Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

நன்றியால் துதிபாடு -Nantiyaal Thuthipaadu


29th December 2009  - Tuesday

டிசம்பர்  மாதம் 29-ம் தேதி –  செவ்வாய் கிழமை

 நன்றியால் துதிபாடு 

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
(1 தெசலோனிக்கேயர் 5: 16-18).

ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியை தன் மாணவிகளிடம்,  இன்று உலகத்தின் காணப்படும் ஏழு அதிசயங்களை குறித்த எழுதும்படி சொன்னார்கள். ஒவ்வொரு பிள்ளையும் எழுத ஆரம்பித்தார்கள். அவர்கள் உலகின் ஏழு அதிசயங்களையும் தாஜ்மகால்,  சீன சுவர்எகிப்தின் பிரமீடுகள்..  என்று எழுத ஆரம்பித்தார்கள். எல்லாரும் எழுதி கொடுத்தபின்னும்,  ஒரு மாணவி மாத்திரம் தரவில்லை. ஆசிரியை அந்த மாணவியிடம் சென்று 'ஏன் இன்னும் முடிக்கவில்லை'  என்று கேட்டபோது,  அவள் சொன்னாள்,  'அவை மிகவும் அதிகமாய் இருப்பதால் என்னால் எழுதி முடிக்க முடியவில்லைஎன்று சொன்னாள். அப்போது ஆசிரியை கேட்டார்கள்,  'நாங்கள் உனக்கு உதவி செய்கிறோம் சொல்என்று சொன்னார்கள். அப்போது அவள் சொன்னாள், 'நான் நினைக்கிறேன்உலகின் ஏழு அதிசயங்கள்,  நம்மால் காண முடிவது,  நம்மால் உணர முடிவது,  கேட்க முடிவது,  தொட முடிவது,  சிரிக்க முடிவது,  ருசிக்க முடிவது,  அன்பு கூற முடிவது என்று நினைக்கிறேன்'  என்று கூறினாள். அது எவ்வளவு உண்மை!

இந்த வருடத்தின் கடைசி நாட்களில் நாம் வந்து இருக்கிறோம். இந்த வருடம் முழுவதும் தேவன் நம்மை நடத்தி வந்த பாதைகள் எத்தனை இனிமையானவைகள்! எத்தனை அருமையானவைகள்! நம்மை ஜீவனோடு காத்தாரே! சுகத்தை கொடுத்தாரே! பெலத்தை கொடுத்தாரே! நாசியிலே சுவாசம் நின்று விடாதபடி நாம் ஜீவனுள்ளோர் தேசத்திலே வாழும்படி கிருபை செய்தாரே! ஒவ்வொரு நாளும் தமது கிருபையால் நம்மை வழிநடத்தினாரே! நமது போக்கையும் வரத்தையும் அருமையாய் காத்தாரே! எந்த நாச மோசங்களும் நேரிடாதபடி பாதுகாத்தாரே! நமது குடும்பத்தை பாதுகாத்தாரே! நமது பிள்ளைகளின் போக்கையும் வரத்தையும்அவர்களுடைய படிப்பிலும் கூட இருந்து வழிநடத்தினாரே! உலகத்தில் விதவிதமான நோய்கள் வந்தபோதும் எதுவும் நம்மை தாக்காதபடிவாதை உன் கூடாரத்தை அணுகாது என்ற வாக்குதத்தத்தின்படி நம்மை பாதுகாத்தாரே! வேலையிடத்தில் ஞானத்தை கொடுத்து வழிநடத்தினாரே! நல்ல சபையை கொடுத்தாரே! நல்ல நண்பர்களை கொடுத்தாரே!

இப்படி தேவன் செய்த நன்மைகளை சொல்லிக் கொண்டே போகலாம். மட்டுமல்லஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலும் தேவன் அதிசயமாய் நடத்திய அநேக காரியங்களும் உண்டு. எல்லாவிதத்திலும் தேவன் நம்மை நடத்தி வந்த வழிகளை நினைத்து,  நாம் அவரை இந்த நாட்களில் ஸ்தோத்திரிக்க கடமைப்பட்டிருக்கிறோம். வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது (சங்கீதம் 65:11) என்ற வார்த்தையின்படி இந்த வருஷம் முழுவதையும் நன்மையால் முடிசூட்டி நம்மை நடத்தின தேவனை துதிப்பது நமது கடமையல்லவா!

கர்த்தர் நமக்கு செய்த எல்லா உபகாரங்களுக்கும் ஈடாக எதை நாம் செலுத்த முடியும்?  சங்கீதக்காரனை போல 'கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும்அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டுகர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்' - (சங்கீதம் 116:13-14) என்று நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து 'அப்பா நீர் எனக்கு செய்த எல்லா உபகாரங்களுக்காகவும் உமக்கு நன்றி'  என்று அவரிடம் சொல்வோமா?  நன்றி நிறைந்த உள்ளத்தோடு அவருக்கு நன்றி செலுத்தும்போது அவர் அதை ஏற்று கொண்டு நம்மை இன்னும் அதிகமாய் ஆசீர்வதிக்கிறார்.

இந்த உலகம் சமாதானமில்லாமல்,  சந்தோஷமில்லாமல் தவிக்கலாம். ஆனால் கர்த்தரை ஏற்று கொண்ட அவருடைய பிள்ளைகளின் வாழ்வில்தேவன் ஒரு குறைவுமில்லாமல்தம்முடைய சமாதானத்தையே நமக்கு தந்து,  இந்த வருடம் முழுவதும் நம்மை நடத்திய நமது தந்தையாம் தேவனுக்கு இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துவோம். ஒருவேளை ஒருசில குறைகளும்சில பாடுகளின் வழியிலும் நாம் கடந்து வந்திருக்கலாம். ஆனால் எல்லா புத்திக்கும் மேலான் சமாதானத்தை அந்த சூழ்நிலையிலும் நாம் சோர்ந்து விடாதபடி நம்மை அருமையாய் வழி நடத்தின தேவனுக்கு நன்றிபலி செலுத்துவோம். அவருடைய நாமததிற்கே மகிமை உண்டாவதாக!

   நன்றி பலி பீடம் கட்டுவோம்
   நல்ல தேவன் நன்மை செய்தார்
   செய்த நன்மை ஆயிரங்கள்
   சொல்லி சொல்லி பாடுவேன்
   நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜெபம்: எங்களை அளவில்லாமல் நேசிக்கிற நல்ல தகப்பனேஇந்த வருடம் முழுவதும் எங்களை அதிசயமாய் நடத்தி வந்த உமது கிருபைக்காக நன்றியோடு துதிக்கிறோம். எங்களுடைய யெகோவாயீரேவாக நீர் இருந்து எங்களை வழிநடத்திய தேவனாகதேவைகளை சந்தித்தவராக இருந்த உமது கிருபைக்காக உமக்கு நன்றி,  நீர் செய்த எல்ல உபகாரங்களுக்காகவும் நாங்கள் என்னத்தை செலுத்த முடியும் தகப்பனே,  உள்ளத்தின் ஆழத்திலிருந்து உமக்கு நன்றி என்று சொல்லுகிறோம். நீர் இந்த வருடம் முழுவதும் பாராட்டின உமது நல்ல தயவிற்காக உமக்கு நன்றி ஐயா. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுவின் இணையற்ற நாமத்தில் உமக்கே செலுத்துகிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.