Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 19, 2012

பொறாமை என்னும் எலும்புருக்கி -Poraamai ennum elumburukki



This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 டிசம்பர் மாதம் 09-ம் தேதி - வெள்ளி கிழமை

பொறாமை என்னும் எலும்புருக்கி

கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? - (நீதிமொழிகள் 27:4).
.
சிற்பி ஒருவன் மிக சிறப்பானச் சிலை ஒன்றை செய்து மக்களின் பார்வைக்காக வைத்தான். அதன் அருகில் ஒரு கரும்பலகையையும் வைத்து பார்வையாளர்களின் கருத்தை எழுதும்படி குறித்திருந்தான். பார்த்தவர்கள் அனைவரும் அதன் கலை நுணுக்கத்தை வியந்து பாராட்டி, சிற்பியை புகழ்ந்து எழுதினார்கள். ஆனால் அங்கே இன்னொரு சிற்பி ஒருவன் வந்தான். மனதில் நிரம்பியிருந்த பொறாமை அவனுடைய கண்களை குறை கண்டுபிடிக்க ஏவியது. எனவே பல மணி நேரங்கள் சிலையை மிக கவனமாக சோதித்தான். இறுதியாக அதில் ஒரு குறையை கண்டுபிடித்தான். அந்த சிறிய குறையை பெரிய எழுத்துக்களில் அந்த கரும்பலகையில் எழுதினான். அதன் பின்னர் அங்கே வந்தவர்களெல்லாம் அந்த குறையையே கவனமாக பார்த்தனர். சிலையின் அழகு அவர்களுக்கு தெரியவில்லை.
.
ஆம், பிறருடைய செயல்களில் பெரும் பகுதி நல்லதாகவும், நன்மையானதாகவும் இருந்தால் அதனை பார்த்து பாராட்ட பழக வேண்டும். ஒருவரிடம் பாராட்டத்தக்க காரியங்கள் ஏராளமாக இருக்கும்போது, ஒரு சிறு குறையை கண்டிபிடித்து பெரிதுபடுத்தி, மட்டம் தட்ட நினைப்பது வேதனையானது. ஒரு சிலர், தங்களால் இயன்ற அளவு மிகவும் சிறப்பாக ஒரு காரியத்தை செய்திருப்பார்கள். அதை அநேகர் பாராட்டும்போது, பொறாமை கொண்ட உள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். அவர்கள் அதில் குறையை கண்டுபிடித்து மற்றவர்களிடம் சொல்ல, அதுவரை அவர் செய்த காரியத்தை பாராட்டினவர்களுக்கு அந்த குறைதான் பெரிதாக தோன்றும்.
.
எவ்வளவு நீதியும் நேர்மையும், சுத்தமுமாய் வாழ விரும்புகிறவர்களிடமும் சில குறைவுகள் காணப்படுவது இயற்கையே. குறை தேடும் விருப்பத்தோடு கூர்ந்து கவனிப்பவர்களுக்கு அது தெரிவதும் உண்மை. ஆனால் நிறைவுகளை பார்க்க துவங்கி விட்டால் உண்மையில் அங்கே குறைவுகள் காணப்படுவதே இல்லை.
.
இப்படி சொல்வதால் குறைகளை கண்டுகொள்ள கூடாது என்றோ, எந்த ஒன்றிலும் நல்ல பகுதிகளை மட்டுமே பார்க்க வேண்டுமென்றோ அர்த்தமில்லை. குறைகளை காண்பது என்பது வேறு, குறைகளை மட்டுமே காணும்படியாக தேடுவது என்பது வேறு. குறை தேடும் சிந்தை நம்மிடம் இருந்தால் எந்த நல்ல காரியத்திலும் குறைகளை மட்டுமே நம் கண்கள் காணும். சிலர் குறைகளை சுட்டி காட்டுவதும், விளம்பரம் செய்வதும் குறைகள் மேல் கொண்ட பாரத்தினாலோ, குறை தவிர்க்கப்பட வேண்டும் என்ற உயர் நோக்கத்தினாலோ அல்ல, சம்பந்தப்பட்ட மனிதரை தாழ்வாக பார்க்கவும், பிறருக்கு அதை காண்பிக்கவும், ஒரு வாய்ப்பு கிட்டிய சந்தோஷத்தினாலேயே அப்படி செய்கிறார்கள்.
.
இப்படிப்பட்ட மறைவான பொறாமையுணர்வும், சுத்தமற்ற இருதயமும் நமக்கு இருந்தால், இதற்காக மனம் வருந்தி தேவனிடம மன்றாடுவோம். 'உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?' என்று வேதம் கூறுகிறது. கோபமும், உக்கிரத்தையும் விட மிக மோசமானது பொறாமை என்னும் ஆமை. அதை இந்த வருடத்திலேயே கழித்து விட்டு, சுத்த இருதயத்தோடு புதிய வருடத்திற்குள் பிரவேசிப்போம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!
.

