Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

இன்றைய வாக்குத்தத்தம் -Intaiya vaakkuthattham


 இன்றைய வாக்குத்தத்தம்:

       உபாகமம் 28 :1 -14 :-
                                                                                                                                           


1 . இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படி எல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு,அவர் சத்தத்திற்கு செவி கொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.

2 . நீ உன் தேவனாகிய கர்த்தரின் சதத்துக்கு செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசிர்வாதங்களெல்லாம்  உன் மேல் வந்து உனக்கு பலிக்கும்.

3 . நீ பட்டனதில்லும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய் ; வெளியிலும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய்.

4 . உன் கர்ப்பத்தின் கனியும்,உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும்  ஆசிர்வதிக்கபட்டிருக்கும்.


5 . உன் கூடையும், மாப்பிசைக்கிற உன் தொட்டியும் ஆசிர்வதிக்கபட்டிருக்கும்.


                       cross.jpg Jesus cross image by enokch

6 . நீ வருகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய் ;நீ போகையிலும் ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய் ;


7 . உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களை கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராக புறப்பட்டு வருவார்கள்;ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடி போவார்கள்.

8 . கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேளையிலும் உனக்கு ஆசிர்வாதம்  கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசிர்வதிப்பார்.

9 .நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே,  உன்னை தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைபடுத்துவார்.

10 . அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்கு தரிக்கபட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு , உனக்கு பயப்படுவார்கள் .

                       Gothic-cross-pray-faith                

11 . உனக்கு கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் ,கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும்,உன் மிருகஜீவங்களுன் பலனிலும் , உன் நிலத்தின் கனியிலும் உனக்கு பரிபூரண நன்மை உண்டாக கட்டளையிடுவார்.

12 . ஏற்ற காலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டு செய்யும் வேலைகளையெல்லாம் ஆசிர்வதிக்கவும், கர்த்தர் உனக்கு தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தை திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்கு கடன் கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய் .

13 .இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களை சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல்.

14 . இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கட்டளைகளை கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்கு செவிகொடுத்து வந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார்; நீ கீழாகாமல் மேலாகுவாய்.
                              


No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.