Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Monday, March 12, 2012

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் -Aaraathipen nan aarathipen -How to worship?


07th  December 2009  - Monday

டிசம்பர் மாதம் 07-ம் தேதி – திங்கள் கிழமை

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

கர்த்தரை துதியுடன் பாடி கொண்டாடுங்கள். நம்முடைய தேவனை சுரமண்டலத்தால் கீர்த்தனம் பணணுங்கள். - (சங்கீதம் 147:7).  

'தேவன் ஆவியாயிருக்கிறார். அவரை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுது கொள்ள வேண்டும்' (யோவான் 4:24)  என்று இயேசுகிறிஸ்து கூறியதாக பார்க்கிறோம். பரிசுத்த அலங்காரத்தோடே அவரை தொழுது கொள்ள வேண்டும் என்று வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. 

இந்நாட்களில் முன்பு என்றும் இல்லாத அளவில் ஆராதனையை குறித்து சபைகளில் போதிக்கப்படுகிறது. அநேக சபைகளில் துதியும் ஆராதனையும் நடைபெறுகின்றன. கர்த்தர் நம்மை ஏற்படுத்தியதின் முக்கிய நோக்கங்களில் ஒன்று அவரை ஆராதிப்பது. 'இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள்என ஏசாயா 43:21ல் வாசிக்கிறோம். பரலோகத்திலும் நாம் செய்ய இருக்கும் முக்கிய காரியம் தேவனை ஆராதிப்பதே. 

இந்த ஆராதனை என்ற பதத்திற்கு எபிரேய மொழியில் உள்ள வார்த்தை பிராஸ்கினியோ  என்பதாகும். அதற்கு அர்த்தம் கொடுப்பது'  என்பதாகும்.  என்ன கொடுப்பது தேவன் நமக்கு பாராட்டியிருக்கிற கிருபைகள் ஏராளம் ஏராளமாகும்அதற்கு பதிலாக அவர் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது,  நமக்கிருக்கிற சிறந்ததை அவருக்கு கொடுப்பதே.  நம் இருதயத்தின் ஆழத்திலிருந்த வருகிற துதியும் ஆராதனையுமே நாம் அவருக்கு கொடுக்க முடியும். நம்மையும் நம் இருதயத்தையும் அவருக்கு ஒப்புக் கொடுத்து துதிப்பதையே அவர் விரும்புகிறார். துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது என்று நீதிமொழிகள் 21:27ல் பார்க்கிறோம். சுத்த இருதயத்திலிருந்து வரும் துதி ஸ்தோத்திரங்களையே தேவன் விரும்புகிறார்.    
   
ஒரு நல்ல ஜெப வீரன் ஜெபிக்கும்போது கர்த்தரிடத்திலிருந்து நல்ல பதிலை பெற்றுக் கொள்கிறான். ஒரு நல்ல பிரசங்கம் செய்பவர்கர்த்தரிடத்திலிருந்து ஒரு நல்ல செய்தியை கொண்டு வருகிறார்ஆனால் துதிப்பவனோ,  தேவனுடைய பிரசன்னத்தையே தன் மத்தியில் கொண்டு வருகிறான். தேவ பிரசன்னம் வரும்போதுஅங்கு நம்மை தேவன் ஆசீர்வதிக்கிறார். அநேகர் ஆராதனை வேளையில்தான் ஜெபிப்பார்கள். தேவனே எனக்கு அது செய்யும்இதை செய்யும் என்று. அது அல்ல ஆராதனைஆராதனை வேளையில்தேவனே நீர் பெரியவர்நீர் வல்லவர்நீர் பரிசுத்தர் என்று அவருடைய மகத்துவங்களையும் குணாதிசயங்ளையும் புகழ்வதே துதியாகும்தேவன் செய்த நன்மைகளை சொல்லி துதிப்பது நன்றி பலியாகும். நம்முடைய ஆராதனை வேளையில் தேவனை துதிக்கவும் வேண்டும்நன்றி செலுத்தி துதிக்கவும் வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் நமது ஜெப விண்ணப்பங்களை ஏறெடுக்கக் கூடாது. ஜெப விண்ணப்ப பாடல்களை பாடவும் கூடாது. நம்மால் இயன்ற வரை அவருக்கு நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை உயர்த்தி அவரை துதித்து போற்ற வேண்டும்;.

நாம் மனம் திரும்பிஞானஸ்நானம் பெற்றுஇரட்சிக்கப்பட்டுபரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொண்டபின்பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே வாசம் பண்ணுகிறார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லைநம்மை கைவிடுவதுமில்லை என்று வாக்குதத்தம் பண்ணியிருக்கிறார். ஆகவே நாமாக அவரை துக்கப்படுத்தி அவரை தள்ளினாலொழிய ஆவியானவர் நமக்குள்ளேயே எப்போதும் வாசம் பண்ணுகிறவராயிருக்கிறார். அப்படியிருக்கும்போது ஒவ்வொரு முறையும்நாம் சபையாக கூடி வரும்போது,  இறங்கி வாரும் பரிசுத்த ஆவியானவரே என்று பாடும்போதுஆவியானவர் நமக்குள்ளே இல்லாததினால்நாம் அவரை வருந்தி அழைப்பதுப்போல விசுவாசமில்லாதவர்களாக நாம் பாடுகிறோம். ஆரம்ப நிலையிலுள்ள சபைகள் மட்டுமல்லாது நன்கு வளர்ந்த சபைகளும் இந்த மாதிரி பாடல்களை பாடி பரிசுத்த ஆவியானவரை வரவேற்கிறோம் என்று பலமாக கைகளை தட்டி வரவேற்கிறார்கள். ஆவியானவர் உங்களுக்குள்ளே இருக்கும்போது நீங்கள் ஏன் அவரை புதிதாக வந்தவரை வரவேற்பதுபோல் வரவேற்க வேண்டும்?

