Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Wednesday, March 14, 2012

ஆயத்தமா? ஆயத்தமா? -Aayatthamaa Aayatthamaa


We were unable to post our Friday's Manna due to the problem in Gmail.  Kindly pray for this ministry in your Prayers...
14th February 2010  - Sunday
பிப்ரவரி மாதம் 14-ம் தேதி – ஞாயிற்று கிழமை

ஆயத்தமா?  ஆயத்தமா?

அப்பொழுதுமனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது,  மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். - (மத்தேயு 24:30).

இயேசுகிறிஸ்து சீக்கரம் வரப்போகிறார் என்பது நாம் யாவரும் அறிந்த விஷயமே. நம்முடைய பிதாக்களின் காலத்திலிருந்தே, 'மேகமீதில் இயேசுராஜன் வேகம் வாராரே'  என்று பாடல்கள் பாடி அவருடைய வருகை சீக்கிரம் இருக்கும் என எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறோம். பவுல் அப்போஸ்தலன் தான் இருந்த காலத்திலேயே இயேசு வருவார் என்று நினைத்தார். அதனால்தான்  'பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோகமேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு,  இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் (1 தெசலோனிக்கேயர் 4:17) என எழுதினார். ஆனாலும் இயேசுகிறிஸ்துவின் வருகை இன்றளவில் நடைபெறவில்லை. இந்த கட்டுரையில் அவருடைய வருகையை குறித்த சில காரியங்களை காண்போம்.

இயேசுகிறிஸ்து தாம் பரமேறி செல்வதற்கு முன் கொடுத்த வாக்குதத்தத்தின்படியேயும்அவரை குறித்து எழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலாகவும் திரும்ப வரப்போகிறார். 'அப்பொழுதுமனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்என்று இயேசுகிறிஸ்து தம்முடைய வருகையைக் குறித்து வெளிப்படுத்தினார். வெளிப்படுத்தின விசேஷத்தில்  'பின்புபரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது,  அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன,  அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது'  (வெளி: 19:11-12) என்று அவருடைய இரண்டாம் வருகையை குறித்து எழுதியிருக்கிறதை காண்கிறோம்.

இயேசுகிறிஸ்து மரித்து,  உயிர்த்தெழுந்து,  பின்னர் பரமேறி சென்றதையும்  சீஷர்கள் 'பார்த்துக்கொண்டிருக்கையில்,  உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில்,  இதோவெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே,  நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்?  உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோஅப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் (அப்போஸ்தல நடபடிகள் 1:9-11). அவர் எப்படி போனாரோ அந்தப்படியே அவர் மீண்டும் வருவார். இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை வெளியரங்கமானமற்றும் அவர் இராஜாதி ராஜனாக1000 வருடம் இந்த உலகத்தை  நீதியோடும்,  நியாயத்தோடும் ஆட்சி செய்யப்போகிறவராக வரப்போகிறார்.

இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை அவருடைய இரகசிய வருகையோடு இணைத்து தவறாக எடுக்க கூடாது. அவருடைய இரகசிய வருகையில் அவர் தம்முடையவர்களை இரகசியமாக வந்துஇந்த பூமியிலிருந்து எடுத்து கொண்டு செல்வார் (1 தெசலோனிக்கேயர் 4:16-17,  1கொரிந்தியர் 15:51-52).

இயேசுகிறிஸ்து எப்போது வரப்போகிறார் என்பது யாரும் அறியாத விஷயம். அநேகர் இயேசு இப்போது வருவார் என்று அவர்களாக கணித்துஒரு நாளை குறிக்கிறார்கள். ஆனால் அவர்கள் கணித்த ஒரு நாளிலும் அவர் வரவில்லை. சமீபத்தில் ஒரு புகழ்பெற்ற ஊழியர் இயேசுகிறிஸ்து இந்த மாதத்தில் வரப்போகிறார்,  அப்படி இல்லாவிட்டால்,  வேறொரு மாதத்தை குறித்து எழுதி,  இந்த மாதம் கண்டிப்பாக வருவார் என்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவர் சொன்ன மாதமும் போய்அந்த வருடமும் முடிந்தது. ஆனால் இயேசுகிறிஸ்து வரவில்லை. வேதத்தில் சொல்லப்பட்டிராத காரியங்களை ஆராய்ந்து,  தவறாக நாட்களை குறிப்பதினால் எந்த பயனும் இல்லை. அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் (மத்தேயு 24:36) என்று இயேசுகிறிஸ்துவே கூறியிருக்கஇவர்களாக ஒரு நாளை கணக்கிட்டு சொல்வது தவறானதாகும்.

இயேசுகிறிஸ்துவின் வருகைக்கான வாக்குதத்தங்களும்தீர்க்கதரிசனங்களும் நிறைவேறி வருகின்றன. ஆகையால் நம்முடைய கடமை நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தமாக்க படவேண்டும் என்பதே. 'உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால்அவன் விழித்திருந்துதன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால்நீங்களும் ஆயத்தமாயிருங்கள்' (மத்தேயு 24:42-44) என்று இயேசுகிறிஸ்துவே கூறியிருக்கிறபடியால் நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தமாவோம். எப்படி ஆயத்தமாவது?  மனம்திரும்பிஞானஸ்நானம் எடுத்து,  இரட்சிக்கப்பட்டு,  ரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று,  கர்த்தருடைய பந்தியில் பங்கு பெற்றுபரிசுத்த ஜீவியத்தை செய்து,  அவருடைய வருகைக்கு காத்திருப்பதையே கர்த்தர் விரும்புகிறார்.

நீங்கள் அவருடைய வருகைக்கு ஆயத்தமா?  ஆயிரமாயிரமான மக்கள் ஆயத்தம்! ஆயிரமாயிரமான மக்கள் ஆயத்தமாயில்லை! அவருடைய வருகை இன்றும் இருக்கலாம்! நாளையும் இருக்கலாம்! ஒரு வருடம் கழிந்தும் இருக்கலாம். நீங்கள் ஆயத்தமாக வேண்டியது முக்கியம்!
ஆயத்தமா?
ஆயத்தமா? ஆயத்தமா?
இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா?
அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா?
அவர் வருகையை எதிர்பார்க்கும் மாந்தர்க்கு
அவர் வருகை மாபெரும் மகிழ்ச்சி!
அவர் வருகை எதிர்பாராத மாந்தர்க்கு
அவர் வருகை மாபெரும் அதிர்ச்சி!

ஜெபம்: அன்பின் பரலோக தந்தையேஇந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். இந்த நாளிலும் இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்து தியானிக்க நீர் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம். நாங்கள் ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகையில் காணப்பட கிருபை செய்யும். அவருடைய வருகைக்கு நாங்கள் ஆயத்தமாக்கப்பட எங்களுக்கு கிருபை செய்யும். ஆயத்தமாயிராத மக்கள் கைவிடப்படுவார்களேதகப்பனேஅந்திகிறிஸ்துவின் அந்த கொடிய காலத்திற்கு தப்பும்படியாக நீர் எங்களுக்கு இப்போது கொடுத்திருக்கும் கிருபையின் காலத்தில் இரட்சிக்கப்பட்டு உம்முடைய வருகைக்கு ஒவ்வொருவரும் ஆயத்தப்பட கிருபை செய்வீராக. நாங்கள் எதிர்பாராத நாழிகையிலே இயேசுகிறிஸ்து வர இருப்பதால்காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ள கிருபை செய்வீராக.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.