Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Sunday, April 29, 2012

PRAYER TO SAINT MICHAEL THE ARCHANGEL

PRAYER TO SAINT MICHAEL THE ARCHANGEL

St. Michael the Archangel,
defend us in battle.
Be our defense against the wickedness and snares of the Devil.
May God rebuke him, we humbly pray,
and do thou,
O Prince of the heavenly hosts,
by the power of God,
thrust into hell Satan,
and all the evil spirits,
who prowl about the world
seeking the ruin of souls. Amen.

கத்தோலிக்க ஜெபங்கள் - Catholic Prayers


கத்தோலிக்க ஜெபங்கள்:

சிலுவை அடையாளம்

அர்ச்சியஸ்ட சிலுவைடையாளத்தினாலே எங்கள் சத்துருக்கள் இடத்திலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும் எங்கள் சருவேசுரா பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.


விசுவாசப் பிரமாணம்

பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசுகிறிஸ்துவையும் விசுவசிக்கின்றேன்.இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.அவ்விடத்திலிருந்து 
சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். சரிர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.


இயேசு கற்பித்த செபம்

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல புலோகத்திலும் செய்யப்படுவதாக. 
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொருப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும். 
தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.


மங்கள வார்த்தை செபம்


அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே,
அர்ச்சியேஸ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென

திரித்துவப் புகழ்



பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்
ஓ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு விசேட உதவி செய்தருளும்.

காணிக்கை செபம்


அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென


கிருபைதாயாபரத்துச் செபம்



கிருபைதயாபரத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க எங்கள் சீவமே எங்கள் மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க பரதேசிகளாய் இருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர் கனவாயிலிருந்து பிரலாபித்து அழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சுவிடுகின்றோம்.ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உம்முடைய தாயாபரமுள்ள திருக்கண்களை எங்கள் மேலே திருப்பியருளும். இதனன்றியே நாங்கள் இந்தப் பிரதேசங் கடந்த பிற்பாடு
உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்கு தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாய 
முதல்: இயேசுகிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
துணை: சாருவேசுரனுடைய பரிசுத்த தேவமாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமா



சர்வ சக்தியுடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற சருவேசுரா முத்துபேறுபெற்ற கன்னித்தாயான மரியாளுடைய ஆத்துமமும் சரீரமும் பரிசுத்த ஆவியின் அனுக்கிரகத்தினாலே தேவதாயாருடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாய் இருக்க,ஏற்கனவே நியமித்தருளினீரே. இந்தத் திவ்விய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவளுடைய இரக்கமுள்ள மன்றாட்டியாலே இவ்வுலகின் சகல பொல்லாப்புக்களிலேயும் நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கப்படும் படிக்கு கிருபை கூர்ந்தருளும்
இந்த மன்றாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசு நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும். ஆமென


மூவேளைச் செபம்


ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார். அவளும் தூய ஆவியினால் கருத்தரித்தாள். 
அருள் நிறைந்த...

இதோ ஆண்டவருடைய அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்
அருள் நிறைந்த...

வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார்.
அருள் நிறைந்த...

முதல்வர்: கிறிஸ்துவிள் வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் தகுதியுடையவர்களாய் இருக்கும்படியா
எல்லோ: இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.
செபிப்போமா



இறைவா உமது திருமகன் கிறிஸ்து மனுவுருவானதை உமது வானதூதர் வழியாக அறிந்திருக்கிறோம். அவருடைய பாடுகளினாலும் சிலுவையினாலும் 
நாங்கள் உயிர்ப்பின் மகிமையை அடையுமாறு உமது அருளை எங்கள் உள்ளத்தில் பொழிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென


புனித மிக்கேல் தேவதூதரை நோக்கி செபம்

அதிதூதரான புனித மிக்கேலே யுத்த நாளில் எங்களை தற்காத்தருளும். பசாசின் துஸ்டதனத்தில் இருந்தும் அதன் கண்களில் இருந்தும் எம்மை பாதுகாத்தருளும்.இறைவன் அதை கடிந்து கொள்ளும் படி தாழ்மையுடன் மன்றாடுகின்றோம். வானுக சேனைக்கு அதிபதியாயிருக்கிற நீர் ஆத்துமாக்களை நாசம் செய்யும் படியாக உலகெங்கும் சுத்தி திரியும் சாத்தானையும் அதன் பசாசுக்களையும் தேவ வல்லமையை கொண்டு நரக பாதளத்தில் தள்ளி விடும். ஆமென்.

