Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 19, 2012

கடுகு விதை -Kadugu vithai



This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 டிசம்பர் மாதம் 08-ம் தேதி - வியாழக் கிழமை
கடுகு விதை
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
'தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது' - (மாற்கு 4:31-31).
.
மார்த்தா பெரி என்கிற இளம் பெண் தன்னுடைய மிகப்பெரிய பங்களாவிலிருந்து புத்தகத்தை படித்து கொண்டிருந்தபோது, வெளியே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த சத்தம் கேட்டது. அவள் அங்கு போய் அவர்களை அழைத்து கொண்டு வந்து, வேதத்திலுள்ள கதைகளை சொல்லி கொடுத்து அனுப்பினாள். அதன்பிறகு வாராவாரம் ஒரு நாள் அவர்களை அழைத்து அவள் வேதாகம சம்பவங்களை சொல்லி கொடுத்தும், படிக்க தெரியாதிருந்த சிறுவர்களுக்கு படிக்கவும் எழுதவும் சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள்.
.
1902-ல் ஒரு பள்ளிக்கூடத்தை அந்த இடத்தில் கொஞ்சம் பணத்தை திரட்டி ஆரம்பித்து, ஏழை மாணவர்களுக்கு அங்கு பாடம் சொல்லி கொடுக்கபட்டது. அது அப்படியே வளர்ந்து இப்போது 38 தனிப்பட்ட கட்டிடங்களாக, 2000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இடமாக பெரிதாக பெரி காலேஜ் ஆக உயர்ந்து நிற்கிறது. ஒரு கடுகு விதையை போல ஏழைகளுக்கென்று ஆரம்பிக்கப்பட்ட அந்த பள்ளி, தற்போது ஒரு பெரிய கல்லூரியாக, பெயர் பெற்ற கல்லூரியாக சிறந்து விளங்குகிறது.
.
மேற்கண்ட வசனத்தில் தேவனுடைய ராஜ்யம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசுகிறிஸ்து சொன்னார். தேவனுடைய ராஜ்யம் என்றால் நாம் நினைப்பது, ஒரு பெரிய சாம்ராஜ்யம், கிறிஸ்து அதிலிருந்து இராஜாதி இராஜாவாக அரசாளுவார் என்று தான். ஒரு போதும் ஒரு சிறிய கடுகு விதைக்கு ஒப்பாக நாம் நினைக்க மாட்டோம். ஆனால் இயேசுகிறிஸ்து தேவ ராஜ்யத்தை கடுகு விதைக்கு ஏன் ஒப்பிட்டு சொன்னார்?
.
கடுகு விதையை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். நம் இந்திய சமையலில் கடுகு போட்டு தாளிக்காமல் எந்த குழம்பையும் நாம் செய்ததில்லை (ஒரு சில குழம்புகளை தவிர). குறைந்தது 750 விதைகளாவது இருந்தால் தான் ஒரு கிராம் எடைக்கு சரியாகும். அவ்வளவு சிறிய கடுகு விதையாயிருந்தாலும், அது சரியான நிலத்தில் விதைக்கப்படும்போது, மிக பெரிய மரமாக மாறுகிறது.
.
அந்த காலத்தில் வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்துவின் ஊழியங்களினால் என்ன பயன் கிடைக்க போகிறது என்று நினைத்தார்கள். இயேசுகிறிஸ்துவை அவர்கள் மேசியாவாக காணவில்லை, ஏதோ ஒரு போதகராகத்தான் கண்டார்கள். ஏனெனில் கிறிஸ்து ஏழ்மையான பெத்லகேமில் ஏழ்மையான நிலையில் பிறந்தார். நாசரேத்தில் வளர்க்கப்பட்டார். நாசரேத் மத காரியங்களில் மிகவும் பின்தங்கியதாக அந்நாட்களில் கருதப்பட்டது. கிறிஸ்து மூன்றரை வருட ஊழியத்தில் பணம் இருந்ததில்லை, அன்றைய மதத்தலைவர்கள் அவரை எதிரியாக நினைத்தனர். அவரோடு கூட இருந்த சீஷர்கள் பெரிய இடத்திலிருந்து வந்தவர்கள் அல்ல. ஆகவே இவரால் நமக்கு என்ன நடக்க போகிறது என்று அவர்கள் நினைத்தார்கள். அவரது ஊழியம் கடுகு விதையை போல மிகவும் அற்பமானதாக இருந்தாலும், பின்னாளில் நடந்தது என்ன? எங்கெல்லாம் சுவிசேஷமாகிய கடுகு விதை விதைக்கப்பட்டதோ அங்கெல்லாம் மனிதரின் வாழ்க்கை மாறியது, வாழ்க்கை தரம் உயர்ந்தது.
