Welcome

Dear Friends,In this blog you can find the collections of English Christian Devotional Songs Lyrics, Malayalam Christian Devotional Songs Lyrics and Tamil Christian Devotional Songs as well as Christian Wallpapers .Also I have posted some of the messages for Daily worship which I had collected from different websites.You can find the source of the posts behind each posts.Also now find the You tube videos for the related posts below...

அன்பு நண்பர்களே,இந்த ப்ளாக்'ல் தமிழ் கீர்த்தனைகள்,தமிழ் கிறிஸ்தவ

பாடல்கள், மலையாளம் கிறிஸ்தவ பாடல்கள்,ஆங்கில கிறிஸ்தவ பாடல்கள்,

கிறிஸ்து பிறப்புபாடல்கள், திருமண ஆராதனை பாடல்கள், புனிதவெள்ளி பாடல்கள்

ஆகியவற்றை தொகுத்துவெளியிட்டுளேன்.மேலும் அன்றாடம் நாம் வாசித்து பிரார்த்தனை

செய்யத்தக்க தெய்வ செய்திகளையும் பல்வேறுதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அத்தளங்களின் முகவரியை அந்தந்த பதிவின் கீழேகாணலாம்.

There was an error in this gadget

Search This Blog

Friday, November 25, 2011

சாலேமின் ராசா, சங்கையின் ராசா -Saalemin raasa sangaiyin raasa Lyrics

சாலேமின் ராசா, சங்கையின் ராசா
jesus-christ-pics-2201.jpg (294×374)
 சாலேமின் ராசா, சங்கையின் ராசா
ஸ்வாமி வாருமேன் - இந்த
தாரணி மீதினில் ஆளுகை செய்திட
சடுதி வாருமேன்

 சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போன
செல்வக் குமாரனே - இந்த
சீயோனின் மாதுகள் தேடித் திரிகின்ற
சேதி கேளீரோ?

 எட்டி எட்டி உம்மை அண்ணாந்து பார்த்துக்
கண் பூத்துப் போகுதே;- நீர்
சுட்டிக் காட்டிப் போன வாக்குத்தத்தம்
நிறைவேறலாகுதே

 நங்கை எருசலேம் பட்டினம் உம்மை
நாடித் தேடுதே ; - இந்த
நானிலத்திலுள்ள ஜீவ பிராணிகள்
தேடிவாடுதே

சாட்சியாக சுபவிசேஷம்
தாரணிமேவுதே; - உந்தன்
சாட்சிகளுடைய இரத்தங்களெல்லாம்
தாவிக்கூவுதே

உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்


உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
infant-jesus-born-15.jpg (250×195)

 உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள்

ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் - அவர்
ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்க
அவர் திரு நாமமே விளங்க - (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவே
அல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே

 நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்
மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்

 இயேசுவென்னும் நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்
ராஜாதிராஜன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்

 சகல கூட்டத்தார்களே சாஷ்டாங்கம் செய்யுங்கள்
மகத்துவ ராசரிவரே மாமுடி சூட்டுங்கள்

பெத்தலேகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி -Bethlehem oororam sathirathai thedi Lyricsபெத்தலேகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
infant-jesus-born-05.jpg (249×299)


 பெத்தலேகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தர் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி

 காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீலகன்னி கர்ப்பத்திலே ஆவியால் உற்பவித்து
பாலனான யேசு நமின் சொத்து

 வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகம் தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ
ஆன பழங்கந்தை என்ன பாடோ

அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி

 ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு

 இந்த்ரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்த்ரந் தூபம் போளம் வைத்து சுதனை பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே

ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு -Aa ambara umbaramum pugalthiru Lyrics


 அம்பர உம்பர மும் புகழுந்திரு

infant-jesus-born-13.jpg (396×368)

  அம்பர உம்பர மும் புகழுந்திரு
ஆதிபன் பிறந்தார் 
ஆதிபன் பிறந்தார் - அமலாதிபன் பிறந்தார்

 அன்பான பரனே அருள் மேவுங் காரணனே - நவ
அட்சய சச்சித ரட்சகனாகிய
உச்சித வரனே

 ஞானியர் தேட வானவர் பாட மிக
நன்னய உன்னத மன்னரும் ஏசையா
இன்னிலம் பிறந்தார்

வானம் பூமியோ பராபரன் -Vaanam poomiyo paraabaran Lyrics


வானம் பூமியோ பராபரன்
infant-jesus-born-03.jpg (225×251)

 வானம் பூமியோ பராபரன்
மானிடன் ஆனாரோ என்ன இது 
ஞானவான்களே நிதானவான்களே

 பொன்னகரத்தாளும் உன்னதமே நீளும்
பொறுமைக் கிருபாசனத்துரை
பூபதி வந்ததே அதிசயம் -  என்ன இது

 மந்தைக் காட்டிலே மாட்டுக் கொட்டிலிலே
கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி
நிந்தைப் பாவிகள் சொந்தக் கண் காட்சி -   என்ன இது

 வேறே பேரல்ல சுரர் விண்ணவர் யாருமல்லர்
மாறில்லாத ஈறில்லாத
வல்லமை தேவனே புல்லில் கிடக்கிறார் -  என்ன இது

