Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

எந்த நிலையிலும் மனரம்மியம் -Entha nilaiyilum Manarammyam


21st  December 2009  - Monday

டிசம்பர்  மாதம் 21-ம் தேதி – திங்கள் கிழமை
எந்த நிலையிலும் மனரம்மியம்

நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். - பிலிப்பியர் - 4:11.    
ஒரு மனிதனின் கையிலுள்ள கைக்கடிகாரம் ஓயாமல் இப்படி புலம்பிக்கொண்டே இருந்ததாம், 'ச்சே... என்னை இவர் மட்டும் தான் பார்க்கிறார்.  இவருக்கு மட்டும் தான் பயன்படுகிறேன்.  ஆனால் இந்த சுவரிலுள்ள கடிகாரத்தை பாரு... எல்லோரும் அதைத்தான் பாhக்கிறார்கள். நான் அதைப்போல் இல்லையேஎன்று கவலைப்பட்டதாம்.  இதனுடைய புலம்பல் தாங்க முடியாமல்அம்மனிதர் 'நீர் சுவர் கடிகாரமாக இருக்கத்தானே ஆசைப்படுகிறாய் சரி உன்னை அது இருக்குமிடத்தில் மாட்டிவிடுகிறேன்என்று சொல்லி சுவரில் கைகடிகாரத்தை மாட்டிவிட்டார்.  அந்தோ பரிதாபம்! அந்த கைகடிகாரத்தை யாராலும் பார்க்க முடியவில்லை.  அது தான் ஆசைப்பட்டபடி உயரத்திற்கு சென்றுவிட்டது.  ஆனால் யாருக்கும் பயன்படமுடியவில்லை.  ஒரு பிரயோஜனமும் இல்லாமல் இருந்தது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் நம் ஒவ்வொருவரையும் தகுதியான நிலைமையிலே,  அவருடைய அநாதி சித்தததின்படி  நம்மை மிகச்சிறந்த இடத்திலே வைததுள்ளார். ஆனால் நாம் நமக்குள்ள மேன்மையை அறியாதபடி அவர்களை போன்று எனக்கு அது இல்லையே இது இல்லையே என்று புலம்புகிறோம். நமக்குள்ளதில் திருப்தி காணாமல் பிறரை போல வாழ ஆசைப்படுகிறோம்.

ஆனால் தேவன் நம்  வாழ்விலே நமக்கென்று கொடுத்துள்ள கணவர்,  வேலை,  சொத்து போன்றவை மிகமிக சிறந்ததே. தேவன் நம் வாழ்வில் சிறந்ததையே தந்துள்ளார் என்பதை மறக்க வேண்டாம். நமக்குரியதை பிறருக்குரியதோடு ஒப்பிட்டு மனம் சலித்து கொள்ள வேண்டாம். வீட்டிலேவேலை ஸ்தலத்திலே தேவன் நமக்கு கொடுத்துள்ள ஸ்தானத்தில் மனரம்மியமாய் இருப்போம். நமக்கில்லாதவைகளை கண்டு ஏங்கி தவிக்காதபடி இருக்கிறவைகளுக்காக நன்றி சொல்ல தொடங்குவோம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

   சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
   சந்தோஷமாயிருங்க
   உயர்வானாலும் தாழ்வானாலும்
   சர்வ வல்ல தேவன் நம்மோடு இருக்கிறார்

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தேவனேஉம்மை துதிக்கிறோம். எங்களுக்கென்று உள்ளதை நாங்கள் மனரம்மியமாய் அனுபவிக்க கிருபை செய்யும். இருப்பதில் திருப்தி காண கிருபை செய்யும். மற்றவர்களை கண்டு அவர்களுடைய நிலையை கண்டு ஏக்கப்படாதபடி,  உள்ளதிலே மகிழ்ச்சி அடைய கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

குறிப்பு: அன்பு நண்பர்களேஅநேக அனுதின மன்னா வாசகர்கள் விடுமுறையினிமித்தம் மன்னாவை படிக்க இயலாத சூழ்நிலையில் இருப்பதால்,  மற்றும் விடுமுறைக்கு செல்வதால் மன்னாவை அனுப்ப வேண்டாம் என்று கேட்டும் இருப்பதால்,  புது வருடம் வரை மன்னாவை அனுப்ப வேண்டாம் என தீர்மானித்திருக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த மன்னா புது வருடத்தில் ஜனவரி மாதம் 3ம் தேதியிலிருந்து வெளிவரும் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறோம். உங்கள் அனைவருக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துதலை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் வரை கர்த்தருடைய பெரிதான கிருபை நம் அனைவரையும் சூழ்ந்திருப்பதாக. 

We wish you a blessed and prosperous New Year 2010. May God bless you all.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.