Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, April 1, 2012

ஆதியில் கொண்டிருந்த அன்பு -Aathiyil kondiruntha anbu


அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2010 செப்டம்பர் மாதம் 20-ம் தேதி - திங்கள் கிழமை
ஆதியில் கொண்டிருந்த அன்பு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான் - (மத்தேயு 13:44).


ரேச்சலினால் நம்பவே முடியவில்லை, திரும்ப திரும்ப தன் கையில் ஜொலிக்கும் அந்த விலையேறப்பெற்ற கல்லை, திரும்ப திரும்ப பார்த்து, தன் தந்தையிடம், 'அப்பா இதை எனக்கா கொடுக்கிறீர்கள்' என்று பலமுறை கேட்டாள். தன் தந்தை தனக்கு ஒரு வைர மோதிரத்தை பரிசாக கொடுத்ததை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.


'ஆம் மகளே, இதை உனக்குத்தான் தந்தேன். அதை சந்தோஷமாய் வாங்கி அணிந்து கொண்டு, உன் நினைவில் எப்போதும் என் அன்பை நினைத்து கொள்' என்று தந்தை அவளிடம் அன்புடன் கூறினார். ரேச்சல் தன் தந்தையின் கழுத்தை கட்டி கொண்டு, 'நான் உங்களை நேசிக்கிறேன் டாடி' என்று முத்தமிட்டாள். தன் தகப்பன் எவ்வளவு நல்லவர், எத்தனையாய் தன்னை நேசிக்கிறார் என்று நினைத்து மகிழ்ச்சியடைந்தாள்.


தகப்பன் வைர மோதிரத்தை கொடுத்த சில மாதங்கள், அவள் அதை தன் உயிரை போல நேசித்தாள். அதை எடுத்து அநேக நேரம் உற்று பார்த்து கொண்டேயிருந்தாள். பின் தனக்கு அதை கொடுத்த தகப்பனின் அன்பை தனக்கு தெரிந்த அனைவருக்கும் சொல்ல ஆரம்பித்தாள். அவளது செய்கையில் தகப்பனுக்கு தான் எப்படி நன்றி கடன் பட்டிருக்கிறாள் என்பதை வெளி காட்ட ஆரம்பித்தாள். மற்றவர்களை நேசித்து, அதன் மூலம் தன் தந்தையின் அன்பு இப்படித்தான் என்று மற்றவர்களுக்கு வெளிப்படுத்த முயன்றாள். எப்பொழுதும் அவள் இருதயம் முழுவதும் தகப்பபனின் அன்பால் நிறைந்திருந்தபடியால், அவருடைய புகழை பாடி, களிகூர்ந்தாள்.


ஆனால் நாளாக, நாளாக அவளிடம் இருந்து வைர மோதிரத்தின் மேல் இருந்த மோகம் குறைய ஆரம்பித்தது. வைரத்தின் மதிப்பு கொஞ்சமும் குறையவில்லை என்றாலும், அவளுக்கு அதன் மீதிருந்த நாட்டம் குறைய ஆரம்பித்தது. அவள் இன்னும் மற்றவர்களிடம் அன்பு செலுத்தி, தன் தகப்பனின் அன்பை கூறினாலும், முதலில் இருந்ததை போன்று முழு இருதயத்தோட செய்யாமல், கடமைக்காக செய்ய ஆரம்பித்தாள். ஒரு நாள், அவளுடைய தோழி, அவளிடம் 'உன் தகப்பன் கொடுத்த வைர மோதிரத்தை பற்றி எனக்கு சொல்வாயா' என்று கேட்டபோது, அவளால் முன்பு இருந்ததை போல உற்சாகத்தோடு சொல்ல முடியவில்லை. அப்போது தான் உணர ஆரம்பித்தாள், தன் தகப்பன் மேல் தனக்கு முன்பிருந்த அன்பை போல இப்போது இல்லை என்பதை உணர தொடங்கியபோது, தன் தகப்பனின் அறைக்கு சென்று கதவை தட்டினாள், தகப்பனும் அறிந்திருந்தார், அவளுக்கு அந்த மோதிரத்தின் மேல் முன்பிருந்த உற்சாகமும் நேசமும் இல்லை என்று. அவளை அழைத்து, ' வா நாம் திரும்ப அந்த மோதிரத்தை சேர்ந்து பார்ப்போம்' என்றழைத்து, இருவரும் சேர்ந்து, அதை பார்த்தபோது, அவளுடைய உள்ளத்தில் அன்பு பொங்க ஆரம்பித்தது. கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. எத்தனை அருமையான பொக்கிஷத்தை என் தகப்பன் எனக்கு கொடுத்திருக்கிறார், நான் அதை மறந்து ஜீவித்து விட்டேனே என்று நினைத்த போது அவள் மனம் வருந்த ஆரம்பித்தது. தன் தகப்பனின் கரத்தை பிடித்து, 'அப்பா, நான் இந்த அன்பை நான் என்றும் மறக்காதிருக்க உதவி செய்யுங்கள்' என்று அவரை வேண்டி கொண்டாள்.