.
கடுகு விதை நல்ல நிலத்தில் விதைக்கபட்டால், அது மிகப்பெரிய மரமாக வளருமாம். குறைந்த பட்சம் 15அடி உயரத்திற்கு கூட வளருமாம். ஆம், பேதுருவினால் சுவிசேஷம் விதைக்கப்பட்டபோது, ஒரே நாளில் 3000 பேர் கர்த்தரை ஏற்று கொண்டார்கள். 5000 பேர் ஏற்று கொண்டார்கள். கிறிஸ்துவை ஏற்று கொண்டவர்கள் பலுகி பெருக ஆரம்பித்தார்கள். ஆங்காங்கே சென்று விதைக்க ஆரம்பித்தார்கள். அநேக சபைகள் எழும்பின, அநேக ஆஸ்பத்திரிகள் கிறிஸ்துவின் நாமத்தில் கட்டப்பட்டன, அனாதை ஆசிரமங்கள், தொழுநோய் மருத்துவமனைகள் கிறிஸ்துவின் நாமத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டன. ஆம், ஒரு சிறு கடுகு விதையை போன்று தான் கிறிஸ்து மூன்றரை வருடகால் ஊழியத்தை செய்தார். ஆனால் அவருடைய அந்த ஊழியம் இன்று பெரிய மரமாக வளர்ந்து பெருகி நிற்கிறது. அல்லேலூயா! 'விதைக்கப்பட்டபின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும்' என்ற வசனத்தின்படி அநேகருக்கு வாழ்வு தந்து இம்மையில் மாத்திரமல்ல, மறுமையிலும் நித்திய வாழ்வு தருவதாக கர்த்தருடைய தேவ ராஜ்யம் விளங்குகிறது.
.
பிரியமானவர்களே, தாவீது ஒரு கடுகு விதையை போலத்தான் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். ஆனால் கர்த்தர் அவரை தெரிந்து கொண்டு, முழு இஸ்ரவேலுக்கும் அரசராக்கினார் அல்லவா? மோசே தான் ஒரு திக்குவாயன் என்று சொன்னாலும், அவரை கொண்டுதான் கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். கிதியோன் இஸ்ரவேலரின் எல்லா கோத்திரத்திலும் தன் கோத்திரம் மிகவும் எளிமையானது என்று கூறினபோதும், அவரை கொண்டு தான் கர்த்தர் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பை கொடுத்தார். இப்படி சொல்லி கொண்டே போகலாம்...
.
நாமும் நான் என்ன ஒரு கடுகு விதையை போலத்தான் இருக்கிறேன் என்று சொல்லாம், நம்முடைய ஆரம்பம் அற்பமாயிருந்தாலும், பின்னாளில் முடிவு சம்பூரணமாக இருக்கும்படி தேவன் கிருபை செய்வார். நம்முடைய கண்களுக்கு மிக சிறியதாக தோன்றும் நம்முடைய ஊழியத்தை கொண்டு தேவனால் மிகப்பெரிய எழுப்புதலை கொண்டு வரமுடியும். 'அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்?' (சகரியா 4:10) கையளவு மேகத்தை கொண்டு தேவனால் கனமழையை கொண்டு வரமுடியுமென்றால், நம்மை கொண்டும் பெரிய காரியத்தை செய்வது அவரால் முடியுமல்லவா? நம்மால் முயன்றதை நாம் கடுகளவு விதையை போலிருந்தாலும் முழு மூச்சோடு செய்வோம். கர்த்தர் அதை பெரிய மரமாக தழைத்தோங்க செய்வார். ஆமென் அல்லேலூயா!
.
ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூரணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும்
என்வறட்சி செழிப்பாகட்டும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா
.

ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, ஒரு கடுகு விதையை தேவனுடைய ராஜ்யத்திற்கு ஒப்பிட்டு சொல்லி, அதன் மூலம் சத்தியத்தை எங்களுக்கு வெளிப்படுத்தின தயவிற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகை மிகவும் தாழ்மையுள்ளதாக இருந்தாலும், அவருடைய மூன்றறை வருட ஊழியமும், அவர் எங்களுக்காக தம் ஜீவனையே கொடுத்து சென்றதால், இன்று கிறிஸ்துவின் நாமத்தில் அநேக அன்பின் ஊழியங்கள் நடைபெறுகிறதே தகப்பனே அதற்காக உமக்கு ஸ்தோத்திரம். பெரிய மரமாகி அநேகருக்கு பயன்படும்படியாக சுவிசேஷம் வளர்ந்திருப்பதற்காகவும், இன்னும் கர்த்தருடைய இரண்டாம் வருகைக்குள்ளாய் அநேகர் அவரண்டை வந்து சேரவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்பதற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் நேச தந்தையே உமது பரிசுத்த குமாரன் இயேசுகிறிஸ்து 'ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்' என்று சொன்ன வாக்குதத்தத்தின்படி நாங்கள் விசுவாசத்தோடு எங்கள் ஜெபங்களை உம்மிடத்தில் ஏறெடுக்கிறோம் தகப்பனே,
..
