. மனைவியை எந்த காரணத்தை கொண்டும் அடிக்காதபடிக்கு ஞானத்தை தருவீராக. தன் சொந்த சரீரத்தை சிநேகிப்பது போல மனைவியையும் நேசிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் ஜெபத்தை கேட்பவரே, எங்கள் சந்தோஷம் நிறைவாகும்படி பதிலை கொடுப்பவரே, உமக்கே எங்கள் நன்றிகள் ஐயா. சகோதரன் பிரதீப் அவர்களின் சகோதரன் பிரிட்டோ விஜய் சரியாக படிக்காததால் அதினால் வேலையில்லாமல் இருப்பதால், அவருக்கு ஒரு நல்ல வேலையை கொடுப்பீராக. அவருக்கு திருமணமும் ஆகிவிட்டதால், ஒரு வேலையை கொடுத்து அந்த குடும்பத்தை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். குழந்தை பாக்கியத்திற்காகவும் அவர்கள் ஜெபிக்க கேட்டிருக்கிறபடியால், ஏற்ற வேளையில் அந்த கிருபையையும் கொடுத்து, அவர்களை ஆசீர்வதிப்பீராக.
..
சகோதரர் இஸ்ரேல் பாண்டியராஜ் அவர்களின் மருமகள் ஜாய் கிருபாவிற்கு நவம்பர் மாதம் இரண்டாம் வாரம் பிரசவ நாள் இருப்பதால், தாய்க்கு நல்ல சுகத்தை கட்டளையிடுவீராக. சுகபிரசவத்தை கட்டளையிடும். குழந்தை ஆரோக்கியமானதாக, சுகபிரசவத்தில் பெற்றெடுக்க கிருபை செய்யும்.
..
சகோதரி மரியா மேரியின் சகோதரியின் மகள் சாஜின் மேரி நேற்றைய தினம் தனது மூன்றாவது பிறந்த நாளை காண செய்த தயவிற்காக உமக்கு நன்றி தகப்பனே. குழந்தையை ஆசீர்வதியும், சிறுவயதிலிருந்தே தேவனுக்கு பயப்படும் பயத்தையும், பெற்றோருக்கு கீழ்ப்படியும் குணத்தையும் கட்டளையிடும்.
..
டாக்டர் கதிர்வேல் பாண்டியன் அவர்களின் நண்பரின் நண்பர் சுபாஷிற்கு விபத்து ஏற்பட்டு, தலையில் அடிபட்டு, மூளை வேலை செய்யவில்லை என்று வைத்தியர்கள் கூறினாலும், உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே தகப்பனே, மனிதனால் முடியாதது உம்மால் கூடுமே, அந்த மூளை நரம்புகளை தொட்டு, திரும்ப அது உயிர்த்து வர கிருபை செய்வீராக. அவருடைய குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்து, அவர்களின் விசுவாசத்தை வர்த்திக்க செய்வீராக.
..
சகோதரன் ஜான் ஐசக் அவர்கள் 13 வருடங்களாக பீஹாரில் ஊழியம் செய்து விட்டு, தற்போது நாகர்கோவிலில் குடும்பமாக இருப்பதால், அவருக்கு ஏற்ற ஊழியத்தை தேவன் கொடுத்து உம்முடைய ராஜ்ய விரிவிற்காக அவரை எடுத்து உபயோகப்படுத்துவீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.