Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Tuesday, March 6, 2012

தம் ரத்ததததில் தோய்ந்த -Tham rathathil thointha Lyrics


தம் ரத்ததததில் தோய்ந்த 
 


I கேள்வி

/heart 1. தம் ரத்ததததில் தோய்ந்த 
அங்கி போர்த்து,
மாதர் பின் புலம்ப 
நடந்து

/heart 2. பாரச் சிலுவையால் 
சோர்வுறவே
துனையாள் நிற்கின்றான் 
பாதையே.

/heart 3. கூடியே செல்கின்றார் 
அப்பாதையே
பின்னே தாங்குகின்றான் 
சீமோனே

/heart 4. குருசை சுமந்தெங்கே 
செல்லுகின்றார்?
முன் தபங்கிச் சுமக்கும் 
அவர் யார்?

II மறுமொழி

/heart 5. அவர் பின் செல்லுங்கள் 
கல்வாரிக்கே
அவர் பராபரன் 
மைந்தனே.

/heart 6. அவரின் நேசரே, 
நின்று, சற்றே
திவ்விய முகம் உற்று 
பாருமே.

/heart 7. சிலுவைச் சரிதை
கற்றுக் கொள்வீர்
பேரன்பை அதனால் 
அறிவீர்.

/heart 8. பாதையில் செல்வோரே: 
முன் ஏகிடும்
ரூபத்தில் காணீரோ 
சௌந்தரியம்?


III சிலுவை சரிதை

/heart 9. குருசில் அறையுண்ட 
மனிதனாய்
உம்மை நோக்குகின்றேன் 
எனக்காய்

/heart 10. கூர் முள் உம் கிரீடமாம் 
குரூசாசனம்
சிந்தினீர் எனக்காய் 
உம் ரத்தம்

/heart 11. உம் தலை சாய்க்கவோ 
திண்டு இல்லை:
கட்டையாம் சிலுவை 
உம் மெத்தை.

/heart 12. ஆணி கை கால், ஈட்டி 
பக்கம் பாய்ந்தும்,
ஒத்தாசைக்கங்கில்லை 
எவரும்

/heart 13. பட்டபகல் இதோ 
ராவாயிற்றே:
தூரத்தில் நிற்கின்றார் 
உற்றாரே.

/heart 14. ஆ, பெரும் ஓலமே! 
தோய் சோரியில்
உம் சிரம் சாய்க்கிறீர் 
மார்பினில்:

/heart 15. சாகும் கள்ளன் உம்மை 
நிந்திக்கவும்,
சகிக்கின்றீரே நீர் 
என்னாலும்.

/heart 16. தூரத்தில் தனியாய் 
உம் சொந்தத்தார்
மௌனமாய் அழுது 
நிற்கின்றார்.

/heart 17. “இயேசு நாசரேத்தான் 
யூதர் ராஜா”
என்னும் விலாசம் உம் 
பட்டமோ?

/heart 18. பாவி என் பொருட்டு 
மாளவும் நீர்
என்னில் எந்நன்மையை 
காண்கின்றீர்?

IV சிலுவையின் அழைப்பு
(குருவானவர் பாடுவது)

/heart 19. நோவில் பெற்றேன் சேயே: 
அன்பில் காத்தேன்
நீ வண்ணில் சேரவே 
நான் வந்தேன்.

/heart 20. தூரமாய் அலையும் 
உன்னைக் கண்டேன்:
என்னண்டைக் கிட்டிவா, 
அணைப்பேன்.

/heart 21. என் ரத்தம் சிந்தினேன் 
உன் பொருட்டாய்:
உன்னைக் கொள்ள வந்தேன் 
சொந்தமாய்.

/heart 22. எனக்காய் அழாதே,
அன்பின் சேயே:
போராடு, மோட்சத்தில்
சேரவே.

V இயேசுவை நாம் வேண்டல்

/heart 23. நான் துன்ப இருளில்
விண் ஜோதியே,
சாமட்டும் உம் பின்னே
செல்வேனே:

/heart 24. எப்பாரமாயினும்
உம் சிலுவை
நீர் தாங்கின் சுமப்பேன்
உம்மோடே.

/heart 25. நீர் என்னைச் சொந்தமாய்
கொண்டால், வேறே
யார் உம்மிலும் நேசர்
ஆவாரே?

/heart 26. இம்மையில் உம்மண்டை
நான் தங்கியே
மறுமையில் வாழ
செய்யுமே.


No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.