சகோதரி எஸ்கலின் நான்சி அவர்களின் குடும்பத்தில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் தேவன் மாற்றி போடுவீராக. கணவன் மனைவி இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், கோபமான காரியங்களிலிருந்து விடுபடவும், சமாதானத்தோடு அன்போடும் ஐக்கியத்தோடும் வாழவும் தேவன் தாமே கிருபை செய்வீராக. இந்த குடும்ப ஐக்கியத்திற்கு விரோதமாக செயல்படும் எல்லா சத்துருவின் அந்தகார சக்திகளையும் இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கடிந்து அப்புறப்படுத்துகிறோம். சமாதானம் பெருகும்படியாக ஜெபிக்கிறோம். சாட்சியுள்ள குடும்பமாக மாற்றுவீராக.
..
சகோதரி சுகந்திக்கு காலில் ஏற்பட்ட பயங்கரமான வலியினால் ஜூலை மாதம் ஸ்பைன் சர்ஜரி செய்தும், இன்னும் வலி குறையாமல் இருப்பதாலும், அவர்களுடைய வேலை 8 மணி நேரம் கம்பியூட்டரில் உட்கார்ந்து செய்ய வேண்டி இருப்பதால், பத்து நிமிடம் கூட உடகார்ந்து செய்ய முடியாதபடி வலியும் வேதனையும் இருப்பதாக எழுதியிருக்கிறார்களே, அவர்களுடைய வேதனையை அறிந்த தேவன் நீரல்லவா தகப்பனே, தயவாய் தொட்டு குணப்படுத்துவீராக. வேதனைகளை மாற்றுவீராக. எதினால் அந்த வலி வருகிறது என்று அறிந்து, சரியானபடி சிகிச்சை பெற்று, பரிபூரண விடுதலையை பெற்று கொள்ள கிருபை செய்யும்.
..
சகோதரன் பிரான்சிஸ் அவர்கள் துபாயில் விசிட் விசாவில் வந்து இருப்பதால், அவருக்கு அவருடைய படிப்பிற்கேற்ற வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். விசா பிரச்சனை எல்லாவற்றையும் மாற்றி, அவருக்கு வேலை கிடைக்க கிருபை செய்வீராக. அவருடைய குடும்பத்தையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரி பெர்ஸி அவர்களோடு வேலை செய்யும் சகோதரன் மாரியப்பன்அவர்களுக்கு கேன்சர் வியாதியினிமித்தம் கடைசி நிலையில் இருப்பதால், தேவரீர் உமது சித்தத்தின்படி அவருக்கு சுகத்தை கொடுப்பீராக. அவர் சுகத்தோடு வந்து தேவனே எனக்கு சுகத்தை கொடுத்தார் என்று சாட்சி சொல்லதக்கதாக பெரிய காரியத்தை தேவன் செய்யும்படியாக ஜெபிக்கிறோம்.
..
சகோதரன் சி.என். அண்ணாதுரை அவர்களுக்கு குத்தகைக்கு அவருக்கு விருப்பமான இடத்தில் ஒரு வீடு கிடைக்கும்படியாக தேவன் கிருபை செய்வீராக. அவருடைய மனைவி ராஜம்மாள் நர்ஸாக இருப்பதால் ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும். அவருடைய நண்பர் விஜயகுமார்அவர்களின் மனநோயிற்காக நாங்கள் ஏற்கனவே ஜெபித்திருக்கிறோம் ஐயா. நீர் அவருக்கு கொடுத்து வருகிற சுகத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். அவருடைய மனைவி இரண்டு வருடங்களாக கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறபடியால், தேவன் தாமே அவர்களை சேர்த்து வைக்கும்படியாக ஜெபிக்கிறோம். எல்லா பிரச்சனைகளையும் மாற்றி கணவனோடு வாழும்படியாக அந்த சகோதரியின் இருதயத்தில் கிரியை செய்வீராக.
..
சகோதரி கல்லீஸ்வரி அவர்கள் காலேஜில் பரிட்சை எழுதி இருப்பதால் நல்லபடியாக வெற்றி பெறவும், அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலை கிடைக்கவும் ஜெபிக்கிறோம். அவருடைய சகோதரிக்கு குழந்தை பிறந்துள்ளதால் அந்த தாயையும் சேயையும் காத்து கொள்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு பதில் கொடுக்க போகிற தயவிற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
..

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.