Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

பரிகாரியாகிய கர்த்தர் -Parikaariyaaya karthar


04th January 2010  - Monday

ஜனவரி மாதம் 04-ம் தேதி –  திங்கள் கிழமை

 பரிகாரியாகிய கர்த்தர் 

நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டுஅவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து,  அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து,  அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால்,  நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.  - (யாத்திராகமம் 15:26).

அனுதின மன்னா வாசகர்கள் ஒவ்வொருவருக்கும்எங்கள் குடும்பங்களின் சார்பாக எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். கர்த்தர் இந்த புதிய ஆண்டை ஒரு ஆசீர்வாதமான ஆண்டாக உங்களுக்கு அமைய எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறோம்.

கடந்த வருடம் முழுவதும் எபினேசராக இம்மட்டும் உதவி செய்த தேவன் இந்த வருடத்திலும் யெகோவாயீரேயாக இருந்து,  நமது தேவைகளை சநதிக்க வல்லவராகவே இருக்கிறார்.

பிரியமானவனேஉன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் (3யோவான் 1:2) என்ற வசனத்தின்படி நீங்கள் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி தேவன் கிருபை செய்வாராக!

இந்த வருடத்தின் வாக்குதத்தமாக நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று தேவன் எங்கள் சபைக்கு கொடுத்தார். அதையே அனுதினமன்னாவின் வாக்குதத்தமாக நாம் எடுத்து கொள்வோம். உலக பிரகாரமாக ஒவ்வொரு வியாதிக்கும் ஒவ்வொரு ஸ்பெஷலிஸ்ட் இருப்பார்கள். ஆனால் எல்லா வியாதிக்கும்எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு பரிகாரி நம் இயேசுவே. நான் உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று சொல்லாமல்,  நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்று ஒரு ஏகாரத்தை அந்த இடத்தில் வைத்து கர்த்தர் சொல்வதன் மூலம் நமக்கு வேறு ஒரு பரிகாரி இல்லாதபடி,  அவரே நமக்கு பரிகாரியாக இருக்கிறார்.

சமீபத்தில் செய்திதாளில் வந்த ஒரு செய்தி எல்லாரையும் திடுக்கிட வைத்தது. ஒரு மனிதன் ஒரு ஜோதிடனிடம் போய் தன் எதிர்காலத்தை குறித்து கேட்ட போது,  அந்த ஜோதிடன்சொன்னானாம்,  உனக்கு இந்த பிரச்சனை இருக்கிறது என்று. உடனே இந்த மனிதன்,  அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டபோதுஅந்த ஜோதிடன் சொன்னானாம்,  உனக்கு பிறந்த குழந்தையை நீ கொல்ல வேண்டும் அப்போது தான் உன்  பிரச்சனை தீரும் என்று. அப்போது அதை நம்பிய அந்த முட்டாள் மனிதன்,  தன் சொந்த பிள்ளையை கொல்ல வகை தேடினான். அதை அறிந்த மனைவிஅந்த பிள்ளையை பத்திரமாக பாதுகாத்தாள். ஆனால்,  ஒரு நாள்அந்த பிள்ளையை கணவன் இல்லாத நேரத்தில்,  தனியே விட்டுவிட்டு,  பக்கத்தில் கடைக்கு சென்று ஏதோ வாங்க போனாள். அப்போது வீட்டிற்குள் வந்த அந்த கண்வன்,  அந்த குழந்தையை ஆட்டாங்கல் எடுத்துதலையில் அடித்து கொன்றான். அந்த நேரத்தில் வந்த மனைவி,  நடந்ததை அறிந்து துடித்தாள்,  அந்த பிள்ளை அந்த இடத்திலேயே மரித்தது. அந்த கணவன் இன்றும் சிறையில் இருக்கிறான். இது ஒரு உண்மை சம்பவம். அவன் தன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்த்தான். ஆனால் அவனுடைய வாழ்வே ஒரு பிரச்சனையாக மாறி விட்டது.