மட்டுமல்லசில நேரங்களில் பாடின ஒரு வரியை திரும்ப திரும்ப பாடிஅதுவும் வேகமாக பாடிஅப்போதுதான் ஆவியானவர் அவர்கள் மத்தியில் வருகிறார் என பலமாக கைளை தட்டி பாடுகிறோம். அந்த நேரம் மக்கள் பரவசம் அடைந்துஉணர்ச்சிகளின் உச்சக் கட்டத்திற்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது,  பரிசுத்த ஆவியானவர் பலமாக இறங்கி வந்தார் என்று சொல்லுகிறவர்களும் உண்டு. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளேயே இருக்கிறார் என்பதையே மறந்து விடுகிறோம். ஆனால் அதே நேரத்தில்கைகளை உயர்த்திஅல்லது இருதயத்தின் ஆழத்திலிருந்துதேவனேநீர் எத்தனை நல்லவர்இப்படியெல்லாம் வழிநடத்தினீரே என்று துதிக்கும்போதும்அந்நிய பாஷையில் அவரை துதிக்கும்போதும் மிகவும் சத்தமில்லாமல்அவரை ஆராதிக்கும்போது,  நம் கண்களில் கண்ணீர் வருவதை காண்பீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை துதிக்கும்படியாக அந்நிய பாஷைகளை கொடுத்துபிதாவோடுகூட உறவாட உதவிசெய்வார். ஆனால் அதே நேரத்தில் கைகளை தட்டி சத்தமாக அந்நிய பாஷைகளை பேசி ஆர்ப்பரிக்கும்போதுஆவியானவர் மெல்லிய குரலில் பேசும் சத்தம் நமக்கு கேட்காமலேயே போய் விடும் வாய்ப்பு உண்டு. நான் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்கும்அந்நிய பாஷைக்கும் எதிரி அல்ல. ஆனால் எல்லாம் ஒழுங்கின்படி நடக்க வேண்டும். நம் தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல்,  ஒழுங்கின் தேவனாயிருக்கிறார்.  

சிலர் அமைதியாக தொழுது கொள்வதால் பரிசுத்த ஆவியானவரின் கிரியை அவர்களிடம் இல்லை என்ற கருத்து தவறானது. கர்த்தரை தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ள வேண்டும் என்று வேதம் நமக்கு கூறுகிறது. வெளியே பரபரப்போடு நாம் தொழுது கொண்டுவிட்டு கருத்தோடும்உண்மையோடும் தொழுது கொள்ளாவிட்டால் நாம் தொழுது கொள்வதினால் எந்த பயனுமில்லை.  
   
கர்த்தரை ஆராதிப்போம்கருத்தோடு ஆராதிப்போம்.  உண்மையோடு ஆராதிப்போம். அவர் நாமம் மகிமைபடும்படியாக ஆராதிப்போம்நம்மையும் நமக்குள்ள யாவற்றையும் அவருக்கு  அர்ப்பணித்து அவரை ஆராதிப்போம். உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை ஆராதிப்போம். தேவன் நம்மை ஏற்படுத்தியதன் நோக்கத்தை நிறைவேற்றுவோம். ஆமென் அல்லேலூயா!

   ஆராதனை நாயகன் நீரே இயேசுவே
   ஆராதனை வேந்தனும் நீரே
   ஆயுள் முழுவதுமே
   உம்மை தொழுதிடுவேன்

ஜெபம்: எங்கள் ஆராதனைக்கும் துதிகளுக்கும் பாத்திரரான நல்ல தகப்பனேஉம்மை துதிக்கிறோம். ஆவியோடும் உண்மையோடும் உம்மை தொழுது கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். உள்ளத்தின் ஆழத்திலிருந்து உம்மை நேசித்து உம்மை ஆராதிக்க கிருபை செய்யும். உம்மை ஆராதிக்கும்படியாக எங்களை படைத்தீரேஅதை உணர்ந்து உண்மையாக உம்மை துதிக்கவும் ஆராதிக்கவும் கிருபை செய்யும்.  எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
  
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :

குறிப்பு :  
அன்பு நண்பர்களுக்குஇயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். மீண்டும் அனுதின மன்னா அனுப்புவதற்கு தடை ஏற்பட்டிருக்கிறது. புதிதாக திறந்த இணையதளத்திலிருந்தும் ஜீமெயில் நிறுவனம் (Gmail) இமெயில் அனுப்பத் தடை செய்துவிட்டார்கள். மீண்டும் புதிதாக ஜீமெயில் திறந்து அனுதின மன்னாவை அனுப்ப எங்களால் இயன்றதை செய்து வருகிறோம். உங்களில் யாருக்காவது Mass Mail அனுப்புவதற்கு உதவி செய்ய முடியும் என்றால் தயவு செய்து எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு அனுதின மன்னா வரவில்லை என்றால் இமெயிலில் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். தொடர்ந்து அனுதின மன்னா எந்த தடையும் இல்லாமல் வெளிவர ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தர்தாமே  உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. 
PS: If you are receiving this message by Mistake, Kindly let us know, we will remove your email Id from our mailing list.


No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.