Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

சிறியவைகளில் உண்மை -Siriyavaigalil Unmai


08th  December 2009  - Tuesday

டிசம்பர் மாதம் 08-ம் தேதி – செவ்வாய் கிழமை

 சிறியவைகளில் உண்மை 

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
- (நீதிமொழிகள். 28:20).

உலகப்புகழ் பெற்ற சுவிசேஷகர் பில்லிகிரஹாமின் மகனிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. உங்கள் தந்தை ஒரு சின்ன ஆலயத்திற்கு போதகராயிருந்தும் எப்படி உலகளவில் பெரிய சுவிசேஷகராக மாறினார்?  என்பதே அந்த கேள்வி.  பில்லிகிரஹாமின் மகன் சொன்ன பதில்,என் தந்தை வெளியிடங்களில் எப்படி நடந்து கொள்வாரோ அப்படியே வீட்டிலும் இருப்பார். சின்ன சின்ன காரியங்களிலும் அவரிடம் காணபட்ட உண்மையே இந்த உயர்வுக்கு காரணம்’  என்றாராம்.

பொதுவாகவே மனிதர்கள் பெரிய விஷயத்தில் நேர்மையானவர்களாக நடந்து கொள்வதுண்டு. ஏனென்றால் மக்கள் மத்தியில் அவமானம் அடைந்துவிட கூடாதே என்ற காரணம். சிலர் சட்ட திட்டங்களுக்கு அஞ்சி நேர்மையுடன் செயல்படுவர். இப்படிப்பட்டவர்கள் அதிகாரிகள் கண்காணிக்க தவறும் சிறுசிறு விஷயங்களில் மிக எளிதாக மீறி நடப்பர். இப்படிப்பட்டவர்கள் எண்ணுவதெல்லாம் 'மிகவும் முக்கியமான பெரிய காரியங்களில் மாத்திரமே தேவன் நேர்மையை எதிர்ப்பார்க்கிறார்,  சாதாரண சின்ன சின்ன விஷயத்திற்கெல்லாம் போய் தேவன் நேர்மையை எதிர்பார்க்க மாட்டார்'  என்பர்.

நாம் நமது அனுதின வாழ்வில் எந்தெந்த காரியங்களையெல்லாம் இவை சின்ன விஷயம் என்றெண்ணி நேர்மை தவறுகிறோம் என்று பார்ப்போமா?  படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கும் புத்தகங்கள்  அல்லது சின்னசின்ன பொருட்களை திருப்பி தருவதற்கு கவனம் இல்லாமல் அலட்சியமாய் இருந்து விடுகிறோம். இன்னும் சிலர்,  பொது இடங்களில் அல்லது தங்கள் வேலை ஸ்தலங்களில் சிறு சிறு திருடுகள் செய்வதை பெரிதாக எண்ணுவதில்லை. உதாரணமாக,  இவர்கள் தங்கள் ஆபீஸிலிருந்து ரொம்ப சாதாரணமாக பேப்பரை எடுத்து வருவார்கள். பலர் ரோட்டில் பணத்தை கண்டெடுத்தால் அதை உரியவரிடம் சேர்க்க முயற்சிக்காமல் தங்கள் பையில் வைத்துக் கொள்வார்கள். பணத்திற்குரியவர் யார் என்று தெரியாவிட்டால் அதை அண்ட சராசரத்திற்கும் சொந்தக்காரான தேவனுக்கே கொடுத்து விட வேண்டும் அல்லது தேவையுள்ள ஏழை ஜனங்களுக்கு கொடுத்து விட வேண்டும். அது தானே முறை. சில நேரங்களில் கடைக்காரர் அதிகமான சில்லறையை கொடுக்கும்போது அதை நாம் தைரியமாக வாங்கி பையில் போட்டுக் கொள்கிறோம். இதுவும் நேர்மையற்ற செயல்தானே! இன்னும் சிலர்,  அரசாங்கத்திற்க்கு கட்டவேண்டிய வருமான வரியை கட்டுவதில்லை. சிலர் அலுவலக நேரத்தை வீணாக்குவார்கள். இதுவும் நேர்மையற்ற ஜீவியமே. இது கூடவா என்று கேட்கிறீர்களாஆம் கட்டாயம் இதுவும் தவறுதான்.

பிரியமானவர்களே,  நாம் செய்வது சிறிய தவறாக இருக்கலாம். ஆனால் இந்த சின்ன விஷயம் நம் நேர்மையையே அழித்து விடுகிறதே! 'ஒரு மனிதனுடைய இருதயத்தின் உண்மை நிலையை பெரிய நிகழ்ச்சிகளைக் காட்டிலும்,  சிறிய நிகழ்ச்சிகள் மூலமாகவே தெளிவாக கண்டிட முடியும்'  என்றார் சார்லஸ் பின்னி என்ற ஊழியர். கிறிஸ்தவரல்லாதவர்கள் சிறுசிறு விஷயத்தில்  நேர்மையற்றிருக்கும் கிறிஸ்தவர்களைக் கண்டு மிக எளிதில் குற்றம் சாட்டிவிடுவார்கள். இவர்கள் மூலம் தேவ நாமம் தூஷிக்கப்படுகிறதே! ஆகவே சின்ன சின்ன காரியங்களிலும் உண்மையுள்வர்களாயிருங்கள். தேவன் உங்களை அநேகத்திற்கு அதிபதியாய் மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!

   கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்
   அநேகத்திற்கு அதிகாரியாய்
   மாற்றுவேன் என்ற என் தேவனே
   நீர் என்னையும் மாற்றிடுமே

ஜெபம்: எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனேநாங்கள் சின்ன சின்ன காரியங்களிலும் உண்மையாயிருக்க எங்களை வழிநடத்தும். உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் என்று சொன்னீரேநாங்கள் எல்லா விஷயத்திலும்  உண்மையுள்ளவர்களாக காணப்பட உதவி செய்யும். எங்களை காண்கிறவர்கள்எங்களில் காணப்படும் உண்மையை கண்டு உம்மை மகிமை படுத்த எல்லாவிதத்திலும் நாங்கள் உண்மையாய் ஜீவிக்க எங்களுக்கு கிருபை செய்யும்.   எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும்
அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.