Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

ஆவியில் வளருங்கள் -Aaviyil valarungal


20th December 2009  - Sunday

டிசம்பர் மாதம் 20-ம் தேதி – ஞாயிற்று கிழமை

 ஆவியில் வளருங்கள் 

நீங்கள் வளரும்படிபுதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போலதிருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். - (1 பேதுரு 2:3).

ஒரு வயது நிரம்பிய ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில் ஒவ்வொருவரும் பரிசுகளை குழந்தைக்கு  வழங்கினர். பெரியவர் ஒருவர் ஒரு அழகான பொம்மையை பரிசாக கொடுத்தார். பொம்மையின் நிறமும்தலையை அசைத்து நடப்பதும் பிள்ளையை கவர்ந்திழுத்து விட்டது. குழந்தை பொம்மையுடன் மெய் மறந்து விளையாடியது. இதை பார்த்து கொண்டிருந்த ஒருவர் பக்கத்திலிருப்பவரிடம் கூறினார்,  'குழந்தை பொம்மையை வைத்து விளையாடுவதை பார்க்க எப்படியிருக்கிறது'.  மற்றவர் 'இதை விட மோட்சானந்தம் வேறென்ன இருக்கிறது'  என்றார். அவர் மீண்டும்  தொடர்ந்தார்,  'இந்த குழந்தை வளர்ந்து வாலிப வயதடையும்போது பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்'  என்று கேட்டார். அருகிலிருந்தவர்,  'ஐயோ அதை விட நரக வேதனை வேறு எதுவும் வேண்டாம்ஆள் வளர்ந்த மாதிரி அறிவு வளர வேண்டாமா?' என்றார்.

இதைப் போல தான் நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவில்லையென்றால் அது வேதனைக்குரிய காரியம். அநேக கிறிஸ்தவர்களுக்கு வயதாகிறது. ஆனால் அவர்கள் வளர்வதேயில்லை. நாம் ஆன்மீக வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும் என்பது தேவனுடைய எதிர்பார்ப்பு.

நாம் சிறுபிள்ளையாய் இருந்தபோது தூங்கி விழித்தவுடன் படுக்கையினருகில்  முழங்கால் படியிட்டு 'தேவனே இந்த நாளை எனக்கு ஆசீர்வதியும். நான் நல்ல பிள்ளையாய் நடந்து கொள்ள உதவும். நன்றாக படிக்க அருள் புரியும். ஆமென்'  என்று ஒரு நிமிடம் ஜெபம் செய்திருப்போம். அப்போது அது ஆண்டவரின் பார்வையில் விலையேற பெற்றதாக இருந்திருக்கும். தேவன் அந்த ஜெபத்தில் மகிழ்ந்திருப்பார். ஆனால் ஆண்டுகள் பல உருண்டோடியும் அதே ஒரு நிமிட ஜெபத்தை நீங்கள் செய்தால் அதில் தேவன் எப்படி பிரியப்படுவார்?   இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் காலையில் ஒரு நிமிடம் கண்மூடி ஜெபிப்பதில் திருப்தி அடைகின்றனர்.

உங்கள் பிள்ளை ஒரு வயதில் அம்மாஅப்பா என்று சொன்னபோது மகிழ்ச்சியடைந்த நீங்கள் அவன் பத்து வயது நிரம்பியும் அம்மா அப்பா என்று மட்டுமே சொன்னால் நீங்கள் அவனது குரலில் பூரிப்படைவீர்களா?  இல்லையே.

பிரியமானவர்களேஉங்கள் ஜெப நேரத்தையும்,  வேத வாசிப்பையும் அதிகரியுங்கள். வேதத்தை  ஆராய்ந்து பாருங்கள். ஆவியின் வரங்களுக்காக ஊக்கமாய் ஜெபியுங்கள். பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை நாடுங்கள். இயேசுவைப் போல வாழ பிரயாசப்படுங்கள். பிறரது ஊழியத்தை நாடின நீங்கள் இனி பிறருக்கு ஊழியம் செய்யுங்கள். இவ்வாறு நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் உயர்ந்தால் உங்கள்  கிறிஸ்தவ பயணத்தில் சரியாய் பயணிக்கிறீர்கள் என்று அர்த்தம். தகப்பனாகிய தேவன் நீங்கள் நாளுக்கு நாள் வளர்வதை கண்டு மகிழ்வார்.

   ஆவியில் நடக்கணுமே
   தேவ வார்த்தையில் நிலைக்கணுமே
   தூய ஆவியே என்னை நடத்திடுமே
   தேவ ஆவியே என்னில் நிலைத்திடுமே

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனேஉம்மை துதிக்கிறோம். நாங்கள் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ந்து கனிகொடுக்க தக்கதாககிருபை செய்யும். இன்னும் அதிக நேரம் ஜெபத்தில் தரித்திருக்கவும் களங்கமில்லாத ஞானப்பாலாகிய வேத வசனத்தின் மீது பிரியமாயிருக்கவும் வசனத்தை தியானிக்கவும் கிருபை செய்யும். நாங்கள் இனி குழந்தைகளை போல இல்லாமல்ஆவியில் வளர்ந்து வர எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.  கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.