Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 19, 2012

நாவின் அதிகாரம் -Naavin Athikaaram



This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 டிசம்பர் மாதம் 15-ம் தேதி - வியாழக் கிழமை
நாவின் அதிகாரம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். - நீதிமொழிகள். 18:21.
.
ஒரு சிறுவனுக்கு எப்போதும் அதிகக் கோபம் வரும் அவனுடைய தந்தை எத்தனையோ முறை அவனிடம் அது நல்லதல்ல என்றுச் சொல்லிப் பார்த்தார். அவனுக்கு கோபம் கட்டுப்படவே இல்லை. ஒரு நாள் அவன் தந்தை ஒரு பை நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், தங்கள் வீட்டிற்கு வெளியே வெள்ளைச் சாயம் போட்ட கட்டை வேலியின் மீது, ஒரு ஆணியை அடிக்கச்சொன்னார். அதன்படி, அவன் அடித்துபோது, முதல் நாளில் 37 ஆணிகளை அடித்தான்.
.
அடுத்த சில வாரங்களில், அவன் கோபம் குறையத் தொடங்கியது. ஏனெனில் ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், வெளியேப் போய் ஆணிகளை அடிப்பதற்கு பதிலாக, கோபத்தை கட்டுபடுத்துவது அவனுக்கு எளியதாக கண்டது. அதை அவன் தகப்பன் கண்டபோது, அவனிடம் ஒவ்வொரு நாளும் போய் அவன் அடித்த ஆணிகளை பிடுங்கச் சொன்னார். அவன் அப்படியே எல்லாவற்றையும் பிடுங்கி முடித்தான்.
.
அன்று சாயங்காலம் அவன் தந்தை அவனது கையைப் பிடித்து அவனைக் கூட்டிக் கொண்டுப் போய், ‘மகனே, நீ செய்தக் காரியம் நல்லது, ஆனால்பார், நீ ஆணி அடித்த இடத்தை, இந்த அழகிய வேலி இனி அப்படி இருக்கப் போவது இல்லை. நீ ஆணியடித்ததினால் ஏற்பட்ட துளைகளைப் பார், அது துளைகளோடு காட்சியளிக்கிறது. அப்படித்தான் நீ அன்புகூருகிற ஒருவரிடம், நீ கோபத்தோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும், இந்த துளைகளைப் போல், இருதயத்தில் மாறாத வடுகளை ஏற்படுத்துகிறது. நீ கோபம் போன பிறகு எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடுக்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கும், ஆகவே கோபத்தைக் குறைத்து கோபமான வார்த்தைகளை பேசாதபடிக் காத்துக் கொள்’ என்று அவனுக்கு அறிவுரைக் கூறினார்.
.
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். -(யாக்கோபு 3:8-9) என்று வேதம் கூறுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவை சொந்தமாகக் கொண்ட ஜனம் நாவை அடக்கிக் கொள்ள பழக வேண்டும். தேவன் கொடுத்த நாவை மற்றவர்களை உற்சாகப்படுத்தவும், திடனற்றவர்களை தேற்றவும், தேவனை துதிக்கவும் பயன்படுத்த வேண்டும்.
.
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும் என்று நீதிமொழிகள் 25:15-ம் வசனத்தின் பின்பகுதியில் காணலாம். மற்றவர்களுக்கு பயன்படும் வார்த்தைகளையே பேசுவோம். மட்டுமல்ல, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் என்ற வேதம் நமக்கு கூறுகிறது. நாம் எதை பேசுகிறோமோ, அதன்படிதான் நடக்கும். நாம் மரணத்துக்கு ஏதுவான வார்த்தைகளை பேசினால், அதன் கனியைப் புசிப்போம். ஜீவனுக்கேதுவான் வார்த்தைகளை பேசினால் ஜீவனைப் பெறுவோம். உதாரணமாக, சங்கீதம் 23:6-ல் என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்' என்று பார்க்கிறோம். அதைக் கூறுவதை விட்டுவிட்டு, என் தந்தைக்கு அல்லது தாய்க்கு இரத்த அழுத்த வியாதி இருக்கிறது, அல்லது சர்க்கரை வியாதி இருக்கிறது அதனால் என்னையும் அது தொடரும் என்று நம் வாயினால் அறிக்கை செய்வது மரணத்துக் ஏதுவான வார்த்தைகளைப பேசுவதுப் போலாகும். அதற்கு பதிலாக, டயபடீஸோ, அல்லது ஹைபர் டென்ஷனோ அல்ல, நன்மையும் கிருபையுமே என்னைத் தொடரும் என்று அறிக்கை செய்வது, ஜீவனுக்கேதுவான வார்த்தைகளைப் பேசுவதுப் போலாகும். இன்று வரை எங்கள் குடும்ப ஜெபத்தில், எங்கள் ஜெபங்கள் முடிந்தப் பிறகு நாங்கள் குடும்பமாக, 23ம் சங்கீதத்தை விசுவாச அறிக்கையாக சொல்லித்தான் முடிப்போம். ஆந்த அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதமானது. எங்கள் அறிக்கைக் கேட்டு தேவன் எங்களை ஆசீர்வதிககிறார். நீங்களும் அப்படி செய்யலாமே!
.