நாமும் அந்த ரேச்சலை போல நமக்கு தேவன் தந்த அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பை பெற்று கொண்ட நாட்களில் நாம் கொண்டிருந்த சந்தோஷமும், அதை குறித்து அநேகரிடம் பகிர்ந்த கொண்ட காரியங்களும் நம்மால் மறக்க முடியாது. கர்த்தரை மிகவும் அதிகமாய் நேசித்தோம். ஆனால், காலங்கள் கடந்து சென்றபோது, அன்று இருந்த ஆனந்தம் இப்போது ஒரு கடமையாக மாறி இருப்பதை நம்மால் உணர முடிகிறதல்லவா? இரட்சிப்பின் சந்தோஷமும் ஆனந்தமும் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருந்தாலும் நம்முடைய உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதல்லவா?


நம்முடைய உணர்வுகளில் மாற்றம் ஏற்பட்டாலும், தேவனுடைய அன்பு மாறாததாக, அவருடைய இரட்சிப்பு மாறாததாக, அவர் நமக்கு கொடுத்த கிருபை வரங்கள் என்றும் மாறாததாகவே இருக்கிறது. நாம் மீண்டும் ஆதியில் கொண்டிருந்த அன்பிற்கு திரும்ப வருவோமா? 'ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு'(வெளிப்படுத்தின விசேஷம் 2:4) என்று இயேசுகிறிஸ்து நம்மிடத்தில் குறையை காண்கிறவராக இல்லாதபடி, அவரிடத்தில் நாம் ஆதியில் கொண்டிருந்த அன்பில் மீண்டும் நிலைத்து, அவர் நமக்கு கொடுத்த கிருபை வரங்களை பிரயோஜனப்படுத்தி அவருக்கு மகிமையாக ஜீவிப்போமாக.


கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக் கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசுதான் என் ராஜா


ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்த இரட்சிப்பும் கிருபை வரங்களும் மாறாததாக இருக்க, நாங்கள் மாத்திரம் எல்லாவற்றிலும் மாறி, ஆதியில் நாங்கள் உம்மில் கொண்டிருந்த அன்பை விட்டு விலகியிருக்கிறோம் தகப்பனே, அந்த குறையை எங்களுக்கு மன்னியும். மீண்டும் அந்த இரட்சிப்பின் சந்தோஷத்தில் நிலைத்திருக்க கிருபை தருவீராக. யாராவது எந்த காரணத்திலாவது உம்முடைய அன்பிலிருந்து விலகி, புறமதத்தில் சேர்ந்திருந்தால், கிருபையாய் மன்னித்து, அவர்களை மீண்டும் உம்முடைய அன்பில் சேர்த்து கொள்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு
ரஷ்யா - Russia நாட்டிற்காக ஜெபிப்போம்.


1. கடந்த 100 ஆண்டுகளில் கம்யூனிச ஆட்சியின் கீழ் சுமார் 2 லட்சம் கிறிஸ்தவ ஊழியர்கள் இரத்த சாட்சிகளாய் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.


2. தேவன் அந்த கம்யூனிச இரும்பு கதவுகளை தகர்த்தெறிந்து, சுவிசேஷ வாசல்களை அந்த தேசத்தில் திறந்ததற்காக கர்த்தரை ஸ்தோத்தரிப்போம்.


3.தற்போது காணப்படும் திறந்த வாசலை சபைகள் சரியாக பயன்படுத்தி, ஆத்துமாக்களை கொள்ளை பொருளாக கர்த்தருடைய இராஜ்ஜியத்தில் சேர்க்க நாம் ஜெபிப்போம்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.