Friday, April 27, 2012

ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் [பகுதி-1]-[A Thousand Thank Offerings-Part-1]


ஸ்தோத்திர பலிகள் ஆயிரம் பகுதி-1
[A Thousand Thank Offerings-Part-1]

சகோ:E.விக்ளிப் டேவிட் 

  
                     
                    


பிதாவே,உமக்கு ஸ்தோத்திரம் 
  • அப்பா பிதாவே  ஸ்தோத்திரம் 
  • அன்பான பிதாவே  ஸ்தோத்திரம் 
  • நித்திய பிதாவே  ஸ்தோத்திரம் 
  • பரலோக பிதாவே ஸ்தோத்திரம் 
  • ஆவிகளின் பிதாவே  ஸ்தோத்திரம் 
  • சோதிகளின் பிதாவே  ஸ்தோத்திரம் 
  • இரக்கங்களின் பிதாவே  ஸ்தோத்திரம் 
  • மகிமையின் பிதாவே  ஸ்தோத்திரம் 
  • என்னை உண்டாக்கின பிதாவே  ஸ்தோத்திரம் 
  • என்னை ஆட்கொண்ட  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • என்னை நிலைப்படுத்தின  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • என்(எங்கள்)  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • எம் எல்லாருக்கும் ஒரே  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • இயேசு கிறிஸ்துவின்  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • நீதியுள்ள  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • அந்தரங்கத்திலிருக்கும்  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • நீதிமான்களின்  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • இஸ்ரவேலுக்குப்  பிதாவே  ஸ்தோத்திரம் 
  • ஜீவனுள்ள  பிதாவே  ஸ்தோத்திரம்
தேவனே,உமக்கு  ஸ்தோத்திரம்
  • உன்னதமான தேவனே  ஸ்தோத்திரம்
  • மகா தேவனே  ஸ்தோத்திரம்
  • தேவாதி  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஜீவனுள்ள  தேவனே  ஸ்தோத்திரம்
  • அன்பின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • அநாதி  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஆறுதலின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • மகிமையின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • கிருபையின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஆபிரஹாமின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஈசாக்கின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • யாக்கோபின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • யேஷூரனின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • இஸ்ரவேலின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • எலியாவின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • தாவீதின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • தானியேலின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • சாத்ராக்,மேஷாக்,ஆபேத்நேகோ என்பவர்களின் தேவனே  ஸ்தோத்திரம்
  • பிதாவாகிய  தேவனே  ஸ்தோத்திரம்
  • முற்பிதாக்களின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • என் தகப்பனுடைய  தேவனே  ஸ்தோத்திரம்
  • சர்வ பூமியின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • பூமியின் ராஜ்யங்களுக்குகெல்லாம்  தேவனே  ஸ்தோத்திரம்
  • பூமியின் எல்லை வரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • அற்புதங்களின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • வல்லமையுள்ள  தேவனே  ஸ்தோத்திரம்
  • சர்வ வல்லமையுள்ள  தேவனே  ஸ்தோத்திரம்
  • சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • மெய்யான  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஒன்றான மெய்தேவனே  ஸ்தோத்திரம்
  • பிதாவாகிய ஒரே  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஒருவராய் ஞானமுள்ள  தேவனே  ஸ்தோத்திரம்
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • பரலோகத்தின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • பரிசுத்தமான  தேவனே  ஸ்தோத்திரம்
  • சத்திய  தேவனே  ஸ்தோத்திரம்
  • ரெட்சிப்பின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • வாக்குதத்தங்களின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • உடன்படிக்கையின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • நம்பிக்கையின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • இரக்கமுள்ள  தேவனே  ஸ்தோத்திரம்
  • இரக்கத்தின் ஐசுவரியமுள்ள  தேவனே  ஸ்தோத்திரம்
  • நீதியின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • நீதியை சரிக்கட்டும்  தேவனே  ஸ்தோத்திரம்
  • நியாயக்கேடில்லாத சாத்தியமுள்ள  தேவனே  ஸ்தோத்திரம்
  • சேனைகளின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • என் தேவனே!என் தேவனே! ஸ்தோத்திரம்
  • என்னைப் பெற்ற  தேவனே  ஸ்தோத்திரம்
  • என்னைக் காண்கிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • தரிசனமாகிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும்  தேவனே  ஸ்தோத்திரம்
  • என்றென்றைக்கும் ஸ்தோதரிக்கப்பட்ட  தேவனே  ஸ்தோத்திரம்
  • மறைபொருளை வெளிப்படுத்தும்  தேவனே  ஸ்தோத்திரம்
  • தேவர்களுக்கு  தேவனே  ஸ்தோத்திரம்
  • ராஜாவாகிய என்  தேவனே  ஸ்தோத்திரம்
  • பெரிய  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஐசுவரியத்தின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • குறைவுகளை நிறைவாக்கும்  தேவனே  ஸ்தோத்திரம்
  • விளையச் செய்கிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • ஜெயங்கொடுக்கிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • சமாதானத்தின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • பாவியின் மேல் சினங்கொள்ளுகிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • எரிச்சலின்  தேவனே  ஸ்தோத்திரம்
  • மன்னிக்கிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • அதிசயங்களை செய்கிற  தேவனே  ஸ்தோத்திரம்
  • ரெட்சகராகிய  தேவனே  ஸ்தோத்திரம்
  • என் முகத்துக்கு இரட்சிப்பாயிருக்கிற  தேவனே  ஸ்தோத்திரம் 
  • எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கும்  தேவனே  ஸ்தோத்திரம் 
  • பெயர் சொல்லி அழைக்கும்  தேவனே  ஸ்தோத்திரம் 
  • இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கும்  தேவனே  ஸ்தோத்திரம் 
  • பொய்யுரையாத  தேவனே  ஸ்தோத்திரம் 
  • தம்மை மறைத்து கொண்டிருக்கும்  தேவனே  ஸ்தோத்திரம் 
  • எம்மை பிரகாசிப்பிக்கிற  தேவனே  ஸ்தோத்திரம் 
  • பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து பிரகாசிக்கும்  தேவனே  ஸ்தோத்திரம் 
