Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

விடுதலையாக்கும் தேவன் -Viduthalaiyaakkum Devan


30th November 2009  - Monday

நவம்பர் மாதம் 30-ம் தேதி – திங்கள் கிழமை

விடுதலையாக்கும் தேவன்
சத்தியத்தையும் அறிவீர்கள்சத்தியம் உங்களை விடுதலையாக்கும் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே
விடுதலையாவீர்கள். - (யோவான் 8:32,36).
டேல் கேலோவேய் (Dale Galloway) என்பவர் தாம் எழுதிய புத்தகத்தில்ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஒரு நாள் அவர் ஆலயத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த பெரிய ஆலயத்தின் ஒரு திறந்த ஜன்னல் வழியாக ஒரு சிறு பறவை உள்ளே வந்தது. ஆலயத்தின் குறுக்கும் நெடுக்குமாக அந்த பறவை பறந்து திரிந்தது. பின்னர்சற்று நேரம் கழித்துஅது வெளியே போக முயற்சித்தது. அதற்காக அது சுற்றிலும் பறந்து வெளியே போகும் வழியை தேடியது. சற்று தாழ்வாக வந்துபோதுஅந்த சகோதரன் அதை பிடிக்க முயற்சித்தார். ஆனால் அது மீண்டும் உயரே எழும்பி பறக்க ஆரம்பித்தது.
அவர் அந்த பறவை பறந்த இடத்திற்கெல்லாம்கூடவே சென்றார். ஆனால் அந்த பறவை அவர் கைகளில் சிக்காமல்தானே வெளியே போக வழியை தேடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரு வர்ணமிட்ட கண்ணாடி ஜன்னலில்அதுதான் வெளியே போகும் வழி என்று நினைத்து,  அங்கு போய் மேலே வேகமாக மோதியபோதுஅடிபட்டு கீழே விழுந்தது. அப்போது அதை கையில் எடுத்த அந்த சகோதரன்,  ‘நீ மட்டும் என்னை அனுமதித்திருந்தால்நான் எப்போதோ உன்னை விடுவித்திருப்பேன். ஆனால்,  நீயோ என் கையில் வராமல்,  உன் இஷ்டத்திற்கு பறந்து சென்றாய்,  கடைசியில் இதோ அடிபட்டு கீழே விழுந்து இப்போது என் கையில் கிடைத்திருக்கிறாய்’  எனக் கூறி ஜன்னலை திறந்து அதை வெளியே விட்டார். அது தன் செட்டைகளை அடித்துவிடுதலையோடு பறந்து சென்றது.
அப்போது அவர் சில வருடங்களுக்கு முன்,  தான் எப்படி உடைந்து போனவராக,  குழப்பம் நிறைந்தவராக,  என்ன செய்வது எங்கே செல்வது என்று திகைத்திருந்த வேளையில் கர்த்தரின் கரத்தில் விழுந்தபோதுஅவர் அவருடைய இருதயத்தின் புண்களை காயம் கட்டிஅவரை பாவத்திலிருந்து விடுதலையாக்கிஅவர் அறியாத உயரத்தில் கொண்டுபோய் விட்ட தயவை நினைத்து கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார்.
நீங்களும் எங்கு செல்வது எப்படி பிரச்சனையிலிருந்து வெளியே வருவது என்று திகைத்து நிற்கிறீர்களோ? அந்த சிறு பறவையைப் போல பேதைகளாய்வழிதெரியாமல் திகைத்து முட்டி மோதி கொண்டிருக்கிறீர்களோ? யார் என் பிரச்சனையை தீர்ப்பார் என கலங்கி கொண்டிருக்கிறீர்களோ?  குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். ஆமென்இயேசுகிறிஸ்து உங்கள் பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிக்க வல்லவர். நீங்கள் விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கி என் பிரச்சனைகளுக்கு பரிகாரி நீர்தான் ஆண்டவரே என்று அவரது கரங்களில் விழும்போது அவர் நிச்சயமாகவே பிரச்சனைகளுக்கு பரிகாரியாக இருந்து விடுதலையை தருவார்.
என் பிரச்சனையை தீர்க்க அந்த ஆண்டவன் வந்தாலும் முடியாது என்று சொல்கிறீர்களா? நம் இயேசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அன்று கானா ஊர் கல்யாணத்தில் திராட்சரசம் குறைவு பட்டபோதுவெறும் தண்ணீரை சுவையான திராட்சரசமாக மாற்றிய தேவன் நம் தேவனல்லவா? உங்கள் வாழ்க்கை வெறும் தண்ணீராக சுவையற்றதாக பயனற்றதாக இருக்கிறதா? அதை சுவை நிறைந்த ரசமாக மாற்ற தேவனால் மாத்திரமே கூடும். ஆமென் அல்லேலூயா! குறைவுகளை நிறைவாக்குகிற தேவன் நம் தேவன்!

