Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Sunday, March 18, 2012

ஜெப குறிப்பு -Jeba kurippu



This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2011 டிசம்பர் மாதம் 03-ம் தேதி - சனி கிழமை
ஜெப குறிப்பு
...
கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளுக்கு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இனிய வாழ்த்துக்கள். கடந்த நான்கு நாட்களாக அனுதின மன்னா அனுப்ப முடியாமற்போனது. அதற்காக வருந்துகிறோம். அநேகர் இதை குறித்து விசாரித்தீர்கள். ஒவ்வொருவருக்கும் எங்கள் நன்றி. ஒவ்வொரு நாளும் மன்னாவை மெயிலில் அனுப்பும் சகோதரனுக்கு திடீரென்று தலைசுற்றல் வந்து, அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. டாக்டர்கள் அதை Vertigo என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கான சிகிச்சை எடுத்து, இப்போது சற்று பரவாயில்லை. தயவு செய்து அவருக்காக தொடர்ந்து ஜெபிக்கும்படி கேட்டு கொள்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், நாளையிலிருந்து அனுதின மன்னா தொடர்ந்து வெளிவரும் என்று தெரிவித்து கொள்கிறோம்.
.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் சகோதரனை உமது கரத்தில் வைக்கிறோம். அவருக்கு இருக்கிற எல்லா தலைசுற்றலையும், தலையில் பாரமாக இருக்கும் எல்லா வேதனைகளையும் நீரே தொட்டு சுகப்படுத்துவீராக. ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிற தேவன் நீரே ஐயா. அவருக்கு பரிபூரண சுகத்தை கட்டளையிடுவீராக. ஊழியம் தடைபடாதபடி அவருக்கு நல்ல சுகத்தை கொடுத்து வழிநடத்தும்படியாக ஜெபிக்கிறோம். உம்முடைய ஊழியத்தை தடைசெய்யும்படியாக சத்துருவானவன் எடுக்கும் எல்லா திட்டங்களையும் இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் முறியடிக்கிறோம். நீரே ஜெயத்தை தருவீராக. அனுதின மன்னா வாசகர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும். உம்முடைய கரம் தொடர்ந்து அவர்களை வழிநடத்தட்டும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
.

..
..
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.