  • தலைமுறை தலைமுறையாய் ராஜரிகம் பண்ணும்  தேவனே  ஸ்தோத்திரம் 
  • தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பும்  தேவனே  ஸ்தோத்திரம் 
  • சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு நல்லவராகவே இருக்கிற  தேவனே  ஸ்தோத்திரம் 
  • சமீபத்திற்கும் தூரத்திற்கும்  தேவனே  ஸ்தோத்திரம் 
கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்  
  • கர்த்தாதி கர்த்தரே ஸ்தோத்திரம்
  • கர்த்தராகிய ஆண்டவரே ஸ்தோத்திரம்
  • சேனைகளின்  கர்த்தாவே ஸ்தோத்திரம்
  • சமாதானக்  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • ராஜாக்களுக்கு  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • ஆலோசனைக்  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • பரிகாரியாகிய  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • உன்னதமான  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • பரிசுத்தராகிய  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • எங்களைப் பரிசுத்தமாக்கும்  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • எங்கள் நீதியாயிருக்கிற  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • எங்கள் நித்திய வெளிச்சமான  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • மாம்சமான யாவருக்கும்  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • எனக்கு துணை செய்கிற  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • ஆவியாயிருக்கிற  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • இயேசு கிறிஸ்து என்னும் ஒரே  கர்த்தரே ஸ்தோத்திரம்
  • கர்த்தர் பெரியவரே  ஸ்தோத்திரம்
  • கர்த்தர் மிகவும் துதிக்கப்பட தக்கவர்  ஸ்தோத்திரம்
  • கர்த்தர் நல்லவரே ஸ்தோத்திரம்
  • கர்த்தர் மாறாதவரே  ஸ்தோத்திரம்
  • சத்திய பரனாகிய கர்த்தாவே  ஸ்தோத்திரம்
ராஜாவே, உமக்கு  ஸ்தோத்திரம் 
  • கர்த்தராகிய ராஜாவே  ஸ்தோத்திரம்
  • ராஜாதி ராஜாவே  ஸ்தோத்திரம்
  • மகிமையின்  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • மகத்துவமான  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • பரிசுத்தவான்களின்  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • சாலேமின்  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • நீதியின்  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • நிர்மல  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • நித்திய ராஜாவே  ஸ்தோத்திரம்
  • அழிவில்லாத  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • அதரிசனமுள்ள  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • யூதருடைய  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • இஸ்ரவேலின்  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • யேஷூரனின்  ராஜாவே  ஸ்தோத்திரம்
  • ராஜாக்களுக்கு ஆண்டவரே  ஸ்தோத்திரம்
  • ராஜாக்களுக்கு ஜெயத்தை தருகிறவரே  ஸ்தோத்திரம்
  • பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியே  ஸ்தோத்திரம்
  • பூமியின் ராஜாக்களுக்கு பயங்கரமானவரே ஸ்தோத்திரம்
  • சமாதானத்தின்   ராஜாவே  ஸ்தோத்திரம்
  • சமாதானப் பிரபுவே  ஸ்தோத்திரம்
  • சதாக்காலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறவரே  ஸ்தோத்திரம்
  • என் ராஜாவே  ஸ்தோத்திரம்
  • பரலோகத்தின் ராஜாவே  ஸ்தோத்திரம்
  • வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே  ஸ்தோத்திரம்
  • சர்வலோகத்துக்கும் ஆண்டவரே  ஸ்தோத்திரம்
பரிசுத்தரே,உமக்கு ஸ்தோத்திரம்
  • பரிசுத்தர் பரிசுத்தரே  ஸ்தோத்திரம்
  • இஸ்ரவேலின் பரிசுத்தரே  ஸ்தோத்திரம்
  • தேவனுடைய   பரிசுத்தரே ஸ்தோத்திரம்
  • நித்தியவாசியான   பரிசுத்தரே  ஸ்தோத்திரம்
  • நான் பரிசுத்தர் என்பவரே ஸ்தோத்திரம்
  • பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரே ஸ்தோத்திரம்
  • தூயாதி தூயவரே  ஸ்தோத்திரம்
உமது நாமத்துக்கு ஸ்தோத்திரம்
  • யெஹோவா தேவனே  ஸ்தோத்திரம்
  • யெஹோவாயீரே [கர்த்தர் பார்த்துக் கொள்வார்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா ஷாலோம் [கர்த்தர் சமாதானமளிக்கிறவர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா ஷம்மா [தம் சமூகமளிக்கும் கர்த்தர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா நிசி [கர்த்தர் என் ஜெயக்கொடியானவர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா ஈலியோன் [உன்னதமான கர்த்தர்] ஸ்தோத்திரம்
  • யெஹோவா ரோஹி [கர்த்தர் மேய்ப்பரானவர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா சிட்கேனு [நீதியாயிருக்கிற தேவன்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா சபயோத் [சேனைகளின் கர்த்தர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா மெக்காதீஸ் [பரிசுத்தமாக்கும் கர்த்தர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா ரொபாகா [குணமாக்கும் கர்த்தர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா ஒசேனு [உருவாக்கும் கர்த்தர்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா ஏலோஹீனு [யெஹோவா நம்முடைய தேவன்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா ஏலோகா [யெஹோவா உன்னுடைய தேவன்]  ஸ்தோத்திரம்
  • யெஹோவா எலோஹே [யெஹோவா என் தேவன்]  ஸ்தோத்திரம்
  • எலோஹிம் [எங்கும் நிறைந்தவர்]  ஸ்தோத்திரம்
  • எல்ஷடாய் [சர்வ வல்லமையுள்ளவர்]  ஸ்தோத்திரம்
  • இயேசு என்ற நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • இம்மானுவேல் என்ற நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • தேவனுடைய வார்த்தை என்ற நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • உயர்ந்த உமது  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • உம இன்பமான  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • ஊற்றுண்ட பரிமள தைலம் போலிருக்கும்  உம் நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • பரிசுத்தமும் பயங்கரமுமான உம்  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • வல்லமையில் பெரிய உம்  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • மகத்துவமான உம்  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • எல்லா  நாமத்துக்கும் மேலான உம்  நாமத்துக்கு  ஸ்தோத்திரம்
  • உம் நாமம் சமீபமாயிருப்பதற்க்கு  ஸ்தோத்திரம்
  • உமது நாமம் பலத்த துருகம்  ஸ்தோத்திரம்

