Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 19, 2012

பரிசுத்த வாழ்க்கை -Parisuttha vaazhkkai



This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 டிசம்பர் மாதம் 14-ம் தேதி - புதன் கிழமை
பரிசுத்த வாழ்க்கை
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்'. - (1பேதுரு 1:15).
.
நாம் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். வழியில் ஒரு பெரிய பாதாள குழி வெட்டப்பட்டிருக்கிறது. கொஞ்சம் இருட்டாக இருந்தபடியால் நாம் பார்க்காதபடி அதில் விழுந்து விடுகிறோம். அதிலிருந்து வெளியே வர மிகவும் முயற்சித்து பின் எப்படியோ வெளியே வந்து விடுகிறோம். இது நம்முடைய தவறு அல்ல. அதை போலத்தான் நாம் பாவத்தில் விழும்போதும், நம்மை அறியாமல் நமக்கு சத்துருவானவன் வைத்திருக்கிற வலையில் விழுந்து விடுகிறோம். அது நமது தவறல்ல என்றாலும், அதிலிருந்து நாம் கஷ்டப்பட்டு வெளியே வந்து விட வேண்டும். அதிலேயே விழுந்து கிடக்கக்கூடாது.
.
அடுத்த நாள் திரும்பவும் அந்த வழியே செல்லும்போது, அந்த குழியை பார்க்கிறோம். நாம் திரும்பவும் விழுந்து போகிறோம். மீண்டும் கஷ்டப்பட்டு வெளியே வருகிறோம். இதுவும் நமது தவறு அல்ல. ஒரு தடவை தான் விழுந்தோம், நேற்று வெளியே வர கஷ்டப்பட்டோமே என்று நாம் நினைப்பதில்லை, திரும்பவும் அதிலே விழுந்து விடுகிறோம். ஏனெனில் ருசி கண்ட பூனையை போல, பாவத்தின் ருசி நம்மை விழ வைத்து விடுகிறது.
.
அடுத்த நாள் திரும்பவும் அந்த வழியே வருகிறோம். திரும்ப அந்த குழியில் விழுகிறோம். இப்போது அது பழக்கமாகிவிட்டது. நமக்கு அங்கு குழி இருக்கிறது என்று தெரிந்தும் நம் கண்கள் திறக்கப்பட்டும், போய் நாம் விழுந்தோமானால் அது நமது தவறாகும். எப்படியோ சீக்கிரமாய் வெளியே வந்து விடுகிறோம். இப்போது பாவத்தில் விழுவது வாடிக்கையாகி விட்டது. வெளியே வருவதற்கும் பிரியமில்லாமல் விழுந்து விழுந்து எழுவது பழக்கமாகி விடுகிறது. இப்படி பழகி விட்டால் பாவத்திலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமே.
.
தேவன் நம்மை அதற்காக அழைக்கவில்லை. விழுந்து விழுந்து எழுந்து நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்தரிப்பான் என்ற வசனத்தையே சொல்லி கொண்டு விழுந்து எழுந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்காக நாம் கர்த்தரால் அழைக்கப்படவில்லை. 'நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படியே இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, உங்களை அழைத்தவர் பரிசுத்தராகியிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்' (1 பேதுரு 1:14-15) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. முன்னே நம்முடைய அறியாமையினாலே விழுந்தோம். ஆனால் நாம் அப்படியே விழுந்து கிடக்கிறது தேவனுடைய சித்தமல்ல, அவர் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் ஜீவிப்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது.
.
அடுத்த நாளும் அந்த தெருவின் வழியே செல்கிறோம், குழியும் இருக்கிறது. ஆனால் அந்த குழியை சுற்றி நடந்து, விழாமல் பாதுகாத்து கொள்கிறோம்.
.
அடுத்த நாள் அந்த தெருவின் வழியாக செல்லாமல், வேறு தெருவின் வழியாக செல்ல ஆரம்பித்து விடுகிறோம். இதுவே நாம் அந்த குழியில் விழாதபடி நம்மை காத்து கொள்வதற்கு ஏற்ற வழியாகும். நமக்கு அந்த வழியில் சென்றால் பாவத்தில் விழுந்து விடுவோம் என்று தோன்றினால், அந்த வழியாக செல்லாமல், வேறு வழியாக செல்வதே நம்மை பாதுகாத்து கொள்ளும்படியான வழியாகும்.
.
இயேசுகிறிஸ்துவின் வருகை சமீபமாயிக்கிறது. நாம் பாவத்தில் புரண்டு கொண்டிருப்போமானால், திருடனை போல இருக்கும் அவருடைய வருகையில் கைவிடப்பட்டு போய் விடுவோம். அவர் பரிசுத்தமாய் இருப்பது போல நாமும் நம்மை பரிசுத்தமாய் காத்து கொள்வோமானால் அவருடைய வருகையில் நிச்சயமாய் நாம் எடுத்து கொள்ளப்படுவோம் என்பதில் சந்தேகமேயில்லை.
.
