Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

அன்பில்லாதவன் தேவனை அறியான் -Anbillathavan devanai ariyan


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 அக்டோபர் மாதம் 08-ம் தேதி - வெள்ளி கிழமை
அன்பில்லாதவன் தேவனை அறியான்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். - (1 யோவன் 3:15)

ஜார்ஜ் ஒயிட் பீல்ட் உலக புகழ்பெற்ற பிரபலமான சுவிசேஷகர். 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பெரிய எழுப்புதல் உண்டானபோது இவருடைய ஊழியமும் அதில் பெரும் பங்காயிருந்தது. இங்கிலாந்து நகரங்களின் வீதிகளில் நின்றுகொண்டு இவர் கொடுத்த சுவிசேஷ செய்தியின் மூலம் அநேகர் மனம் திரும்பி இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொண்டனர்.

ஓயிட்பீல்ட் ஒரு முறை குதிரை வண்டியில் பிரயாணப்பட்டுபோய் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு பெண் அதே குதிரை வண்டியில் ஏறினாள். சிறிது தூர பிரயாணத்திற்கு பிறகு தனக்கு எதிரே அமர்ந்திருந்த ஊழியரிடம் அப்பெண், 'நீங்கள் தான் சுவிசேஷகர் ஒயிட் பீல்டா? உங்களை பார்த்தால் அவர் போல் தெரிகிறதே' என்று கேட்டாள். அவரும் அந்த பெண்ணிடம் ' ஆமாம் நான்தான் நீங்கள் கூறுகிறவர்' என பதிலளித்தார். உடன்தானே அந்த பெண் சற்றும் தாமதிக்காமல், குதிரை வண்டி ஓட்டுநரை பார்த்து, 'இப்போழுதே வண்டியை நிறுத்துங்கள். நான் கீழே இறங்கி கொள்கிறேன். இந்த ஆளோடு நான் பயணம் செய்ய விரும்பவில்லை' என கூறி வண்டியை விட்டு கீழே இறங்கினாளாம். அச்சமயம் அப்பெண்ணிடம் ஒயிட் பீல்ட் இப்படியாக ஒரு கேள்வி கேட்டார், 'என் அன்பு சகோதரியே, நீங்கள் வெறுக்கும் இந்த ஜார்ஜ் ஒயிட் பீல்ட் பரலோகத்தில் இருப்பாரென்றால், அங்கும் இருக்க மாட்டேன், நரகத்திற்கு செல்கிறேன் என்று கூறுவீர்களானால் நீங்கள் இப்பொழுது எடுத்த முடிவு சரி என்பேன்' என்றாராம்.
என்ன காரணத்தாலோ அப்பெண்ணுக்கு ஊழியர் மேல் அத்தனை பகையுணர்வு. அவரோடு ஒரே வண்டியில் பயணிக்க முடியாத அளவிற்கு அவளது இருதயத்தை சாத்தான் விரோதத்தால் நிரப்பியிருந்தான். பரிசுத்த வேதாகமத்திலும் பகையுணர்வினால் நிறைந்த அநேகரை காணலாம். தன் சகோதரனான ஆபேலை கொலை செய்யும் அளவிற்கு பகையால் நிரம்பின காயீன், தாவீதை பகைத்த சவுல் என அநேகரை காணலாம்.
சாதனை படைக்காமல் சாதனையாளராக முடியாது. ஆனால் வேதத்தின்படி கொலை செய்யாமலே கொலை பாதகனாக விடலாம். நாம் பகையுணர்வினால் காயீனைப்போல கொலை செய்யாமல் இருக்கலாம். ஆனால் பிறரை உள்ளத்தில் நெருப்பாய் பகைப்பது தேவனுடைய பார்வையில் கொலைப்பாதகமே! ஒரு மனிதனின் இருதயத்தில் காணப்படும் விரோதம், கோபம், வெறுப்பு, கசப்பு, பகைமை இவற்றின் மொத்த உருவம் அவனை கொலை செய்ய தூண்டி விடுகிறது. இதற்கு சட்டபப்படி தண்டனை உண்டு. ஆனால் மனதிலுள்ள பகையுணர்விற்கு உலக சட்டத்தின்படி தண்டனை கிடையாது. ஆனால் தேவ சட்டத்தின்படி கொலையாளியாய் தீர்ப்பிடப்படுகிறோம்.
பிரியமானவர்களே, நீங்கள் காயீன் ஆபேலை போல் ஒரே வயிற்றில் பிறந்த சகோதரராயிருக்கலாம், ஒரே தேவனை தொழுது கொள்ளலாம், ஒரே ஆலயத்திற்கு செல்லாம், காணிக்கயையும் படைக்கலாம். ஆனால் உள்ளத்தில் உடன் பிறந்தவர் மீதோ, சபையாரின் மீதோ அயலகத்தார் மீதோ நமக்கு வெறுப்பு உண்டா? உலக பார்வைக்கு, சாந்த சொரூபியைப் போலவும், உள்ளத்தில் கொலையாளியாகவும் காணப்படுகிறோமா?
ஒரு சிலர், ஊழியக்காரர்களுக்கு விழுந்து விழுந்து உபசாரம் செய்வார்கள். காணிக்கையை அள்ளி அள்ளி கொடுப்பார்கள், ஆனால் தேவையில் இருக்கும் சொந்த சகோதாகளுக்கோ, சகோதரிகளுக்கோ உறவினர்களுக்கோ ஒரு நயா பைசா தர மாட்டார்கள்! கர்த்தர் அதை ஏற்று கொள்வார் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை! 'ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்' (யாக்கோபு 2: 15-17). கர்த்தரும் 'நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து' (மத்தேயு 5:23-24) என்று சொன்னாரே!