ஆவியானவரேஸ்தோத்தரிக்கிறோம் 
  • பரிசுத்த ஆவியே  ஸ்தோத்திரம்
  • சத்திய  ஆவியே  ஸ்தோத்திரம்
  • கிருபையின்  ஆவியே  ஸ்தோத்திரம்
  • மகிமையின்  ஆவியே  ஸ்தோத்திரம்
  • ஜீவனின்  ஆவியே  ஸ்தோத்திரம்
  • பிதாவின்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • கிறிஸ்துவின் ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • உணர்வுள்ள  ஆவியே  ஸ்தோத்திரம்
  • பெலனுள்ள ஆவியே  ஸ்தோத்திரம்
  • உயிர்பிக்கிற ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • உற்சாகபடுத்தும்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • ஞானத்தின்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • கர்த்தரின்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • கர்த்தராகிய தேவனுடைய  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • நித்திய  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • உன்னதரின்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • பரிசுத்தமுள்ள  ஆவியே  ஸ்தோத்திரம்
  • குமாரனின்  ஆவியே  ஸ்தோத்திரம்
  • புத்திரசுவிகாரத்தின்  ஆவியே  ஸ்தோத்திரம்
  • நல்ல  ஆவியே  ஸ்தோத்திரம்
  • தேற்றரவாளனே  ஸ்தோத்திரம்
  • விண்ணப்பத்தின்  ஆவியே  ஸ்தோத்திரம்
  • வைராக்கிய வாஞ்சையாயிருகிற பரிசுத்த  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • வாக்குக்கடங்கா பேரு மூச்சோடு வேண்டுதல் செய்யும்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • அசைவாடும்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • ஆலோசனையின்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • தீர்க்கதரிசனத்தின்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • நிலைவரமான பரிசுத்த ஆவியே ஸ்தோத்திரம் 
  • நியாயத்தின்  ஆவியானவரே ஸ்தோத்திரம்
  • சுட்டெரிப்பின் ஆவியானவரே ஸ்தோத்திரம்

