Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Loading...

Saturday, February 18, 2012

கர்த்தரின் ஆசீர்வாதம் -Kartharin Aaseervatham


This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2012 ஜனவரி மாதம் 04-ம் தேதி - புதன் கிழமை
கர்த்தரின் ஆசீர்வாதம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.
நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன். - (ஆகாய் 2:19).
.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் ஒவ்வொருவருக்கும் அனுதின மன்னா குழுவின் சார்பில் எங்களது அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். கர்த்தருடைய பெரிதான கிருபையால் நாம் இந்த புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்க தேவன் இரக்கம் பாராட்டி இருக்கிறார். நாம் நிற்பதும், நிர்மூலமாகாதிருப்பதும் அவருடைய சுத்த கிருபையே. அவருடைய இரக்கங்களுக்கு முடிவேயில்லை. ஆமென்.
.
இந்த புதிய வருடத்தின் வாக்குதத்தமாக தேவன் கொடுத்த அற்புதமான, ஆசீர்வாதமான வார்த்தை, 'நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்' என்பதே. ஒருவேளை நாம் கடந்த வருடத்தில் அநேக பாடுகளின் வழியாக, துன்பத்தின் வழியாக, சாபங்களின் வழியாக கடந்து வந்திருக்கலாம். அப்படி கஷ்டத்தின் வழியாக கடந்து வந்த நம்மைத்தான் கர்த்தர் நோக்கி, 'நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன்' என்று வாக்குதத்தம் செய்கிறார்.
.
'சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்' (சகரியா 8:13).ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நாம் ஒருவேளை மற்றவர்களுக்கு முன்பாக கடந்த வருடத்தில் சாபமாக, அவர்கள் நம்மை பழித்து கூறும்படியாக, அவர்களுக்கு முன்பாக நாம் ஒன்றுமில்லாதவர்களாக, பிரயோஜனமற்றவர்களாக இருந்திருப்போமானால், கர்த்தர் நாம் அப்படி இருந்த இடத்திலே நம்மை ஆசீர்வாதமாக இருக்கும்படி நம்மை உயர்த்த போகிறார். அல்லேலூயா! நம்முடைய சாபமான வாழ்க்கையை மாற்றி, அவர் நம்மை இந்த வருடத்தில் அநேகருக்கு ஆசீர்வாதமாக நம்முடைய வாழ்க்கையை மாற்றப்போகிறார்.
.
கர்த்தருடைய வாக்குதத்தங்கள் எல்லாம் ஆம் என்றும் ஆமென் என்றும் இருந்தாலும், அதாவது அவை அப்படியே நம் வாழ்வில் நடந்தேறும் என்றாலும், அவருடைய ஆசீர்வாதங்கள், வாக்குதத்தங்கள் அனைத்துமே ஒரு நிபந்தனையோடேயே கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் எத்தனையோ ஊழியர்கள் கர்த்தர் உங்களை இவ்விதமாய் ஆசீர்வதிப்பார் என்று எத்தனை எத்தனை ஆசீர்வாதங்களை கூறினாலும், கர்த்தருடைய வார்த்தையின்படி நாம் செய்யாத பட்சத்தில் எந்த ஆசீர்வாதமும் நம்மிடம் நிலைக்காது. வேதம் கூறுகிறது, உபாகமம் 28:1ல் 'இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்' என்றும், இன்னும் பல ஆசீர்வாதங்கள் அந்த அதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது. அவை எப்போது நமக்கு கொடுக்கப்படும் என்றால் அவருடைய கட்டளையின்படி நாம் செய்ய கவனமாயிருக்கும்போது மாத்திரமே.
.
இஸ்ரவேலர் பாபிலோனியரால் சிறைபிடிக்கப்பட்டு, பின் தங்கள் சிறையிருப்பில் இருந்து மீண்டும் தங்கள் நாட்டில் வந்து சேர்ந்தபோது, அவர்கள் தேவனுடைய ஆலயத்தை கட்ட ஆரம்பிக்கிறார்கள். அப்படி அவர்கள் கட்ட ஆரம்பிக்கும்போது, அநேக தடைகள் வர ஆரம்பிக்கின்றன. அதை கண்ட அவர்கள் ஆலயத்தை கட்டுவதை நிறுத்திவிட்டு, அதை குறித்து அவர்கள் மறந்து போகிறார்கள். ஏறக்குறைய பதினாறு ஆண்டுகள், கர்த்தருடைய ஆலயம் கட்டப்படுவதை அவர்கள் மறந்து, அதை குறித்து கவலையற்றவர்களாக இருக்கும்போது, தேவன் ஆகாய் தீர்க்கதரிசியின் மூலம் பேச ஆரம்பிக்கிறார். அவர்கள் தேவனுடைய ஆலயத்தை கட்டுவதை குறித்து கவலையற்றவர்களாக இருக்கும்போது, தேவனும் அவர்களை ஆசீர்வதிப்பதை நிறுத்தி விடுகிறார். 'நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' என்று ஆகாய் தீர்க்கதரிசியின் மூலம் கர்த்தர் பேசினபோது, அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் ஆலயத்தை கட்டுவதை குறித்து சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் அப்படி முயற்சி செய்ய ஆரம்பித்தபோது, கர்த்தரும் அவர்களை ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார். 'களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார்' (ஆகாய் 2:19). ஆம் இத்தனை நாள் திராட்ச செடியும், அத்திமரமும், மாதளஞ்செடியும், ஒலிவமரமும் கனி கொடுக்காமற் போனாலும், நீங்கள் உங்கள் வழிகளை சிந்தித்து பார்த்து கர்த்தருடைய ஆலயத்தை கட்டுவதை குறித்து தீர்மானித்து அதற்கான அஸ்திபாரத்தையும் போட்டு ஆரம்பித்து விட்டபடியால் நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் கூறினார்.
.
பிரியமானவர்களே, புதிய ஏற்பாட்டு காலத்தில் நாமே தேவ ஆலயமாயிருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. 'நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?' (1 கொரிந்தியர் 3:16)என்று வேதம் கூறுகிறது. அப்படி தேவனுடைய ஆவியானவர் வாசம் செய்கிற தேவனுடைய ஆலயமாயிருக்கிற நம்முடைய உள்ளத்தில், சரீரத்தில் நாம் பாவத்தை வைத்து கொண்டிருந்தால் தேவன் நம்மை ஆசீர்வதிப்பதெப்படி? நாம் அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும் செய்ய மறந்து, நம் மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தால், தேவன் நம்மை ஆசீர்வதிப்பதெப்படி? இஸ்ரவேலர் 16 ஆண்டுகள் தேவனுடைய ஆலயத்தை குறித்து மறந்து ஜீவித்தபடியால் அவர்களை தேவன் சிறுகப்பண்ணினார். ஆனால் எப்போது அவர்கள் தங்கள் வழிகளை சிந்தித்து பார்த்து, கர்த்தரிடம் திரும்பினார்களோ, அன்றிலிருந்து தேவன் அவர்களை ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். நாமும் கூட நம் பாவ வழிகளை விட்டு, நம் தேவனிடம் திரும்பும்போது, தேவனும் நம்மை பார்த்து, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!
.
மட்டுமல்ல, கர்த்தருடைய ஆலயத்திற்காக நாம் வைராக்கியம் பாராட்டும்போது, கர்த்தரும் நமக்காக, நம்மை ஆசீர்வதிக்கும்படியாக வைராக்கியம் கொள்வார். ஆனால், தேவனுடைய சபையை குறித்து நாம் அலட்சியமாக இருந்தோமானால், அவருடைய பரிசுத்த சபையை கெடுக்கும் காரியங்களில் நாம் ஈடுபட்டால், தேவ ஆசீர்வாதத்திற்கு பதிலாக ஒருவேளை அவருடைய சாபத்திற்கு நாம் ஆளாகலாம். ஆகவே அவருடைய ஆலயத்தை குறித்த ஒரு பாரம், ஒரு வைராக்கியம் நம் உள்ளத்தில் எப்போதும் இருக்கட்டும். அதை காண்கிற தேவன் நம்மை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார்.
.
தேவனுடைய ஆசீர்வாதத்தை பெற்று கொள்கிறபடி நம்முடைய சரீரமாகிய தேவனுடைய ஆலயத்தை நாம் பரிசுத்தமாய் காத்து கொள்வோமாக. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்ளூ அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். - (நீதிமொழிகள் 10:22) என்ற வார்த்தையின்படி வேதனையில்லாத ஆசீர்வாதத்தை தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தருவாராக. ஆமென் அல்லேலூயா!
.
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா கிருபையால் நிறைத்திடுவேன்
கர்த்தரின் குரலுக்கு கவனமாக செவி கொடுத்து
பார்வைக்கு நல்லதையே நீ செய்து வாழ்ந்துவந்தால்
சொன்னதை செய்திடுவேன் உன்னை கைவிடவே மாட்டேன்
.



ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கடந்த வருடம் முழுவதும் எங்களை கண்ணின் மணிபோல காத்து வந்த உமது மட்டில்லாத கிருபைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் தகப்பனே. எங்கள் தேவைகளை சந்தித்தீர், ஆறுதலை கொடுத்தீர், கைவிடாமல் நடத்தி வந்தீர் உமக்கு நன்றி ஐயா. இந்த நாளிலும் நீர் எங்களுக்கு கொடுத்த நல்ல வாக்குதத்தத்திற்காக உமக்கு நன்றி தகப்பனே. இந்த வாக்குதத்தம் எங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் நிறைவேறட்டும் ஐயா. இந்த ஆசீர்வாதத்தை நாங்கள் பெறும்படி தேவனுடைய ஆலயமாகிய எங்கள் சரீரத்தை பரிசுத்தமாக காத்து கொள்ள கிருபை செய்யும். தேவனுடைய வீட்டை குறித்ததான வைராக்கியம் எங்களில் காணப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு
pray1another
எங்கள் அன்பின் நேச தகப்பனே, இந்த வேளையிலும் அனுதின மன்னா வாசகர்கள் எந்த நாடுகளில் இருந்தாலும், அவர்கள் இருக்கும் இடங்களில் அவர்களை ஆசீர்வதிப்பீராக. அவர்கள் நிமித்தம் அவர்கள் இருக்கும் நாடுகள் ஆசீர்வதிக்கப்படுவதாக. அவர்களின் தேவைகளை சந்தியும், அவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் தேவன் அளவில்லாமல் ஆசீர்வதிப்பீராக. அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் முன்னேறி, அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க தேவன் கிருபை செய்வீராக. அவர்களுடைய பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்களாக. பிள்ளைகளின் சமாதானம் பெரிதாயிருக்கட்டும் தகப்பனே. திருமணமாகாத சகோதர சகோதரிகளுக்கு இந்த வருடத்தில் ஏற்ற துணையை கொடுத்து ஆசீர்வதியும். பிள்ளையில்லாத குடும்பங்களுக்கு அருமையான குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதியும். அவர்களுடைய வேலையிடங்களில் அவர்களை ஆசீர்வதிப்பீராக. மேலதிகாரிகளின் கண்களில் தயவு கிடைக்க கிருபை செய்யும். படிப்பிற்கேற்ற வேலையில்லாதவர்களுக்கு ஏற்ற வேலைகளை கொடுத்து ஆசீர்வதியும். இந்த 2012-ம் ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமான வருடமாக இருக்க ஜெபிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டதற்காக உமக்கு நன்றி. எங்கள் ஜெபங்களை துதி ஸ்தோத்திரங்களுடன் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டி கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும். 
Our Site: www.AnudhinaManna.net 
Contact Us at: anudhinamanna@gmail.com 
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

No comments:

Post a Comment

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.