 சீயோன் மாதே இனி கணம் தரியாதே
மாயமென்னவோ உனக்குச் சொல்லவோ
வந்தவர் மணவாளனல்லவோ -  என்ன இது

தங்கச்சுடரே வா எங்கள் உயிரே வா -Thanga sudare vaa engal uyire vaa Lyrics


தங்கச்சுடரே வா எங்கள் உயிரே வா
 தங்கச்சுடரே வா எங்கள் உயிரே வா
மரியின் மகனே வா மண்ணில் வாழவா

 பேரின்ப நாள் இந்த நாள் விண்ணிலே
இயேசு தெய்வம் வந்த நாள் மண்ணிலே

 பாலைவனப் பறவைகள் போல்
மக்கள் வாடி நிற்கும் வேளையிலே
ஒளியாக வந்தாய் வரம் கோடி தந்தாய்
விண் வார்த்தை நீயல்லவோ
அருள் வெள்ளம் சுரந்தோட பூபாளங்கள் முழங்கிடுதே

சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து -Samathaanam otthum yesu christu Lyricsசமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து


 சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து
இவர் தாம் இவர் தாம் இவர் தாம் இவர் தாம்

 நமதாதி பிதாவின் திருப் பாலரிவர்
அனுகூலரிவர் மனுவேலரிவர்

 நேய கிருபையின் ஓர் சேயர் இவர்
பரம ராயர் இவர் நம தாயரிவர்

 ஆதி நரர் செய்த தீதறவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்

 ஆரணம் பாடி விண்ணோர் ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே

 மெய்யாகவே மேசையாவுமே
நம்மை நாடினாரே கிருபை கூறினாரே

 அருளானந்த மோட்ச வழி காட்டினாரே
நிலை நாட்டினாரே முடி சூட்டினாரே

ஆதித் திருவார்த்தை திவ்விய -Aathi thiruvaarthai thivviya Lyrics


ஆதித் திருவார்த்தை திவ்விய


 ஆதித் திருவார்த்தை திவ்விய
அற்புத பாலனாகப்  பிறந்தார்
ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரையோரையீ டேற்றிட

 மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியடமுதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்
உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்
மின்னுஞ்சீர் வாசகர் மேனி நிறம் எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மை சொரூபனார் ரஞ்சிதனார்

தாம் தாம் தன்னர வன்னர
தீம் தீம் தீமை அகற்றிட
சங்கீர்த சங்கீர்த சங்கீர்த சந்தோ
ஷமென சோபனம் பாடவே
இங்கிர்த இங்கிர்த இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட

 ஆதாம் ஓதி ஏவினர் ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்

 பூலோகப் பாவ விமோசனர் பூரண கிருபையின் வாசனர்
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்

 அல்லேலுயா சங்கீர்த்தனம் ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்

அதிகாலையில் பாலனைத் தேடி -Athikaalaiyil baalaganai thedi Lyricsஅதிகாலையில் பாலனைத் தேடி

 அதிகாலையில் பாலனைத் தேடி

செல்வோம் நாம் யாவரும் கூடி-அந்தமாடடையும் குடில் நாடி

தேவபாலனைப் பணிந்திடப் பாடி

வாரீர் வாரீர் வாரீர் நாம் செல்வோம்

 அன்னை மரியின் மடி மேலே
மன்னன் மகவாகவே தோன்ற - விண்
பதூதர்கள் பாடல்கள் பாட
விரைவாக நாம் செல்வோம் கேட்க

 மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே - நம்
சிந்தை குளிர்ந்திட போற்றும்
நல்ல காட்சியைக் கண்டிடலாமே

 அன்பின் வடிவாய்ப் புவி மீதில்
அருளானந்தம் ஈந்திடவென்றே
தந்தைப் பரனின் திருமைந்தன்
தம்மைத் தாழ்த்திய விந்தையைப் பாடி

Disclaimer

அன்பு நிறைந்த ஆண்டவர் நாமத்தில்அனைவருக்கும் என் அன்பு வணக்கம்,

இத்தளத்தில் வெளியாகும் பதிவுகளை வியாபார நோக்குடனோ,விளம்பர நோக்குடனோ பயன்படுத்தி கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அரபு நாடுகள் மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் பகிரங்கமாக இறைவனை தேட முடியாத சூழல் உள்ளதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

அரபு நாடுகளில் மதம் தொடர்பான பல இணையதளங்களை முடக்கி வைத்திருப்பதால் ப்ளாக் தான் அவர்களை சென்றடைய எளிதான வழி என்று கருதி,இத்தளத்தை உருவாக்கி உள்ளேன்.

ஆகவே அவர்கள் பயன் பெறும் வகையிலேயே இத்தளத்தில் பல பதிவுகள்,பாடல்கள்,ஜெபங்கள்,ஸ்தோத்திர பலிகளை தொகுத்து வெளியிட்டுள்ளேன்.

தங்கள் ஜெபத்தில் இந்நாடுகளில் வாழும் நமது அன்பு சகோதர சகோதரிகளையும் நினைவு கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.