Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

நன்றி உள்ளம் நிறைவுடன் -Nantri Ullam Niranthaithavudan


பிப்ரவரி மாதம்
1st  February 2010  - Monday
பிப்ரவரி மாதம் 1-ம் தேதி – திங்கள் கிழமை
நன்றி உள்ளம் நிறைவுடன்
அவருடைய கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. - (சங்கீதம் 107:8).

இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் நெடு நாட்களுக்கு பிறகு சந்தித்தனர். ஒருவர் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. மற்றவர் அவரை பார்த்து,   'ஏன் என்ன ஆயிற்று'  என்று கேட்டார். அப்போது மற்றவர்,  'உனக்கு தெரியுமா,  மூன்று வாரத்திற்கு முன் என்னுடைய மாமா இறந்தார். அவர் எனக்கு 4,00,000 இலட்சம் என் பேரில் எழுதிவிட்டு போனார்என்று கூறினார். அப்போது மற்றவர், 'சந்தோஷமான செய்திதானே'  என்றபோதுஅவர்,  'இன்னும் கேள்இரண்டு வாரத்திற்கு முன்,  எனக்கே தெரியாத ஒரு உறவினர் என்பேரில் 8,00,000 எழுதிவிட்டு இறந்து போயிருக்கிறார்என்றதும், 'அடேயப்பாஇன்னும் ஏன் சோகமாய் இருக்கிறாய்'   என்றதற்குஅவர் 'இந்த வாரம் யாரும் மரித்து என்பேரில் எதையும் எழுதி வைக்கவில்லையேஎன்று கூறினார்.

தொடர்ந்து ஒருவருக்கு இலவசமாக ஏதாவது கிடைத்து வந்து,  அது ஒரு முறை கிடைக்கவில்லை என்றால் இந்த மாதிரிதான் நடக்கும். ஓரு நண்பர் சொன்னார்,  'ஒரு மனிதனின் குணத்தை அறிய வேண்டுமென்றால் அவனுக்கு மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து,  பின் நிறுத்தி பார்'  என்று கூறினார். ஆம்அவர் சொன்னது சரிதான்,  ஒரு முறை நிறுத்தியவுடன்,  எத்தனை கோபம்,  எத்தனை முக வேறுபாடுகள்! என்னவோ நாம் கொடுக்கும் அந்த பணம் அவர்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய பாக்கி என்பது போல நடந்து கொள்ள தொடங்கினார்கள்.

அதைப்போலத்தான்,  கர்த்தர் நமக்கு கொடுக்கிற எல்லா ஆசீர்வாதங்களும்,  அதை பெற்று கொள்ளுகிற நாம் அவருக்கு நன்றியாக ஜீவிக்க வேண்டும்.  நாம் தங்கியிருக்கிற நல்ல வீடுதினமும் குளிக்கும் நல்ல சுடத்தண்ணீர்,  குடிக்கிற நல்ல தண்ணீர்சுவாசிக்கிற சுத்தமான காற்று இவைகளை எல்லாம் அனுபவிக்கிற நாம் அதை கொடுக்கிற தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமாதேவன் நமக்கு கிருபையாய் தருகிற இவை எல்லாவற்றையும் அனுபவிக்கிற நாம் அவருக்கு நன்றியாய் இருக்கிறோமா? ஒரு நாள் தண்ணீர் வரவில்லை என்றால் எத்தனை கஷ்டங்கள்எத்தனை முறுமுறுப்புகள்! மின்சாரம் கொஞ்சநேரம் தடைபடும்போது நமக்கு எத்தனை புழுக்கம்,  எத்தனை அசௌகரியங்கள்! இவையெல்லாம் நமக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டிய காரியங்கள் என்று நாம் எடுத்து கொள்கிறோம். ஆனால் அதையெல்லாம் நமக்கு கொடுக்கிற நம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா? 
 '..நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,  நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும்,  நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும்,  நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும்,  அவர் உனக்குக் கொடுப்பதினால்,  நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,  நீ  அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு' (உபாகமம் 6:10-12)  என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார். நாம் வசிக்கிற பட்டணங்கள் எத்தனை வசதியானவை,   கிராமங்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு,  மின்சார வசதி மிகவும் குறைவுநாம் பழங்களை நட்டு,  உற்பத்தி செய்து சாப்பிடுவதில்லைஆனாலும் நாம் அருமையான பழ வகைகளை உண்கிறோம். வெளிநாட்டில் இருப்பவர்கள்,  விதவிதமான நாடுகளிலிருந்து வரும் பழவகைகளை உண்ணும் பாக்கியம்! திருப்தியாய் சாப்பிடுகிறோமே அது தேவனுடைய கிருபையல்லவா! பட்டினியாய் மடிகிற மக்கள் எத்தனைப்பேர்!

அவருடைய கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக என்று சங்கீதக்காரன் நமக்கு கூறுகிறார். அவர் தினமும் நமக்கு கொடுக்கும் அருமையான கிருபைளை நினைத்து அவரை துதிப்போமா! அவர் செய்கிற அதிசயங்களினிமித்தம் அவரை துதிப்போமா?  இந்த நாளில் இந்த காரியங்கள் நமக்கு தான் சொந்தம் என்று நினைப்பதைவிட தேவன் நமக்கு கிருபையாய் கொடுக்கிற காரியங்கள் என்று நினைத்து அவரை முழு இருதயத்தோடு துதிப்போமா?

நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
அதற்கீடாக நான் என்ன செய்வேன்
என்னையே உம் சொந்தமாய் படைக்கின்றேன் நான்
ஜெபம்: எங்களை உம்முடைய கண்ணின் மணியைபோல நேசித்து வழி நடத்தும் நல்ல தகப்பனேஇந்த வருடத்தின் முதல் மாதத்தை வெற்றிகரமாக முடிக்க கிருபை செய்தீரே உமக்கு நன்றி. கடந்த மாதம் முழுவதும் உம்முடைய செட்டைகளின் நிழலிலே எங்களை பாதுகாத்தீரே உமக்கு நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்து வரும் எல்லா இயற்கை அதிசயங்களுக்காகவும் உம்மை துதிக்கிறோம். இவற்றை காணவும் அனுபவிக்கவும் தேவரீர் எங்களுக்கு பாராட்டுகிற கிருபைகளுக்காக உம்மை துதிக்கிறோம். நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,  நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று சொன்னீரே நாங்கள் எப்போதும் உமக்கு நன்றியுள்ளவர்களாக ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.