பாவம் செய்யாதபடி பாதுகாத்து கொள்ள வேண்டியது நம்முடைய செயலாகும். தேவன் என்னை பாதுகாத்து கொள்வார் என்று நாம் நம்மை காத்து கொள்ளாமல் போனால் நிச்சயமாய் விழுந்து போவோம். நாம் விழுந்து போகும்படி சத்துருவானவன் நமது கால்களுக்கு எப்போதும் வலையை விரிக்கிறவனாகவே இருக்கிறான். ஆனால் நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்கும்போது, அவனது கண்ணிகளுக்கு தப்பி நடக்க முடியும். நாம் அதற்காக முதலடி எடுத்து வைக்கும்போது, கர்த்தர் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கான கிருபைகளை தருவார். நாம் முதலடியே எடுத்து வைக்காமல், பாவத்தில் ருசித்து ரசித்து வாழ்ந்து கொண்டிருப்போமானால், நிச்சயமாகவே கிறிஸ்துவின் வருகையில் கைவிடப்பட்டவர்களாய் போய் விடுவோம். பாவம் நம்மை கறைப்படுத்தாதபடி நம்மை காத்து கொள்வோம். கர்த்தர் நமக்கு முழு வெற்றியை தருவார். ஆமென் அல்லேலூயா!
.
உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்
..
மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே
துதியும் கனமும், தூயோனே உமக்கே
.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, பாவத்தை வெறுத்து, அதற்கு விலகி ஓடும்படியாக எங்களுக்கு பெலத்தை தாரும் தகப்பனே. பாவத்திற்கு எதிர்த்து நின்று, அதிலிருந்து விடுதலை பெற்று வாழ ஒவ்வொருவருக்கும் தேவன் கிருபை செய்வீராக. நீர் பரிசுத்தராய் இருப்பது போல நாங்களும் எங்கள் வாழ்விலே எல்லாவற்றிலும் பரிசுத்தத்தை காத்து கொள்ள தேவன் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய நல்ல தகப்பனே, இதுவரை நாங்கள் கேட்ட ஜெபங்களுக்கு தேவரீர் உமது சித்தத்தின்படி பதில் கொடுத்து வருகிற தயவுள்ள கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். இப்போதும் எங்கள் விண்ணப்பங்களை உமது சமுகத்தில் வைக்கிறோம் தகப்பனே, பதிலை தருவீராக
..
சகோதரன் ஜெயசந்திரனுக்காக நாங்கள் உம்மிடத்தில் ஜெபிக்கிறோம் தகப்பனே, வீட்டில் மூத்தவராய் இருக்கும் அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும். அவருடைய தகப்பனார் குடித்து பணத்தை எல்லாம் செலவழிப்பதினால், வீட்டிற்கு அவரால் எந்த பயனும் இல்லாதிருக்கிறபடியால், சகோதரனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க தேவன் கிருபை செய்வீராக. தகப்பனாரின் குடிப்பழக்கத்திலிருந்து அவருக்கு ஒரு விடுதலையை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். குடும்ப பொறுப்பை உணர கிருபை தாரும். சகோதரனின் 10 மற்றும் 12 ஆவது படிக்கும் தம்பிகள் நன்கு படித்து, வாழ்வில் முன்னேற தேவன் கிருபை செய்வீராக.
..
சகோதரன் ஜோ லூயி அவர்களின் Ph.D படிப்பு ஏதோ தவற்றினால் முடியாமல் இருப்பதால், தேவன் தாமே அவருக்கு ஏற்ற ஞானத்தை கொடுத்து, சரியானபடி முடிக்க கிருபை செய்வீராக.
..
சகோதரன் ஹிபாஸ்கர் அவரின் சகோதரனின் குடிப்பழக்கத்திலிருந்து தேவன் ஒரு விடுதலையை கொடுப்பீராக. அவரது இரண்டு மகள்களின்எதிர்கால வாழ்வை தேவன் பொறுப்பெடுத்து கொள்ளும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரன் ஹிபாஸ்கர் அவர்களுக்கு ஏற்ற துணையை தேவன் தாமே கொடுத்து அவரையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் ஆரோக்கிய ராஜ் அவர்களின் உறவினர் ஜேம்ஸ்அவர்களுக்கு வாயில் புற்று நோய் வந்திருப்பதால், தேவன் தாமே தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நீரே சுகமளிக்கும் தேவன் என்பதை அவர் அறிந்து உமக்கு சாட்சியாக வாழும்படியாக கிருபை செய்வீராக.
..
சகோதரன் தமிழ்மணி அவர்கள் இடது பக்கத்தில் ஒருவிதமான பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவருக்கு பரிபூரண சுகத்தை கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம். அவர் கிறிஸ்துவை ஒரு வருடத்திற்கு முன் ஏற்று கொண்டு அவருக்காக வாழ்கிறபடியால், தேவரீர் அவருக்கு சுகத்தை கட்டளையிடுவீராக. அவர் உமக்கு சாட்சியாக ஜீவிக்கும்படியாக கிருபை செய்வீராக.
..
இன்றைய தினம் சகோதரன் கொல்வினுக்கும், சகோதரி அஸ்வினிக்கும்நடக்க இருக்கும் திருமணத்தில் தேவன் தாமே பிரசன்னராய் இருந்து, மணமக்களை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரன் கர்த்தருக்குள் ஜீவிக்கிறபடியால், அவருடைய வாழ்க்கையில் தேவன் தாமே தலைவராக இருந்து வழிநடத்தும்படியாக ஜெபிக்கிறோம். குடும்பமாக உமக்கென்று ஊழியம் செய்யவும், சாட்சியுள்ள குடும்பமாக ஜீவிக்கவும் கிருபை செய்யும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினால், அவரை நாங்கள் ஆசீர்வதிக்கிறோம். தொடர்ந்து உம்முடைய பிரசன்னத்தினால் வழிநடத்தும். அவர் செய்கிற பரலோக பாதை இன்டர்நெட் ஊழியங்களை தேவன் தொடர்ந்து ஆசீர்வதிப்பீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.