முதலாவது, நமது சொந்த சகோதர சகோதரிகளை நேசிக்க கற்று கொள்வோம், பின் கர்த்தருக்கு செய்யும் எந்த காரியத்தையும் கர்த்தர் அங்கீகரிப்பார். அல்லாதபடி, நம் இருதயத்தில் சகோதர சகோதரிகளை வெறுக்கிறவர்களாக வாழ்வோமானால், நாம் கர்த்தருக்கென்று செய்யும் எந்த தியாகத்தினாலும், செய்கைகளினாலும் பயனில்லை!
அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்
பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகலவென்னும் கைமணியாமே
உடல் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பிலையானால் அதிற் பயனில்லை
அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்
குறிப்பு: அன்பு நண்பர்களே! உங்களின் மேலான கருத்துக்களையும், அனுதினமன்னாவின் வலையத்தில் (Website : www.anudhinamanna.net ) இருக்கும் Guest Book -ல் தேவன் உங்கள் வாழ்வில் அனுதின மன்னா மூலமாக செய்யும் கிரியைகளையும் மற்றவர்களும் படிக்கும்படியாகவும் அதன் மூலம் தேவ நாமம் மகிமை படும்படியாக எழுத வரவேற்கப்படுகிறீர்கள். உங்கள் ஆதரவிற்கும், ஒத்துழைப்பிற்கும் நன்றி!

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக நாங்கள் உம்மை துதிக்கிறோம். அப்பா, நாங்கள் உம்மை நேசிக்கிறோம் என்று சொன்னாலும், எங்கள் சகோதர சகோதரிகள் மேல் நாங்கள் அன்பு கூரவில்லை என்றால், நாங்கள் மனுஷ கொலை பாதகர்களாயிருக்கிறோம் என்று வசனம் சொல்கிறதே, நாங்கள் எங்கள் சகோதரர் மேல் வைத்திருக்கிற எல்லா வெறுப்பையும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், அழித்து போடுகிறோம். வெறுப்பை கொண்டு வருகிற சத்துருவின் அந்தகார சக்திகள் இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தினால் அழிக்கப்பட்டு போவதாக. நாங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, உம்முடைய கட்டளைகனை கைகொள்ள எங்களுக்கு கிருபை செய்யும். அன்பை எங்கள் இருதயத்தில் ஊற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
இந்த நாளில் பூட்டானுக்காக - Bhutan - ஜெபிப்போமா?
1. பூட்டானில் புத்த மதத்தை தவிர வேறு எந்த மதத்திற்கும் அனுமதியில்லை. கிறிஸ்தவர்கள் அங்கு சென்று வேலை செய்ய அனுமதி உண்டு. இந்த தேசத்தில் இருக்கும் பூட்டானியர் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்பட ஜெபிப்போமா?
2. இந்த தேசத்தில் சுவிசேஷத்திற்கு திறந்த வாசலை தேவன் தரும்படியாக ஜெபிப்போமா?
3. இந்த ஜனம் ஜீவனுள்ள தேவனை அறிந்து அவரையே தொழுது கொள்ளதக்கதாக ஜெபிப்போமா?

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.