Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

தேவாலயம் செல்வோம் -Devaalayam selvom


ஜனவரி மாதம் 17-ம் தேதி – ஞாயிற்று கிழமை
 தேவாலயம் செல்வோம் 

கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு,  உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி..பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். - (கொலேசேயர் 3:16,17).

ஒரு போதகர்,  தனது சபைக்கு எப்போதும் வரும் ஒருவர் தொடர்ந்து வராததை கண்டார். சில வாரங்கள் கழித்துஅவர் வராததால்அவரை காண சென்றார். அங்கு அந்த மனிதர்தனியாக நெருப்பு எரியும் இடத்திற்கு பக்கத்தில் அனலுக்காக அமர்ந்திருப்பதை கண்டார். ஆரம்பத்தில் அவரை குசலம் விசாரித்து விட்டுஅவர் பக்கத்தில் போய் அமர்ந்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

இருவரும் பேசாமல் அமர்ந்து இருந்தனர். அந்த போதகர் நெருப்பு எரிவதையே பார்த்து கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து,  அவர் ஒரு கரண்டியை எடுத்துஎரிந்து கொண்டிருந்த ஒரு கரித்துண்டை எடுத்து தனியே வைத்தார். கனகனவென்று எரிந்து கொண்டிருந்த அந்த கரித்துண்டு சற்று நேரம் ஆனவுடன்,  சாம்பல் பூத்து போய்அப்படியே அடங்கி அணைந்து போனது.

பின்னர்,  அந்த போதகர் 'சரி நான் போக வேண்டும்என்று சொல்லி எழுந்தார். போவதற்கு முன்மீண்டும் அந்த கரித்துண்டை எடுத்துநெருப்பில் போட்டார். உடனே அது பற்றி கொண்டு எரிய ஆரம்பித்தது. இதை கவனித்து கொண்டிருந்த அந்த மனிதர், ' போதகர் ஐயா அவர்களே,  உங்களுடைய அமைதியான இந்த செய்திக்காக நன்றி! நான் அடுத்த வாரம் உங்களை ஆலயத்தில் பார்க்கிறேன்என்று கூறினார்.

ஆம் பிரியமானவர்களே! ஆலயத்திற்கு செல்வது மிகவும் முக்கியமானது. நாம் கர்த்தருக்குள் அனலாயிருப்பதற்கு அது உதவும். தனியாக இருக்கும் யாரும் எழும்பி பிரகாசித்து விட முடியாது,  'ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்ளூ அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்ளூ ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோஅவனைத் தூக்கிவிடத் துணையில்லையே' -  (பிரசங்கி 4:9:10) என்று வேதம் கூறுகிறது.

ஆலயத்திற்கு செல்லும்போது,  கர்த்தர் அவருடைய வீட்டின் நன்மையினால் நம்மை திருப்தியாக்குகிறார். கர்த்தர் அங்கு நம்மை ஆசீர்வதிக்கிறார். நம்மை விசாரிக்க ஆத்துமாக்களை தருகிறார். நமக்காக,  நம் குடும்பத்திற்காக,  நமது தேவைகளுக்காக ஜெபிக்க ஒரு கூட்ட மக்களை நமக்கென்று ஆயத்தப்படுத்துகிறார். அன்போடும் கரிசனையோடும் நம்மை ஆதரிக்க ஆத்துமாக்களை தேவன் தருகிறார்.

ஆலயத்திலிருந்து நாம் நம் தாலந்துகளை கர்த்தருக்கென்று உபயோகிக்க தேவன் கிருபை செய்கிறார். அழிந்து போகிற ஆத்துமாக்களுக்காக திறப்பில் நின்று ஜெபிக்கிறவர்களாக நம்மை மாற்றுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக வேத வசனங்களின் பொக்கிஷங்களை நமக்கு வெளிப்படுத்துகிறார். வேதவசனத்தின் ஆகாரத்தினால் நம் ஆத்துமாக்கள் திருப்தியாகும்படி தேவன் கிருபை செய்கிறார்.

தேவாதி தேவனை ஆராதிக்க அவருடைய வீடாகிய தேவாலயத்திற்கு  நாம் செல்ல வேண்டும். அங்கு நாம் கூடி ஆராதிக்கும்போது தேவ பிரசன்னம் நம்மை நிரப்பும். எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு இயேசுகிறிஸ்துவே மேலான தலையாக இருந்து நம்மை எல்லாவற்றிலும் நிறைவாக நடத்துவார்.

இவைகளை பெற்று அனுபவிக்காதபடி சோம்பலாய் யாரும் வீட்டில் இருக்ககூடாது. 'ஒரு நாள்தான் எனக்கு விடுமுறை,  அதில் நான் சற்று ஓய்வெடுக்க வேண்டும்'  என்று கூறிக்கொண்டு யாரும் சபை நடக்கும் நேரத்தில் உறங்கி கொண்டிருக்க கூடாது. தேவனின் ஆசீர்வாதங்களை நாம் இழக்க நேரிடும்கூடுமானவரை சபையின் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளவேண்டும்.

இரும்பு திரையாக சுவிசேஷம் செல்லாத அநேக நாடுகளில் அவர்களுக்கு தொழுது கொள்ள ஆலயம் கூட கிடையாது. சத்தமாய் அவரை ஆராதிக்க முடியாது. ஆனால் எல்லா வசதிகளும் இருந்தும் சபைக்கு செல்லாதிருக்கிறவர்கள் உண்டு. ஆலயத்திற்கு செல்வோம். ஆசீர்வதங்களை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

செல்வோம் வாருங்கள் அப்பா வீட்டிற்கு
தேவ ஆலயத்திற்கு
போதிப்பார் தம் வழிகளை
நாமும் நடப்போம் அவர் பாதைகளில்
செல்வோம் வாருங்கள் அப்பா வீட்டிற்கு
தேவ ஆலயத்திற்கு

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனேஉம்மை துதிக்கிறோம். உம்முடைய வீட்டிற்கு வந்து நீர் தரும் நன்மைகளால் திருப்தி அடையும்படி செய்கிறீரே உமக்கு  நன்றி. ஆலயத்திற்கு செல்லாமல் யாராவது இருப்பார்களானால்அவர்களும் வந்து உம்முடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. ஆலயத்திற்கு வருவதினால் உண்டாகும் நன்மைகளை,  கிருபைகளை பெற்று கொள்ள உதவி செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.