Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Friday, March 2, 2012

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே -Aaviyaana engal anbu deivame Lyrics


ஆவியான எங்கள் அன்பு தெய்வமே

ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே(ரோம 8:11)
 
     ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
     அன்பினால் இன்று அலங்கரியும்.....
 
/heart1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
    துதிக்கத் தூண்டும் துணையாளரே
    சாத்தானின் சகல தந்திரங்களை (2 கொரி 2:11)
    தகர்த்தெறிய வாரும் ஐயா ஆட்கொண்டு (எபே 6:11)
 
/heart2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
    உயிர் பெறச் செய்பவரே (ரோம 8:11)
    சரீரங்களின் தீய செயல்களையே
    சாகடிக்க வாருமையா (ரோம 8:13)
 
/heart3. பெலன் இல்லாத நேரங்களில் 
    உதவிடும் துணையாளரே
    சொல்லொண்ணா பெருமூச்சோடு
    ஜெபித்திட வாருமையா (ரோம 8:26)
 
/heart4. மனதை புதிதாக்கும் மன்னவனே
    மறுரூபமாக்குமையா (ரோம 12:2)
    ராஜாவின் இரண்டாம் வருகைக்காக‌
    எந்நாளும் ஏங்கச் செய்யு இயேசு (யாக் 5:8)
 
/heart5. தேவாதி தேவனின் ஆழங்களை
    ஆராய்ந்து அறிபவரே
    அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி 
    எப்போதும் நடத்தும் ஐயா (1கொரி 2:10)
 
/heart6. பாவம் நீதி, நியாயத்தீர்ப்பை
    கண்டித்து உணர்த்தும் ஐயா (யோவா 16:8)
    பரிபூரண உம் சத்தியத்திற்குள்
    பக்தர்களை நடத்தும் ஐயா   
 
/heart7. அன்பு, மகிழ்ச்சி, சமாதானம்
    நீடிய பொறுமை, தயவு
    விசுவாசம், நற்குணம், சாந்தம்
    இச்சையடக்கம் தாருமையா (கலா 5:22,23)

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.