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு வழி நடத்தி வந்த போதுஅவர்களுக்கு முன்னால் சிவந்த சமுத்திரம் ஆரவாரத்தோடு அலையலையாய் அடித்து நின்றது. பின்னால்பார்வோனின் சேனைகள் அவர்களை பிடிக்க வேண்டும் என்று வெறியுடன் துரிதமாக தங்கள் இரதங்களை ஓட்டி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்த பக்கமும் செல்ல முடியாத நிலைமை! என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் அவர்கள் கர்த்தரின் கரத்தில் விழுந்தார்கள். கர்த்தரை நோக்கி பார்த்தார்கள். கர்த்தர் அந்த ஆரவாரமான கடலில் வழியை திறந்தார். அவர்கள் உலர்ந்த தரையில் நடப்பது போல அந்த கடலின் நடுவே நடந்து கடந்து சென்றார்கள். அவர்களை துரத்தி வந்த பார்வோனின் சேனை அதே சிவந்த சமுத்தரத்தில் மூழ்கி மரித்தார்கள்! என்ன ஒரு அற்புதமான தேவன் நம் தேவன்! உங்கள் பிரச்சனைகளும் சிவந்த சமுத்திரம் போல எதிரிட்டு வந்தாலும் அதன் நடுவே தேவன் உங்களுக்கு வழியை திறப்பார்! உங்களுக்கு எதிராக வரும் சத்துருவின் எல்லா தந்திரங்களையும் முறியடிப்பார்! உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்! உங்கள் பிரச்சனைகளிலிருந்து உங்களை நிச்சயமாகவே தேவன் தப்புவிப்பார்! ஆமென் அலலேலூயா!
எரியும் சூளையோ ஏழு மடங்கு எரிந்தாலும்
என் தேவன் தப்புவிக்க வல்லவர்
எரிகோ கோட்டையே தடையாய் நின்றாலும்
அதை இடித்து நொறுக்க தேவன் வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவன் இயேசு
என்னை தப்புவிக்க வல்லவர்

ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனேஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் அனுதின மன்னா வெளிவர தேவன் பாராட்டிய கிருபைக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். பலத்தினாலும் அல்ல,  பராக்கிரமத்தினாலும் அல்ல தேவனுடைய ஆவியினாலே ஆகும் என்று,  தேவன் எங்களுக்கு உம்முடைய கிருபையினால் வாசல்களை திறந்து கொடுத்த தயவிற்காக உம்மை துதிக்கிறோம். இப்போதும்தங்கள் பிரச்சனைகளிலிருந்து வெளி வர முடியாமல் தவிக்கிற ஒவ்வொருவருக்காகவும் இந்த வேளை ஜெபிக்கிறோம் அப்பா. அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவித்தருளும். அவர்களுக்கு ஒரு அற்புதம் செய்து அவர்களை விடுவித்தருளும். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையேஎல்லாமே உம்மாலே ஆகும் தகப்பனே. தயவாய் இரங்கி அவர்கள் தேவைகளை சந்திப்பீராக. தங்கள் நம்பிக்கையை உம் மீது வைத்து அற்புதத்தை பெற்றுக்கொள்ள கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும்
அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

மனம் திறந்து உங்களோடு:  

அன்பு நண்பர்களுக்குஇயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். கடந்த செவ்வாய் கிழமை முதல் நாங்கள் அனுதின மன்னாவை அனுப்ப முடியாத சூழ்நிலையில் இருந்தோம்.  ஏனென்றால் யாரோ  சிலர் ஜீமெயில் நிறுவனத்திற்கு (Gmail Organization) புகார் செய்துஅதனால் அவர்கள் அனுதினமன்னா செல்லாதபடி எல்லா இமெயில் ஐடிக்களையும் (Email Id) தடை செய்திருக்கிறார்கள். தற்போது தகுந்த முறையில் அனுதின மன்னாவை அனுப்புவதற்கு சில வழிகளை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஒரு வழி அடையும்போது ஏழு வழிகளை திறக்கிற நம்தேவன் ஒரு புதிய வழியை திறந்து கொடுத்திருக்கிறார். இன்றிலிருந்து இந்த புதிய மெயிலிலிருந்து அனுதினமன்னா வெளிவரும். அதை திறந்து கொடுத்த தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள். இந்த வகையில் தொடர்ந்து வெளிவர ஒவ்வொருவரும் உங்கள் ஜெபத்தில் இதற்காக ஜெபித்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இதற்காக உழைத்தவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் கர்த்தர் வானத்தின் பலகணிகளிலிருந்து ஆசீர்வதிப்பாராக! உங்கள் மேலான கருத்துக்களை கீழே காணப்படும் ஈமெயில் ஐடிக்கு (admin@anudinamanna.com)  மாத்திரம் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள் நண்பர்களுக்கு அனுதினமன்னா தேவையென்றால் அவர்களிடம் இந்த ஈமெயில் ஐடியை கொடுத்துஎங்களோடு தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுங்கள். நாங்களாக சேர்க்கும்போதுதேவையில்லாதவர்கள் அதை புகார் செய்ததால்இந்த பிரச்சனையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உங்களுக்கு நிலைமை புரிந்திருக்கும் என நம்புகிறோம். எங்களோடு கூட ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!  
PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.