Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

மற்றவர்களை குறைசொல்லுதல் -Mattravargalai kurai solluthal


09th December 2009  - Wednesday

டிசம்பர் மாதம் 09-ம் தேதி – புதன் கிழமை

மற்றவர்களை குறைசொல்லுதல்

நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல்உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இதோஉன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படிமாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். - (மத்தேயு 7:3-5).

ஒரு நாள் வகுப்பறையில் ஆசிரியர்குமாரிடம் வீட்டு வேலை (home work) நோட்டை கொண்டு வரச் சொன்னார். அவன் சொன்னான், 'ஐயா நான் செய்யவில்லைஎன்று. ஆசிரியர் கேட்டார்ஏன் செய்யவில்லை என்றுஅப்போது அவன் சொன்னான், 'எங்கள் வீட்டு டெலிவிஷன் மிகவும் சத்தமாயிருந்தபடியால்என்னால் நீங்கள் கொடுத்த வேலையை செய்ய முடியவில்லைஎன்று சொன்னான். அப்போது ஆசிரியர்,  'ஏன்நீ யாரிடமாவது சத்தத்தை குறைக்க சொல்லியிருக்கலாமேஎன்று சொன்னபோது, 'யாரும் அப்போது வீட்டில் இல்லை ஐயாஎன்று பதிலளித்தான்.

சிலவேளைகளில் நாம் மற்றவர்கள் மேல் குறைகளை சொல்வதற்கு முந்தி விடுகிறோம்அவர்கள் அதை செய்யவில்லைஇதை செய்யவில்லை என்று. சபையானது,  'இன்னும் மிஷனரிகளை தாங்கலாம் என்று நான் நினைக்கிறேன்இன்னும் சுவிசேஷத்தை சபையாக பறைசாற்றலாம் என்று நான் நினைக்கிறேன்'  என்று நாம் சபையை குறை சொல்லி கொண்டு இருக்கிறோம். சில வேளைகளில் நாம் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால்,  நாம் அந்த கேள்விகளை எழுப்புவதற்கு முன், 'நான் அதற்காக என்ன  செய்தேன்என்று நம்மையே முதலில் கேட்டுவிட்டு,  பிறகு மற்ற கேள்விகளை கேட்பது நல்லது. நாம் எதையும் செய்யாத பட்சத்தில்,  செய்கிற மற்றவர்களை குறை சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அது தவறான செயலாகும்.

ஒரு முறை அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் சொன்னார்கள்,
'கர்த்தருக்காக யாரும் செய்யவில்லை என்றால் நீ போய் அதை செய்'  என்று. ஆனால் நம்மில் அநேகர்,  கர்த்தருக்காக எந்த காரியத்தையும் செய்வதுமில்லை,  தங்கள் நேரத்தை ஒதுக்கி,  தியாகமாய் கர்த்தருக்காக ஊழியங்களை செய்வதுமில்லை. தங்கள் பணத்தினாலே கர்த்தரை தாங்குவதுமில்லை இப்படி எல்லாமே இல்லை என்று இருக்கிற பட்சத்தில்,  அப்படி தியாகமாய் செய்கிற மற்றவர்களை குறித்துபட்டென்று பேசி விடுகிறோம். மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடிஅவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்;   கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே;  இப்படியிருக்கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள் (எண்ணாகமம் 16: 3) என்று முறுமுறுத்த கோராகின் கூட்டத்தாரை போல ஏன் அவர்கள் மாத்திரம் தான் செய்ய வேண்டுமாஎங்களால் முடியாதாஎன்று கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கிறோம். இப்படி கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கும் வரை கர்த்தரால் உங்களை எடுத்து பயன்படுத்த முடியாதுஎன்று நீங்கள் தியாகமாய் உங்கள் நேரத்தை உங்கள் பணத்தை உங்கள் தாலந்துகளை கர்த்தரிடம் ஒப்படைத்து 'அப்பா என்னையும் பயன்படுத்தும் என்று அவர் பாதத்தை பிடித்து கெஞ்சுகிறீர்களோ அப்போது தான் கர்த்தர் உங்களை பயன்படுத்த ஆரம்பிப்பார்'. கர்த்தருடைய ஊழியத்திற்கு,  ஊழியக்காரர்களுக்கு விரோதமாக நாம் முறுமுறுத்து குறை சொல்லி கொண்டே இருப்போமானால்நம்மில் இருக்கிற பரிசுத்த ஆவியானவரை துக்கிக்க வைத்து,  அவர் நம்மை விட்டு கடந்து போனதையும் அறியாதவர்களாக அவருக்கு விரோதமான காரியங்களை செய்கிறவர்களாகவே காணப்படுவோம்.

அப்படி குறை சொல்லாமல்சபையாக ஒன்றாய் இணைந்துஅழிந்து போகும் ஆத்துமாக்களுக்காகசபைக்கு வருகிற புதிய ஆத்துமாக்கள் கர்த்தருக்குள் வளரும்படி ஜெபிக்கிறவர்களாகமற்றவர்கள் செய்யாத ஊழியங்களை நாமாக வலிய வந்து செய்கிறவர்களாக காணப்படுவோமானால்சத்துரு அங்கு வெட்கி தலை குனிந்து போவான்.

விசுவாசிகள் நற்குணங்களிலும்,  நல்ல பண்புகளிலும் வளர வேண்டும். சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி,  தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு (1 தீமோத்தேயு 4:7)  என்ற வசனத்தின்படி தேவையில்லாத வாதங்களிலும்,  இருவர் கூடி வரும்போது சபை விசுவாசிகளை குறித்து குறை சொல்லி கொண்டிருக்காதபடி தேவ பக்திக்கேதுவான வார்த்தைகளை பேசி நற்கிரியைகளில் பெருக வேண்டும். குற்றஞ்சாட்டுகிறவன் என்று சாத்தானுக்கு ஒரு பெயர் உண்டு. அந்த பெயர் விசுவாசிகள் யாருக்குள்ளும் காணப்படாதபடிக்கு,  மற்றவர்களை குறை சொல்லாமல்,  தேவ ராஜ்ஜியம் விரிவடைய நம்மால் இயன்றதை கர்த்தருக்காக செய்வோமாக. டெலிவிஷன் சத்தமாயிருநதால் நாமே எழுந்துபோய் அதை நிறுத்துவோம். மற்றவர்களை அதற்காக குறை சொல்லாதிருப்போம். யாரும் செய்யவில்லை என்றால் நீ போய் அதை செய் என்ற வார்த்தையின்படி கர்த்தருக்காக எதையாவது செய்வோம். கர்த்தர் அதில் பிரியப்படுவார். ஆமென் அல்லேலூயா!

   துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
   முறுமுறுத்தால் திரும்பி வருவான்
   துதித்துபாடி மதிலை இடிப்போம்
   மகிழ்ந்து பாடி குறைகளை மன்னிப்போம்

ஜெபம்எங்களை அளவில்லாமல் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனேஉம்மை துதிக்கிறோம். மற்றவர்களை குறை பேசி தவறுகளை கண்டுபிடித்து கொண்டிருக்காதபடி எங்களால் இயன்றதை உம்முடைய ராஜ்ய விரிவிற்காக செய்ய எங்களுக்கு கிருபை செய்யும். முறுமுறுத்து உம்முடைய கோபத்திற்கு ஆளாகாதபடிக்கும்நீர் எங்களுக்கு கொடுத்த இரட்சிப்பை ஜாக்கிரதையாய் காத்துக் கொள்ளவும் கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.  கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.