ஆகவே, நல்ல வார்த்தைகளைப் பேசுவோம், விசுவாச வார்த்தைகளைப் பேசுவோம், மற்றவர்களுக்கு ஆறுதலை தேறுதலைக் கொண்டு வருவோம். அதற்காகவே தேவன் நாவைப் படைத்தார் என்று விசுவாசிப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!
.
நன்றியால் துதிப் பாடு உன் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
நல்லவர் வல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
ஜெபம்
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, எங்கள் நாவினால் நாங்கள் பாவம் செய்யாதபடி, எங்கள் நாவுகளைக் காத்துக் கொள்ள எஙக்ளுக்கு உதவி செய்யும். அவிசுவாசமான வார்த்தைகளை பேசாதபடி, விசுவாசமான வார்த்தைகளை பேசி, அதன் கனியை புசிக்க எங்களுக்கு கிருபைச் செய்யும். மற்றவர்களை பாதிக்கிற, விசனப்பட வைக்கிற வார்த்தைகளை பேசாதபடி ஒவ்வொரு நாளும் எங்களைக் காத்துக் கொள்ளும். இந்த நாவினால், உம்மைத் துதிக்கிறவர்களாக நன்றியால் எப்போதும் நாங்கள் நிறைந்தவர்களாக பாடிக் கொண்டிருக்க கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய நல்ல தகப்பனே, இதுவரை நாங்கள் கேட்ட ஜெபங்களுக்கு தேவரீர் உமது சித்தத்தின்படி பதில் கொடுத்து வருகிற தயவுள்ள கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். இப்போதும் எங்கள் விண்ணப்பங்களை உமது சமுகத்தில் வைக்கிறோம் தகப்பனே, பதிலை தருவீராக
..
சகோதரன் விஜய், ஜமுனா, ருக்மங்காதான் ஆகியோர் ஞானஸ்நான சாட்சிக்குள் கடந்து வரும்படியாக அவர்களோடு இடைபடுவீராக. சகோதரன் விஜய் சாமுவேல் அவர்களுக்கும் சகோதரி புவனா அவர்களுக்கும் நடைபெற இருந்த திருமணம் சில காரணங்களால் நின்று போனாலும், எல்லா தடைகளையும் நீக்கி, தேவன் தாமே உமது சித்தத்தின்படி அந்த திருமணம் நடந்து முடிய கிருபை செய்வீராக. எல்ஷடாய் தொழில் நிறுவனம் நடத்த தேவையான எல்லா ஆலோசனைகளையும் கொடுத்து, அதை சிறப்புற செய்ய வேண்டிய கிருபைகளை தேவன் தாமே தந்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் ஆஸ்பின் அவர்கள் செய்திருக்கிற பிராக்டிகல் பரிட்சையில் நல்ல மதிப்பெண்களோடு பாஸ் செய்யும்படியாக தேவன் கிருபை செய்வீராக.
..
சகோதரி மணிமேகலையின் சகோதரன் ஜோசப் 12ஆவது படிப்பதால், அவருக்கு படிப்பில் நாட்டம் இல்லாதிருப்பதால், படிக்க வேண்டிய வாஞ்சையை கட்டளையிடுவீராக. நேற்றிலிருந்து எழுதி கொண்டிருக்கிற அரையிறுதி பரிட்சையில் சரியாக எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற தேவன் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம்.
..
துபாயில் கடந்த செவ்வாய் கிழமை அன்று சகோதரி மேரி ஆன் அவர்களின் கணவர் வண்டி ஓட்டி சென்று கொண்டிருந்த போது, அவருக்கு எதிராக வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி, இருவருக்கும் ஒரு காயமும் ஆகாவிட்டாலும், வண்டிகள் படு நாசம் ஆகியிருக்கும் இந்த சூழ்நிலையில், போலீஸ் சகோதரன் மேல் குற்றம் சாட்டி இன்று ஏழாவது நாளாக அங்கு சிறையில் இருக்கும் சகோதரனுக்காக உம்மை நோக்கி ஜெபிக்கிறோம் தகப்பனே, இந்த கேஸ் கோர்ட்டிற்கு வரும்போது, எந்த பிரச்சனையும் இல்லாமல் சகோதரன் வீடு வந்து சேரும்படியாக தேவன் தாமே அந்த அதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்க செய்யும்படியாக உம்மை நோக்கி பார்க்கிறோம் தகப்பனே, இரண்டு சிறு பிள்ளைகளை வைத்து கொண்டு, சகோதரி முன்னே பின்னே தெரியாத ஊரில் என்ன செய்ய முடியும் ஐயா? தயவாய் அந்த சகோதரனை விடுவிப்பீராக. தன் குடும்பத்தோடு சேரும்படியாக கிருபை செய்வீராக.
..
சகோதரி கோல்டன் ஜூலி அவர்களின் சகோதரன் அமிர்தா சாம்விஜயா பேங்கில் இன்டர்வியூ பண்ணியிருப்பதால், உமது சித்தத்தின்படி அவருக்கு அங்கு வேலை கிடைக்க கிருபை செய்யும்.
..
சகோதரன் சதீஷ் அவர்கள் U.K. கல்லூரியிலேயே முதலாவது வந்தும், அவருக்கு பிடித்தமான இடத்திலும், சரியானபடி அவருக்கு வேலை கிடைக்காமல் இருப்பதால், தேவன் தாமே இரங்கி, அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையை கட்டளையிடும்படி ஜெபிக்கிறோம்.
..

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.