உலகத்தின் பரிகாரங்கள் நம்மை துன்பப்பட வைக்கும். துயரப்பட வைக்கும். பரிகாரங்கள் என்று எதுவுமே இல்லை. அவை அந்த தெயவங்களை திருப்தி செய்ய வைக்குமே தவிர உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை கொண்டு வராது. சிலர் இந்த வருடம் எனக்கு எப்படி இருக்கும் என்று ஜோதிடரிடம் போய் தங்கள் கைளை காட்டிபார்க்கிறார்கள். ஹொராஸ்கோப் horoscope ) எப்படி இருக்கிறது என்பதை அறிய அதிக ஆவல். தொலை காட்சிகளிலும் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று நட்சத்திரங்களை வைத்துசொல்லுகிறார்கள். இது தேவனுக்கு மிகவும் அருவருப்பானது. தயவுசெய்து அனுதின மன்னா வாசகர்கள் யாரும் இப்படி பார்க்க வேண்டாம் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

நமது எந்த பிரச்சனைகளுக்கும் பரிகாரியாக நம் தேவன் இருக்கும்போது நாம் எதை குறித்தும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் சொல்கிறார்நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டுஅவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்துஅவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்துஅவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால்நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்று கூறுகிறார். கர்த்தருடைய அசீர்வாதங்கள் எல்லாமே ஒரு நிபந்தனையின் பேரில்தான் இருக்கும். நாம் அவருடைய பார்வைக்கு செம்மையானதை செய்யும்போதுஅவருடைய நியமங்களை கைகொள்ளும்போதுஅவர் நிச்சயமாகவே நம் பரிகாரியாக இருந்து நம் தேவைகளை சந்திப்பார். அவர் நமது வியாதிகளுக்கு மாத்திரமல்ல,  நம் கடன் பிரச்சனைகளுக்கும்,  நம் குடும்ப பிரச்சனைகளுக்கும்,  நம் வேலையிடத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்கும்,  நம் எல்லா பிரச்சனைகள்,  தேவைகளுக்கும் அவரே நமக்கு பரிகாரியாக இருக்கபோகிறார். நாம் விசுவாசிப்போம். வாக்குதத்தத்தை சுதந்தரித்து கொள்வோம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

இயேசு என் பரிகாரி - இன்ப
இயேசு என் பரிகாரி
என் ஜீவிய நாட்களெல்லாம்
இன்ப ராஜா என் பரிகாரி
பண கஷ்டங்கள் வந்தாலும்
மன கஷ்டங்கள் நேர்ந்தாலும்
ஜனம் என்னை வெறுத்தாலும்
இன்ப ராஜா என் பரிகாரி

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனேகடந்த வருடம் முழுவதும் எங்களை கண்ணின் மணியை போல காத்து கொண்டீரே உமக்கு நன்றி. இந்த புதிய வருடத்தை காண கிருபை செய்தீரே உமக்கு நன்றி. இந்த வருடத்திலும் நீர் எங்களுக்கு பரிகாரியான கர்த்தர் என்று கொடுத்த வாக்குதத்த்திற்காக கோடி ஸ்தோத்திரங்கள் தகப்பனே. நாங்கள் எங்கள் எல்லா வழிகளிலும் உமக்கு பிரியமானதை செய்யும்போது நீர் எங்கள் பரிகாரியாக இருக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. அனுதின மன்னா வாசகர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் குடும்பத்தையும் நீர் ஆசீர்வதிப்பீராக. அவர்களுடைய இருதய வாஞ்சைகளை அறிந்திருக்கிற தேவன்அவற்றை நிறைவேற்றுவீராக. இந்த வருடம் அவர்களுக்கு ஆசீர்வாதமானதாகவும்,  உம்மைண்டை இன்னும் நெருங்கி ஜீவிக்கிற வருடமாகவும் இருக்க உதவி செய்வீராக.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.