Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

இயேசுவை நாம் எங்கே காணலாம்? -Yesuvai nam enge kaanalam -How to find Jesus?


15th December 2009  - Tuesday

டிசம்பர்  மாதம் 15-ம் தேதி – செவ்வாய் கிழமை

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோஅதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.  - (மத்தேயு 25:40).

கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த ஒரு பெண்மணி வெகுநாளாய் 'ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும் . தரிசனத்திலோ சொபபனத்திலோ உம் முகத்தை காண் வேண்டும்என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது அனுதின ஜெபத்தில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. ஒருமுறை அவர்கள் வெளி மாநிலத்திற்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்தார்கள். அச்சமயம் தன் குடும்பத்தினரோடு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது வழியருகே ஒருவர் சரியான ஆடையின்றி படுத்திருப்பதை கண்டு அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் காரை நிறுத்தும்படி கூறினார்கள். உடனிருந்தோர்,  'இம்மனிதன் குடித்துவிட்டு படுத்திருக்கலாம்,  நமக்கு ஏன் வீண் வம்புபோகலாம்'  என்றனர். இருப்பினும் இவ்வூழியரது வற்புறுத்தலால் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது அவர் மிகவும் உடல் நலக்குறைவினால் கவனிப்பாரற்று படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை கனிவோடு விசாரித்து விட்டு தங்களிடமிருந்த உணவையும்,  தண்ணீரையும் கொடுத்துவிட்டு சென்றார்.

ஒரு சில நாட்களுக்கு பின் தன் ஜெப வேளையிலே ஆண்டவரேநான் உம்மை எப்படியாவது பார்க்க வேண்டும். அதுவே என் உள்ளத்தின் வாஞ்சை என ஜெபித்தார்கள். அந்த நொடிப் பொழுதில் 'இரண்டு தினங்களுக்கு முன்பு என்னை வெளிப்படுத்தினேனேஎன்னை நீ பார்த்தாயே'  என்று ஆண்டவர் உணர்த்துவதைக் கண்டார். எப்போது ஆண்டவரே  என்ற போது, 'அன்று சாலையோரத்தில் உன்னிடம் உணவு பொட்டலத்தையும் தண்ணீரையும் பெற்றுக் கொண்டது நான்தான்என உணர்த்தினார். அப்போது மத்தேயு 25ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட சம்பவம் அவ்வூழியரின் நினைவிற்கு வந்தது.  அந்த வேதப்பகுதியை நாம் தியானிக்கலாம்.

நியாயத்தீர்ப்பின் நாளிலே உலக மக்களை இயேசுகிறிஸ்து இரு பிரிவுகளாய் பிரிக்கிறார். அதில் வலப்பக்கமுள்ளவர்களை பார்த்துநான் பசியாயிருந்தேன்தாகமாயிருந்தேன் என்னை போஷித்தீர்கள்உடையில்லாதிருந்தேன்என்னை உடுத்துவித்தீர்கள்வியாதியாய் இருந்தேன் விசாரித்தீர்கள்காவலிலிருந்தேன் என்னை பார்க்க வந்தீர்கள்என்றார்;. அவர்கள் ஆச்சரியத்தோடு எப்போது இப்படியெல்லாம் செய்தோம் என்றனர். அதற்கு இயேசு அற்பமாய் காண்ப்படுகிற எந்த ஒரு மனிதனுக்கும் நீங்கள் செய்யும் உதவி எனக்கே செய்ததாகும் என்றார். இதில் எவ்வளவு ஆச்சசரியமான உண்மை விளக்கப்பட்டுள்ளது பார்த்தீர்களா? இயேசுகிறிஸ்து இந்த சிறியர்கள் மேல் எவ்வளவு கரிசனையோடு இருக்கிறார்தனனை அவர்களோடு ஒப்பிட்டு பேசுகிறார்!

சில நேரங்களில் நாம்  'உண்மையான தேவன் இருக்கும்போது உலகத்தில் மக்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா? என்று நினைக்கிறோம். ஆனால் தேவனின் வழியை பாருங்கள். இப்படி பாடுகளோடு இருப்பவர்களுக்கு உதவுவது நமது கடமை என்கிறார். உடனே நாம் இவர்களுக்கென்று ஒரு ஊழிய ஸ்தாபனத்தை துவக்கவேண்டுமா? அல்லது பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டுமா? என யோசிக்க தேவையில்லை. மாறாக சிறிய விதத்திலாவது அவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். சிலர் தங்களால் உதவி செய்ய திராணி இருந்தாலும் இது நமக்கு ஏன் தொல்லை என்று எந்த உதவியுமே செய்வதில்லை. ஒரு முறை செய்தால் மீண்டும் செய்ய வேண்டி வரும் என்று சிலர் எதையுமே செய்வதில்லை. வசனத்தை கவனியுங்கள்வியாதியாய் இருந்தேன்என்னை விசாரித்தீர்கள் என்கிறார். இங்கு சுகமளிக்கும் வரமல்லஅன்போடு விசாரிப்பதே முக்கியப்படுத்தப்படுகிறது. ஆகவே தானதர்மம்அன்பின் கிரியைகள் போன்ற சின்னசின்ன காரியங்களை  செய்ய எப்போதும் ஆயத்தமாயிருங்கள். அதே நேரத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது. வலது பக்கம் நின்றவர்கள் இயேசுகிறிஸ்து என்று எண்ணி உதவி செய்யவில்லை. மாறாக இருதயத்தின் அன்பினால் செய்தனர் பிரதிபலனுக்காக அல்லஅன்பினிமித்தம் ஊழியம் செய்யுங்கள். அனுதினமும் இயேசுவை காணுங்கள்.

   என் இயேசுவை காண என் உள்ளம்
   எப்போதுமே என்னில் வாஞ்சிக்குதே
   எப்போ அவர் முகம் கண்டு நான்
   எந்நாளும் அவரில் ஜீவிப்பேனோ?

ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனேஎளிய மக்களுக்கு நாங்கள் செய்யும் எந்த உதவியும் உமக்கே செய்கிறதாக கூறுகிறீரேஅதை அறிந்து நாங்கள் எங்களால் இயன்ற உதவிகளை தேவையுள்ள மக்களுக்கு செய்ய கிருபை செய்யும். எங்களால் முடிந்த போதும் அநேக முறை நாங்கள் செய்யாமல் விட்ட காரியங்களை எங்களுக்கு மன்னியும். செய்ய திராணி இருக்கும்போது செய்ய தக்கவர்களுக்கு நன்மையான காரியங்களை செய்ய கிருபை செய்வீராக. பிரதிபலன் பாராமல் உள்ளத்தில் அன்பினால் ஏவப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்ய கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.