நன்றி:
சகோ:E.விக்ளிப் டேவிட் 
மற்றும் 
சகோ:J.சாம் ஜெபத்துரை
50,ரெயில்வே ஸ்டேஷன் ரோடு
கோடம்பாக்கம்,சென்னை-600 024

Sunday, April 22, 2012

வாழ்க்கை ஓர் மோட்ச பயணம் - Vaazkkai or motcha payanam Lyrics

வாழ்க்கை ஓர் மோட்ச பயணம் 
Audio:
வாழ்க்கை ஓர் மோட்ச பயணம் 
ஏசுவே அதன் மெய் வழி காட்டி(2)
மத்தியிலோ பள்ளம் ஏராளம்
சத்துருவின் தொல்லை ஏராளம்(2)
உறுதியாய் இயேசுவின் கரம் 
பிடித்து நாம் மோட்சம் அடைவோம்-வாழ்க்கை 

/heartதேவனற்ற வாழ்வை வெறுப்போம்,
தேவனோடு இணைந்திருப்போம்(2)
உலகிலே உண்மை இல்லை
இயேசு விட்டால் வழி இல்லை
நாசவலை கொண்டு சாத்தான் திரிகிறான்
பாசவலை எசுவிலே சேர்ந்திருப்போம்-வாழ்க்கை 

/heartநீங்கா முடியாய் இருள் தனிலே,
வாழ்ந்த நம்மை மெய் ஒளியிலே (2)
கொண்டு சேர்த்த ஜீவ ஒளி
உத்தமராம் இயேசு கிறிஸ்து
இவரில் நாம் யோபு போல
எப்பொழுதும் நம்பிக்கையாய் நின்றிடுவோம்-வாழ்க்கை 

/heartதேசமெங்கும் இயேசு இல்லாமல்,
வாழ்ந்து சாகும் மக்கள் ஏராளம்(2)
நம்மை போல இவர்களும் 
ஏசுவுக்கு சொந்தமாக
சுவிசேஷம் சொல்லிட நாம் எழும்புவோம்
கர்த்தன் இயேசு கட்டளைக்கு கீழ்ப்படிவோம்-வாழ்க்கை 
Video :

Wednesday, April 18, 2012

அகவிருந்தாக என் இறைவா வா - Agavirunthaaga en iraiva vaa Lyrics

 அகவிருந்தாக என் இறைவா வா - மனம் 


 அகவிருந்தாக என் இறைவா வா - மனம் 
மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா - 2