வேண்டாத பெலவீனங்கள்
ஆண்டவா உம்முன் வைக்கிறேன்
மீண்டும் தலை தூக்காமல்
மாண்டு மடியட்டுமே
உகந்த காணிக்கையாய் ஒப்புக்கொடுத்தேன் ஐயா
சுகந்த வாசனையாய் நுகர்ந்து மகிழுமையா
.


ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பொறாமை என்னும் தீய குணம் எங்களில் யாருக்குள்ளும் காணப்படாதபடி எங்களை சுத்திகரித்தருளும். எந்த நல்ல காரியத்திலும், தீயதை தேடி கொண்டிருக்காதபடி, நன்மையானதையே பார்க்க சுத்தமுள்ள இருதயத்தை கட்டளையிட்டருளும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் பரிசுத்த பிதாவே, எங்கள் ஜெபத்தை கேட்பவரே, எங்கள் ஜெபத்திற்கு உமது செவிகள் திறந்திருப்பதற்காக உம்மை துதிக்கிறோம்.
..
சகோதரி ரேச்சல் ஜாய் ஆல்பர்ட் அவர்கள் திருமணமாகி 25 வருடங்களாக கணவர் அவரோடு இல்லாமல், வேறு இடங்களில் வேலை பார்த்து, சகோதரிக்கு பணமும் அனுப்பாமல் வாழ்ந்து கொண்டிருப்பதை காண்கிற தேவன் நீரல்லவா தகப்பனே, அப்பா, சகோதரி ஒரு பெண் பிள்ளையை தனியாய் வளர்த்து, திருமணமும் செய்து கொடுத்து, தனிமையாய் இருக்கும் இந்த நாட்களிலாவது கணவர் தன்னோடு வந்து சேர மாட்டாரா என்று தவிக்கிறதை காண்கிற தேவனே அந்த கணவரோடு பேசும் ஐயா. அவர் ஒரு விதவையை திருமணம் செய்ய அவர் எடுக்கும் பிரயாசங்களை மாற்றி போடும் தகப்பனே. தன் மனைவியோடு ஐக்கியமாய் ஜீவிக்க கிருபை தாரும். கர்த்தர் முன்னிலையில் கைபிடித்த மனைவியை தள்ளி விடாதிருக்க அவருடைய இருதயத்தில் கிரியை செய்வீராக. அந்த சகோதரி கண்ணீரோடு கேட்கும் இந்த காரியத்திற்காக நாங்களும் மனதுருகி ஜெபிக்கிறோம் தகப்பனே, குடும்பத்தை சேர்த்து வைத்தருளும். புதிய வருடத்தை கணவரோடு சந்தோஷமாக காண கிருபை செய்யும்.
..
சகோதரி ஜீவி ஞான ஷர்மிளா அவர்களின் சகோதரி நேற்றைய தினம் முதலாவது திருமண நாளை காண செய்த தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். அவர்களது திருமண வாழ்க்கையை ஆசீர்வதிப்பீராக. கர்த்தருக்கு சாட்சியுள்ள குடும்பமாக திகழ கிருபை செய்யும்.
..
சகோதரன் செல்லதுரை அவர்கள் வரும் நாட்களில் பிலாய் என்னுமிடத்தில் கொடுக்க இருக்கும் தனது ஆராய்ச்சி காரியங்களை தேவன் ஆசீர்வதித்து, அது வெற்றிகரமாக முடிய கிருபை செய்வீராக. அவரது பிரயாணத்தையும் வாய்க்க செய்து, நல்லபடியாக முடித்து வர கிருபை செய்யும்.
..
சகோதரன் முத்து அவர்கள் தனது பரிட்சையை நல்லபடியாக முடிக்க செய்த பெரிதான கிருபைக்காக உமக்கு நன்றி. அவரது பேப்பரை திருத்துபவர்களின் கண்களில் தயவு கிடைத்து, நல்லபடியாக திருத்தப்பட்டு, நல்ல மதிப்பெண் பெற உதவி செய்யும்.எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.