Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, February 18, 2012

மாறாத கர்த்தரின் அழைப்பு -Maaratha kartharin Azhaippu


This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2012 ஜனவரி மாதம் 05-ம் தேதி - வியாழக் கிழமை
மாறாத கர்த்தரின் அழைப்பு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
.
குறிப்பு: அனுதின மன்னா குழுவினருக்கு புத்தாண்டு
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் எங்களது நன்றியை
தெரிவித்து கொள்கிறோம். கர்த்தர் தாமே உங்களை
ஆசீர்வதிப்பாராக.
நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. - (எரேமியா 1:7).
.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் 1270ஆம் ஆண்டு பாய்மரக்கப்பல் ஒன்று கடற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அநேகர் மாண்டனர். உயிர் தப்பிய ஒரு சிலரில் மரே என்ற குருவானவர் ஒருவரும் ஆவார். இதில் அவரது மனைவி, பிள்ளைகள் எல்லாரும் மரித்து விட்டார்கள். ஒரு புதிய தீவில் கரை சேர்ந்த அவரால் அந்த துயர சம்பவத்தை தாங்க முடியவில்லை. தான் அனாதை ஆவதற்கு ஆண்டவர்தான் காரணம் என்று ஆண்டவரை மறுதலித்து. அப்புதியத்தீவில் வாழ்நாளை கழிக்கவும், மனம் போல் வாழவும் தீர்மானித்தார்.
.
கலக்கம் நிறைந்தவராய் தெருவில் சென்றபோது ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் அவரை நோக்கி, ' உமக்காக காத்து கொண்டிருக்கிறேன்' என்றான். 'என்னை உமக்கு தெரியுமா' என்று கேட்டார் மரே. 'ஐயா, இயேசுவை பற்றி நான் சிறிது அறிந்து வைத்துள்ளேன். என் மனைவி வேத வசனங்களை வாசித்து எனக்கு சொல்லுவாள். எனது வீட்டில்தான் சபையாக கூடி ஆண்டவரை ஆராதிக்கிறோம். ஆனால் வேதத்தை பற்றி போதிக்கவோ, பிரசங்கிக்வோ எங்களில் யாரும் கிடையாது. ஆகையால் எங்களோடு நிலையாக தங்கி இருந்து ஊழியம் செய்யும் போதகரை தாரும் என நீண்ட நாட்களாக ஜெபித்து வந்தோம். நேற்றிரவு எங்கள் சபையில் ஒருவருடைய தரிசனத்தில், 'கப்பற் சேதத்தில் தப்பி பிழைக்கும் குருவானவர் ஒருவரை உங்களுக்கு ஊழியராக அனுப்பியுள்ளேன்' என இயேசுகிறிஸ்து வெளிப்டுத்தினார். அதே போன்று நீங்கள் வந்துள்ளீர்கள்' என்றான். இதை கேட்ட மரே அவர்கள் கர்தருடைய வழிநடத்துதலை அறிந்து அங்கேயே தங்கி பணி செய்தார். தனக்கு வந்த பாடுகள், பிரச்சனைகளின் காரணத்தை இந்த தேவமனிதரால் அந்த பாடுகளின் நேரத்தில் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவற்றின் மத்தியிலும் தேவன் அவரை அழைத்த அழைப்பில் உறுதியாயிருந்தார். ஏனெனில் 'தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே' - (ரோமர் 11:29). மனிதன்தான் கர்த்தர் தன்னை அழைத்ததை மறந்து அல்லது பாடுகள் போராட்டங்கள் வரும்போது அவரது அழைப்பை அசட்டை பண்ணி விடுகிறான். ஆனால் தேவன் நம்மை ஒருவிசை அழைத்தால் அந்த அழைப்பு என்றும் மாறாததே! அல்லேலூயா!
.
யோனாவின் சரித்திரத்தை பார்க்கும்போது, கர்த்தர் யோனாவை நினிவேக்கு போய் அங்கு பிரசங்கிக்கும்படி கூறுகிறார். யோனா நினிவேயில் வாழ்கிற மக்கள் மிகவும் மோசமானவர்கள், மனம்திரும்ப மாட்டார்கள், தன்னை கொன்று விடுவார்கள் என்று பயந்து, தர்ஷீசுக்கு போக தொடங்குகிறார். ஆனால் தேவனுடைய திட்டம் யோனாவை கொண்டுதான் நினிவேயை இரட்சிக்க வேண்டும் என்பதாயிருந்தது. ஆகவே யோனா தர்ஷீசுக்கு போக எத்தனித்தாலும், கடலில் புயலை வரவழைத்து, கடலில் தூக்கி எறியப்பட்டு, ஒரு மீனினால் விழுங்கப்பட்டு, அசாதாரணமான காரியங்களை செய்து, கர்த்தர் யோனாவை நினிவேக்கு கொண்டு வந்து, சுவிசேஷத்தை சொல்ல வைக்கிறார். ஆம், அவர் உங்களை கொண்டு செய்ய நினைத்திருக்கிற காரியத்தை உங்களை கொண்டுதான் செய்ய வைப்பார். அதில் மாற்றம் எதுவுமே இருக்காது. நாம் மாற்ற நினைத்தாலும், சர்வவல்லமையுள்ள தேவனின் திட்டத்தில் நாம் இருந்தால், அவருடைய சித்தம் மாத்திரமே நிறைவேறும்.
.
தேவ ராஜ்யத்தின் பணிக்கென ஏதாவதொரு விதத்தில் ஊழியம் செய்யும்படி தேவன் உங்களிடம் பலமுறை பேசியிருக்கலாம், ஆனால் நீங்கள் பல காரணங்களால் தேவ சித்தத்தை தவிர்த்து, தப்பவேண்டும் என்று நினைத்திருக்கலாம். ஆனால் தேவன் உங்களை தவிர்க்க போவதில்லை. உங்களை கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறாரோ அந்த காரியத்தை அவர் உங்களை கொண்டுதான் செய்யப்போகிறார்.
.
தேவாதி தேவனுடைய மாபெரும் கட்டளைக்கும் சித்தத்திற்கும் நம்மை அர்ப்பணித்து இந்த புதிய வருடத்தில் தேவன் நம்மை செய்ய சொல்லியிருக்கும் காரியத்தை செய்ய நம்மை ஒப்புக்கொடுப்போம். ஒருவேளை தள்ளி போட்டு கொண்டே இருந்தோமானால், யோனாவை போல மீனின் வயிற்றில் இருந்தபோது அவருக்கு ஞானோதயம் வந்தது போல் நம் வாழ்விலும் நம்மை அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிய வைக்க தேவன் சில காரியங்களை அனுமதிக்கலாம். அவருடைய சித்தத்திற்கு கீழ்ப்படிவோம். அவருடைய ஆசீர்வாதங்களை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!
.
உயிர் வாழும் நாட்களெல்லாம்
ஓடி ஓடி உழைத்திடுவேன்
அழைத்தீரே உம் சேவைக்கே
அதை நான் மறப்பேனோ
..
எஜமானனே என் இயேசு ராஜனே
எண்ணமெல்லாம் என் ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதானே
..

ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, அப்பா உமக்கென்று ஊழியம் செய்வது எங்களுக்கு கிடைத்த பாக்கியம் அல்லவா தகப்பனே, நீர் எங்களை அழைத்த அழைப்பும் கிருபை வரங்களும் என்றும் மாறாதவைகளாக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். யோனாவை போல உம்முடைய அழைப்பை விட்டு நாங்கள் போய் விடாதபடி, எங்களை காத்து கொள்ளும். நீர் எங்களை கொண்டு செய்ய நினைக்கிறதை செய்யும்படி எங்களை ஞானத்தினால் நிரப்பும். சரியானபடி செய்து முடிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் நேச தந்தையே எங்கள் ஜெப விண்ணப்பங்களை உம்முடைய சமுகத்தில் அர்ப்பணிக்கிறோம் ஐயா, சகோதரி ஹேனால் அவர்கள் குறிப்பிட்டிருக்கிற சகோதரனுக்காக ஜெபிக்கிறோம்தகப்பனே, சுயநலமாய், குடும்பத்தின் நலனை கருதாமல், குடியிலும் வெறியிலும் தன் காலத்தை கழித்து வருகிற அந்த சகோதரனை சந்திப்பீராக. தான் செய்கிறது தவறு என்று உணர கிருபை தாரும். எப்படியாகிலும் இரட்சிக்கப்பட கிருபை செய்யும். கர்த்தர் அந்த சகோதரனை தொடுவீராக.பாவ பழக்க வழக்கத்திலிருந்து வெளிவர கிருபை செய்யும். மனம் திரும்ப தருணங்களை கூட்டி தருவீராக.
..
துபாயில் ஒரு விபத்தினிமித்தம் சிறைபட்டு போன சகோதரி மேரிஆனின் கணவருக்காக நாங்கள் ஜெபித்திருக்கிறோம் தகப்பனே,இப்போது வரும் எட்டாம் தேதி நீதிமன்றத்தில் அந்த கேஸ் வருகிறபடியால், அந்த நீதிபதிகளின் கண்களில் தயவு கிடைத்து, அதிகமான அபராதத்தை விதிக்காதபடி, அந்த கேஸ் ஒன்றுமில்லாமற் போகும்படியாக செய்யும்படியாக ஜெபிக்கிறோம். இதில் யாருக்கும் எந்த விதமான நஷ்டமும் ஏற்படாதிருப்பதால், சகோதரியின் கணவருக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல், இந்த காரியத்திலிருந்து விடுபட்டு, உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்வீராக.
..
Agape Children Home kids and R P F Pastors களுக்காவும், பாஸ்டர் ஹரேத் பாபு அவர்களின் ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம் தகப்பனே, இந்த புதிய வருடத்தில் இந்த ஊழியங்களை விருத்தி அடைய செய்வீராக. உம்முடைய நாமத்திற்கு மகிமையாக இந்த ஊழியங்கள் விளங்க கிருபை செய்யும்.
..
சகோதரன் குஹேந்திரன் அவர்களுடைய திருமணத்தில் காணப்படும் பிரச்சனைகள் மாறுவதற்காக நாங்கள் ஜெபித்திருந்தோம். தேவரீர் அதை கேட்டு, எல்லா தடைகளையும் மாற்றி, அவருடைய திருமணம் நல்லமுறையில் நடந்தேற தேவன் கிருபை செய்தீரே உமக்கு ஸ்தோத்திரம். துபாயில் இருக்கும் அவருடன் அவருடைய மனைவியும் இணைந்து குடும்பமாக வாழவும், அவருடைய மனைவிக்கு ஏற்ற ஒரு நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம்.
..
சகோதரி மலர் அவர்களின் தகப்பனார் அந்தோணி அவர்கள் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தபடியால், அவரை இழந்து தவிக்கிற அவருடைய குடும்பத்திற்கு தேவன் தாமே ஆறுதலை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம். திக்கற்றவர்களுக்கு தேவரீர் தகப்பனாக இருக்கிறபடியால்,சகோதரியையும், மற்ற இரண்டு சகோதரிகளையும், தாயாரையும் தேவன் தாமே காத்து கொள்வீராக. சகோதரிக்கு ஒரு நல்ல வேலையை கொடுத்து, இருக்கிற கடன்கள் அடையும்படியாக கிருபை செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.