/heart1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு
ஆகமம் முழங்கிடும் உயிர்மொழியே - 2
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2
உமதுடலென எமை நீ மாறவைப்பாய்

/heart2. நேரிய மனத்தவர் குறைதணிப்பாய் - எமை
நீடிய மகிழ்வினில் நிலைக்க வைப்பாய் - 2
நலமிகு உணவாய் நிறைந்திருப்பாய் - 2 - இனி
உலகினில் உனிலே வாழ வைப்பாய்

/heart3. தேன்மொழி மொழிந்த உன் திரு இதழால் - எம
தான்மா நற்குணம் பெற மொழிந்திடுவாய் - 2
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 - இனி
உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும் - Agazhnthiduvaar thammai entru anbudan Lyrics

 அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும் 

 அகழ்ந்திடுவார் தம்மை என்றும் அன்புடன் நிலம் தாங்கும் 
என்ன தான் குறைகள் செய்தாலும்
உன் இதயம் தாங்கும் என்றும் எனைத் தாங்கும்
/heart1. அழுதாலும் உன் கரம் தேற்றும்
மகிழ்ந்தாலும் அது உன் நிழலில் - 2
உன்னை நான் மறந்து வாழ்ந்தாலும் வாழ்வதும் உன்னாலே
வல்லவன் நீயின்றி என் இதயத்தில் நிறைவில்லை - 2
உந்தன் தாளில் கூடும் பலகோடி பூவிதழுள் நானும் ஒன்றாவேன்
உன் திருநாளில் என் உள்ளம் மங்களம் பாடும் தன் இல்லம்
உன் நினைவாலே தெய்வீகம் வாழ்வு பெறும்
/heart2. ஆசைகளில் தடுமாறியதில் விழுந்தால்
எடுப்பதும் உன் உருவே - 2
துன்பம் நான் அடைந்து சோர்ந்தாலும் வாடுவதும் நீயே
என்னிடம் வலுவில்லை உன் பலமன்றி கதியில்லை - 2
வரும் காலம் உன் மடியில்
வாழ்வும் உன் மடியில் நானும் உன் சந்நிதியில்
உன் திரு உள்ளம் என் இல்லம்
உன் திரு சொல்லே என் சொந்தம்
உன் உறவொன்றே என் இன்பம் என்றென்றும்

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு - Anjaathe Anjaathe Lyrics

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு 

அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு 
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு - 2
/heart1. குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம் - 2
என்ன நிலைதான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் - 2
/heart2. அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ - 2
அன்னை உன்னை மறந்தாலும்
உன்னை நானோ மறவேனே அஞ்சாதே......

அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே - Appathil Vaazhum devane Nenjil vaarume Lyrics

அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே

அப்பத்தில் வாழும் தேவனே நெஞ்சில் வாருமே - 2
/heart1. மண்ணோர்க்கு மீட்பு ஈந்தவா பீடம் தன்னில் வந்தாய் - 2 
விண்ணகம் நின்று மண்ணகம் வந்த ராஜ ராஜனே - 2
/heart2. எம்மோடு ஒன்றி வாழவே உண்ணும் உணவானாய் - 2
அருளின் வாழ்வில் நிலைத்து வாழும் பாதை காட்டினாய் - 2
/heart3. பாவிக்கு மோட்சம் நல்கவே பாவி உருவானாய் - 2
பாவத்தில் வாழும் மாந்தரின் உள்ளம் புனித மாக்குவாய் - 2

அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே - Aravanaikkum anbu Deivame Lyrics

அரவணைக்கும் அன்பு தெய்வமே

அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே - உன் 
அடியெடுத்து நான் செல்லும் பாதைகளெல்லாம்
என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டுமே - 2
/heart1. சோகங்கள் பலகோடி சூழ்ந்திடும் வேளையில் - உன்
சிறகினுள் எனை மூடி அடைக்கலம் தரவேண்டும் - 2
உந்தன் புது உறவிலே கவலையெல்லாம் மறந்து - 2
உலகெலாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன்
/heart2. வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன்
வல்லமை கரமென்னில் இருந்திட வேண்டும் - 2
உந்தன் நல்துணையிலே பாதையினைத் தெளிந்து - 2
எந்நாளும் நிறைவாழ்வுப் பயணம் செல்வேன்

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.